என்னது பிரகன்ட் வோமன் கூட பாக்கமா திட்டுரனா அவன நாளைக்கு வந்து ரெண்டு அரட்ட போடவா பயந்து அடங்கிடுவான் .வேணாம் வேணாம் இப்ப ஓரளவு நார்மலா இருக்கான் .சரி இருந்தாலும் நான் கேட்டு சொல்றேன் நீங்க வரர்துக்கு என்றாள் சுவாதி .
ம்ம் சரி கேளு .அது இருக்கட்டும் அது என்ன சைட் கேப்ல நான் என் புருஷன திட்டறத சொல்லி கிண்டல் அடிக்கிற ஏண்டி வில்லி என்று அஞ்சலி கேட்க ஆமா நீங்க போன்லே அண்ணன திட்டுனதா நான் எத்தன தடவ பாத்து இருக்கேன் .போன்லே அப்படின்னா நேர்ல அடிப்பிங்க போல என்று சுவாதி சிரித்து கொண்டே சொல்ல
அடியே 40 வயசுக்கு மேலதான் உங்க அண்ணன நான் திட்ட முடியுது .உன் வயசுல நானும் உங்க அண்ணனுக்கு நடுங்கி கிட்டு தான் இருந்தேன் .எல்லாம் எனக்கு குழந்தை பிறந்ததும் அவர் அடங்கிட்டாறு .நீ வேணா பாரு உன் குழந்தைய பாத்த உடனே உன் ஆளும் மாறிடுவான் என்று அஞ்சலி சொல்ல
இதே தான் பல முறை சொல்லிட்டிங்க போர் அடிக்குது என்றாள் சுவாதி .எத்தன தடவ சொன்னாலும் அதான் நடக்க போகுது என்று அஞ்சலி சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி அக்கா எனக்கு தீடிருன்னு புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு என்று சுவாதி சொல்ல ஒ அதுவா கண்சிவா இருக்கும் போது அப்படிதான் தோணும் வீட்ல மாங்கா இல்ல என்று அஞ்சலி கேட்க
இல்லக்கா ஆனா எனக்கு இப்ப சாப்பிட்டே ஆகணும் போல இருக்கே இங்க மாங்கா எங்க கிடைக்கும் என்றாள் சுவாதி .அது மார்கெட் போகணும் இந்நேரம் மார்கெட் போக முடியாது அதுனால் நீ பேசாம பக்கத்துல எங்கயாச்சும் மாங்கோ பிளவர் ஐஸ் கிரிம் வாங்கி சாப்பிடு என்றாள் அஞ்சலி
சரிக்கா நான் இப்பவே போறேன் என்றாள் சுவாதி .யே லூசு மணி 7 ஆச்சு இருட்டி இருக்கும் நீ போகாத அவன போ சொல்லு என்று அஞ்சலி சொன்னாள் .
அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .
அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,
விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள் .
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க…
சுவாதி அந்த இருட்டில் நடந்து கொண்டு இருந்தாள் , அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது என்ன 8 மணிக்கு எல்லாம் இந்த ஏரியா இப்படி இருக்கு ஐயோ குழந்தைய வேற வயித்துல வச்சுக்கிட்டு இன்னும் மெயின் ரோட்டுக்கு போணுமே ,
இதுக்குதான் மூத்தவாங்க பேச்ச கேக்கணும் போல அஞ்சலி அக்கா எவளவோ சொன்னங்க தனியா போகதான்னு கேட்டேனா இப்ப ஏதோ சூடு காட்டுக்கு நடுவுல நடக்கிற மாதிரி இருக்கே ,ஆமா அவங்க சொன்ன மாதிரி விக்கியே கூப்பிட்டானாப்புல சார் உடனே இதோ வந்துறேன் அப்படின்னு சொல்ல போறான் பாரு உடனே இம்சையே சனியனே திட்டுவான் வேற என்ன பண்ண போறான் அவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க அவள் ஒரு நிமிடம் பயந்தே போனாள் .ஹ இந்நேரம் எங்க போற என்று விக்கி காரை திறந்து கேட்க அப்பா நீதானா ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் என்றாள் .எதுக்கு பயந்த என் கார் உனக்கு அடையாளம் தெரியாதா என்றான் .இருட்டுல உன் கார் ப்ளூவா ப்ளாக்கான்னு அடையாளம் தெரியல என்றாள் .
ம்ம் இவளுக்கே இருட்டுல சரியா கண்ணு தெரியல அப்புறம் எப்படி அந்த கிழடுக்கு கார் கலரு தெரிஞ்சுருக்க போகுது என்று நினைத்து கொண்டு யே நீ என்ன இந்நேரம் எங்க போற என்றான் .ஒன்னும் இல்ல சும்மா கடை வரைக்கும் போறேன் என்றாள் .என்ன வேணும்னு சொல்லு நானே போயி வாங்கிட்டு வரேன் .அவன் அப்படி கேட்டதும் சுவாதிக்கு ஏதோ கனவு எதுவும் காண்கிரமோ என்று தோன்றியது .