என் காதலி Part 10 106

சரி இதுக கிட்ட நார்மலா பேசுனா காரியம் நடக்காது ஒரு ஆக்டிங்க போடுவோம் என்று நினைத்து கொண்டு அழுவது போல நடித்தான் .அதை கேட்ட வள்ளி சிரிப்பதை நிறுத்தி விட்டு டேய் டேய் எதுக்குடா அழுகுர என்றாள் , இன்னைக்கு காலைல என் அக்கா வலைகாப்புக்கே போகலன்னு நான் உன் கிட்ட சொன்னேளே என்றான் .ஆமா என்றாள் ,எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்துருச்சு எங்க அக்கா இப்படிதான் உன்னையே மாதிரி மாசமா இருக்கும் போது மாங்கா கேட்டு நான் வாங்கி தரல அத நினச்சு எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு அதான் இப்ப அவ ஞாபகமா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று அழுதான் .

சரி சரி அழுத ஒரு நிமிஷம் ஏங்க எனக்கு மாங்கா எங்க வாங்குநிங்க என்றாள் வள்ளி .பின் மணி வாங்கி அவனுக்கு மாங்கா இருக்கும் கடையை சொன்னான் . அப்பா அழுத பொம்பிலக மனசு இறங்கிறலாக இப்பதான் தெரியுது டிவில ஏன் அழுகாச்சி சிரியலா எடுக்குரானுகன்னு என்று விக்கி நினைத்து கொண்டு சுவாதியை பார்த்து வா உன் மாங்கா கடை கிடைச்சு இருச்சு என்றான் .

பின் இருவரும் மணி சொன்ன கடைக்கு போனார்கள் அங்கு ஒரு வயதான பாட்டி எல்லா காய் கறிகளையும் எடுத்து வைத்து கடையை பூட்ட தயாராகி கொண்டு இருந்தது .இவன் போயி மாங்கா கேட்கவும் அது முடியாது முடியாது நேரம் ஆச்சு மாங்காலாம் இல்ல என்றது .உடனே அவன் கொஞ்ச தூரம் தள்ளி நின்ற சுவாதியை காண்பித்து என் பொண்டாட்டி மாசமா இருக்கா அவ மாங்கா சாப்பிட்டே ஆகணும் போல இருக்கு என்றதும் அந்த பாட்டி சிரித்து கொண்டே உன் பொண்டாட்டிய கிட்ட வர சொல்லு பாக்கணும் என்றது .

உடனே அவன் சுவாதியை கூப்பிட்டான் .அவள் கிட்ட வந்ததும் அந்த பாட்டி அவள் முகத்தை செல்லமாக தடவி என்னமோ சொல்ல சுவாதி டேய் இந்த பாட்டி என்னடா சொல்லுது ஹிந்தி மாறியே இல்லையே என்றாள் .அது பேசுறது மராத்தி நீ எத்தன மாசம்னு கேக்குது என்று விக்கி சொல்லவும் அவள் சிரித்து கொண்டே அஞ்சு விரல்களை காண்பித்தாள் .உடனே பாட்டி அவளை மீண்டும் செல்லமாக கொஞ்சி கொண்டே சொன்னது .இப்ப என்னடா சொல்லுது என்றாள் .

ம்ம் நீ நல்லபடியா பிள்ள பெருவியாம் என்றான் .பின் அந்த பாட்டி உள்ளே சென்று ஒரு அஞ்ச ஆறு மாங்காய்கலை கொண்டு வந்தது .அது கொண்டு வந்த உடனே சுவாதி பாட்டியிடம் இருந்து மாங்காய் ஒன்றை வேகமாக புடிங்கி கடித்து தின்ன ஆரம்பித்தாள் .நீங்க ஒன்னும் தப்பா எடுத்துகாதிங்க அவ அப்படித்தான் என்றான் .நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல நான் 7 குழந்தை பெத்தவ எனக்கு தெரியாதா அவளோட உணர்வு என்றது பாட்டி .பின் பாட்டியும் விக்கியும் பேசி கொண்டே இருந்தனர் .

சுவாதி அவர்கள் பேசுவதை கண்டு கொள்ளமால் மாங்காயை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .ம்ம்ம் ம்ம்ம் என்று உச்சி கொட்டி அவள் சாப்பிடுவதை பார்த்த விக்கி அவள் கிட்ட போயி யே லூசு சத்தம் போடாம சாப்பிடு நீ ம்ம்ம் சொல்ற சவுண்டு ஏதோ நீ செக்ஸ் வைக்கிற மாதிரி இருக்கு என்றான் .அங்கிட்டு போடா என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு கொண்டே இருந்தாள் ,சரி பாவத்த ஒன்னும் சொல்லதாப்பா எப்படி வேணும்னாலும் சாப்பிட்டு போகட்டும் என்றது .

பின் விக்கி பாட்டியிடம் மாங்கா காசை விட அதிகமாக கொடுக்க பாட்டி வேண்டாம் என்று சொல்லியது .விக்கி சிரித்து கொண்டே வலுகட்ட்யாமாக பாட்டி கையில் திணித்தான் பாட்டி அவன் முகத்தையும் தடவி கொஞ்சி விட்டு உன்னையே மாதிரியே உன் பொண்டாட்டிக்கு ஆம்பிள பிள்ள பிறக்கட்டும் ராசா என்றது .பின் சுவாதியையும் பார்த்து இரும்மா என்றது .பின் இருவரும் வாரோம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .

பின் காரிலும் சுவாதி மாங்காவை சத்தம் போட்டு கொண்டே சப்பி சப்பி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அவளை கண்ணாடியில் விக்கி சிரித்தாவரு ரசித்து கொண்டே வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் .இருவரும் வீட்டிற்கு போனார்கள் என்ன மேடம் நீங்க திருப்தியா என்றான் .

ரொம்ப தேங்க்ஸ் விக்கி நீ இவளவு தூரம் ஹெல்ப் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கலா உனக்கு எதாச்சும் நான் செஞ்சே ஆகனும் என்ன வேணும் சொல்லு என்றாள் .விக்கி சொல்ல வருவதற்கு முன் அவனை தடுத்து விட்டு தெரியும் நீ என்ன சொல்வேன்னு எப்ப வீட்ட விட்டு போவா அதானா என்கிட்ட கேக்க போற என்றாள் .

இல்ல என்றான் .அப்ப என்ன வேணும் என்றாள் ,

ஒரு கிஸ் தாடி எனக்கு …

தொடரும்….

உனக்கு என்ன வேணும் சொல்றா என்று சுவாதி கேக்கவும்

ஒரு கிஸ் தாடி..