கண்ணாமூச்சி 5 62

தங்கை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிலை போலவே உறைந்திருந்தாள் ஆதிரா.. எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருந்தாள் என்பது அவளுக்கே நினைவில்லாத மாதிரி..!! திடீரென இரண்டு வலுவான கரங்கள் அவளை பின்பக்கமாக இருந்து அணைத்துக் கொள்ள.. ஆரம்பத்தில் சற்று பதறிப்போய்தான் சுயநினைவுக்கு வந்தாள்.. உடலை ஒருமாதிரி முறுக்கி விழுக்கென்று துள்ளினாள்..!! அப்புறம்.. அணைத்துக் கொண்டவன் தனது கணவன்தான் என்பது புரிந்ததும்.. அப்படியே அடங்கிப் போனாள்..!! உதட்டில் ஒரு மெலிதான முறுவலுடன்.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாய் புதைந்து போனாள்..!!

சாப்பிடுவதற்கு முன்பு சிபியும் சிறு குளியல் போட்டிருந்தான்.. அவன் மேனியில் இருந்து கிளம்பிய சோப்பு வாசனை ஆதிராவின் நாசிக்குள் புகுந்தது..!! மனைவியின் காதுமடலை மூக்கால் உரசிய சிபி.. பிறகு அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முகர்ந்து முத்தமிட்டவாறே.. இதமான குரலில் கேட்டான்..!!

“என்னடா ஆச்சு..?? தண்ணிக்குள்ள விழுந்த ஷாக் இன்னும் போகலையா..??”

“அ..அதுலாம் ஒன்னுல்லத்தான்..!!”

“அப்புறம் ஏன் ஆத்தையே வெறிச்சு பாத்துட்டு இருக்க..??”

“இ..இல்ல.. சு..சும்மாதான்..!!”

“ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத ஆதிரா.. Try to be relaxed..!! கொஞ்சம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்..!!”

“ரெஸ்டா..??”

“ம்ம்.. ரெண்டு நாளா நைட்டு சரியாவே தூங்கலை நீ.. காலைல வேற சீக்கிரமே எழுந்துடுற.. கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எந்திரி..!! மைண்ட்க்கு ஃப்ரெஷா இருக்கும்..!!”

“நல்ல ஐடியாதான்.. ஆனா எனக்கு தூக்கம் வரலையே..??”

“தூக்கம் வரலையா..?? என்ன பண்ணலாம்..?? ம்ம்ம்ம்…” சிலவினாடிகள் யோசனையாக தாடையை சொறிந்த சிபி, பிறகு உதட்டில் ஒரு புன்னகையுடன் சொன்னான்.

“ஓகே.. நான் உன்னை தூங்க வைக்கட்டுமா..??”

“நீங்களா..?? எப்படி..??” ஆதிராவின் கண்களில் ஒரு ஆர்வ மின்னல்.

“வா.. சொல்றேன்..!!”

ஆதிராவின் கரங்களைப் பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்றான் சிபி.. அவளை அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்..!! மெத்தையில் சாய்வாக படுத்துக் கொண்டவன்.. மனைவியை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்..!! வெட்கமும் புன்முறுவலுமாய் அவள் இவனை ஏறிட..

“குட்டிப்பொண்ணுக்கு நான் தலைகோதிவிட்டு தட்டிக் குடுப்பேனாம்.. எந்தக்கவலையும் இல்லாம செல்லக்குட்டி என் நெஞ்சுல படுத்து தூங்குவாளாம்..!!”

காதலுடன் குறும்பை கலந்து சொன்னான்..!! ஆதிரா சிபியின் மார்பில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள்.. இமைகளை மெலிதாக மூடிக்கொண்டாள்..!! சிபி அவளது கூந்தலுக்குள் கைவிரல்களை கோர்த்து.. அங்குமிங்கும் அலைபாயவிட்டு.. இதமாக வருடிக் கொடுத்தான்..!! இன்னொரு கையால் அவளுடைய முதுகு சதைகளை மிருதுவாக மசாஜ் செய்து தட்டிக்கொடுத்தான்..!! அவ்வப்போது அவளது நெற்றியில் ‘இச்.. இச்.. இச்..’ என்று இதமான முத்தம் வேறு..!!

சிபியின் செய்கைகள் நிஜமாகவே ஆதிராவுக்கு மிகவும் சுகமாக இருந்தது.. அவனுடைய கைவிரல்களின் தடவல், அவளது மனதுக்குள் ஒரு அமைதி பரப்புவதை உணர்ந்தாள்.. அவனுடைய இதயத்துடிப்பின் ஓசை இவளது காதுக்குள் விழ, இவளது இதயத்துடிப்பு படபடப்பு நீங்கி சீரானது.. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பத்தில், அவளுக்கு அவசியமாயிருந்த ஒருவித பாதுகாப்பு கதகதப்பு கிடைத்தது..!!

2 Comments

  1. Very very suspence

Comments are closed.