என் காதலி Part 10 112

விக்கி அவன் இடத்திற்கு வந்த பின் அப்பா கொஞ்ச நேரத்துல மணி வயித்துல புளிய கரைசுட்டான் டேவிட்ம் சுவாதியும் போயி தொடர்புல இருக்காங்களாம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் ,

ஆமா இப்ப எதுக்கு அங்க மணி அப்படி சொன்னதும் ஒரு நிமிஷம் வருத்தப்பட்ட இப்ப அங்க போனது நீதான் தெரிஞ்ச உடனே சந்தோஷ படுற நீதானா அந்த குழந்தை வேணாம்னு நினச்சா உன்னோட குழந்தையா இருக்க கூடாதுன்னு நினைச்ச அத வயித்தல இருக்கும் போது கொல்லவும் நினச்ச இப்ப என்ன திடிர்னு அவ மேல சந்தேகமும் பாசமும் ஒண்ணா வருது அவ என்ன உன் லவ்வரா இல்ல பொண்டாட்டியா

என்று அவன் மனம் கேட்க விக்கிக்கு அப்போது தான் தோன்றியது நம்ம ஏன் இப்படி இருக்கணும் அவள மறக்கறது மட்டும் தான் நல்லது என்று நினைத்து கொண்டு வேலை பார்த்தான் .

அதே நேரம் வீட்டில் இருந்த சுவாதிக்கு அஞ்சலியிடம் இருந்து போன் வந்தது என்னடி பண்ற எப்படி இருக்க என்று கேட்க சொல்லுங்க அக்கா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று பதிலுக்கு கேட்க நான் நல்லாத்தான் இருக்கேன் சரி உன் குழந்தையோட அப்பன் மக்கியா விக்கியா அவன் எப்படி இருக்கான் என்று அஞ்சலி கேட்க சுவாதி கோபமாக அக்கா அவன் பேரு விக்கி அவன் ஒன்னும் குழந்தைக்கு அப்பன் இல்ல .

நான்தான் என் குழந்தைக்கு அப்பா அம்மா எல்லாம் நான்தான் என்றாள் கோபமாக .அடேங்கப்பா கோபத்த பாரு அதுல அவன் ரத்தமும் தான ஓடுது . நாளைக்கே அவன் மனம் திருந்தி குழந்தை எனக்கும் தான் சொந்தம் பாக்கனும்னா என்ன சொல்வ என்று அஞ்சலி கேட்க

யாரு விக்கியா சூரியன் தேக்க உதிச்சாலும் உதிக்கும் விக்கி திருந்த எல்லாம் மாட்டான் என்று சொல்லி சுவாதி சிரித்தாள் .ஏன் அவன் என்ன ரோபட்டா அப்படியே இருக்கிறதுக்கு இந்நேரம் ரெண்டு மாசம் அவன் உன் கூடவெ இருந்ததுக்கு உன்னையே லவ் பண்ணி இருக்கணுமே உன் கண்ண பாத்தே மயங்கி இருக்கணும் .என் ஆபிஸ்ல ஒருத்தன் ஒரு தடவ உன்னையே பாத்துட்டே .இன்னும் என்னையே உன் நம்பர் கேட்டு டார்ச்சர் கொடுக்குறான் .

பேசாம அந்த விக்கி திருந்தாட்டி சொல்லு இவன் நீ குழந்தையோட இருந்தா கூட எத்துக்கவன் போல அந்த அளவுக்கு உன் மேல பைத்தியம் பிடிச்சு போயி இருக்கான் என்ன சொல்ற என்று அஞ்சலி கேட்க

அட போங்க அக்கா எனக்கு எவனும் வேணாம் நான் என் குழந்தையும் மட்டும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருந்துகறோம் என்றாள் .ஏண்டி உனக்கு அப்ப ஆம்பிள துணையே வேணாமா என்று அஞ்சலி கேட்க எதுக்கு ஆம்பிள துணை என்று சுவாதி மறுபடி கேட்க ம்ம் ஒரு பாது காப்புக்கு ஒரு அன்புக்கு ஒரு அரவணைப்புக்கு இதுக்கு எல்லாம் வேணாமா உன் வாழ்க்கை என்று அஞ்சலி சொன்னாள் .

ஒ இதுக்குதான் ஆம்பிள துணை வேணுமா நீங்க சொல்றபடி பாத்தா இதலாம் எந்த ஆம்பிளக கிட்டயும் கிடைக்காது எனக்கு தெரிஞ்சு ஆம்பிலகன்னா ஒரு சுயநலவாதிக யாரையும் புரிஞ்சுக்க தெரியாதவங்கே அவங்களுக்கு அன்பு என்னன்னு தெரியாது அவங்களுக்கு தேவை செக்ஸ் மட்டும் தான் இல்லாட்டி பணம் எப்படி சம்பாதிக்கிரதுன்னு யோசிப்பங்கே அன்பு காட்டுறத பத்திலாம் யோசிக்க மாட்டேங்கே என்று சுவாதி கோபமாக சொல்லி கொண்டே போக

ஹ ஹ ஓகே கூல் கூல் நீ பாட்டுக்கு அடிக்கட்ட போற சரி நீ ரொம்ப குழப்பத்துல இருக்க உன் கிட்ட போன்ல பேசுனா புரிய வைக்க முடியாது நேர்ல பேசுனாதான் கரெக்ட்டா வரும் . நாளைக்கு உன் வீட்டுக்கு வரவா என்றாள் அஞ்சலி .

ஐயோ அவன் யாரும் வந்தா திட்டுவனே என்றாள் சுவாதி .அவன் என்ன உன் புருசனா திட்டறதுக்கு என்றாள் அஞ்சலி .. ஐயோ புருசனா ஆகி இருந்தா கூட நீங்க எப்படி உங்க புருசன திட்டிரிங்கலொ அப்படி திட்டி இருக்கலாம் அவன ஆனா அவன் தான் என்னையே எதுக்கு எடுத்தாலும் திட்டுறான் அவனுக்கு பயந்து பயந்து இருக்க வேண்டியாதா இருக்கு என்றாள் சுவாதி .