கண்ணாமூச்சி 5 46

“இல்லத்தான்.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க.. தாமிராவை பத்தி நமக்கு தெரியாத ஏதாவது விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு..!! அவர்ட்ட பேசினா ஏதாவது மேட்டர் கெடைக்கும்னு நெனைக்கிறேன்..!!”

ஆதிரா அவ்வாறு சொல்ல, சிபி அவளையே முறைப்பாக பார்த்தான்.. அவனது பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் ஆதிரா குழப்பமாக கேட்டாள்..!!

“என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..??”

“ம்ம்..?? அகழி வந்து அஞ்சுநாள் இருந்தா போதும், மறந்து போனதுலாம் தானா ஞாபகம் வரும்னு சொல்லி, என்னை இங்க கூட்டி வந்த.. இப்போ என்னடான்னா.. நீயாவே அதெல்லாம் வம்படியா வரவச்சுக்குறியோன்னு தோணுது..!!”

“ச்சேச்சே.. அப்படிலாம் இல்லத்தான்..!!”

“இந்த மாதிரிலாம் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கடா..!!”

“ப்ளீஸ்த்தான்.. இது மட்டும்..!! ப்ளீஸ்..!!” ஆதிராவின் கெஞ்சலுக்கு இறங்கிய சிபி,

“ஹ்ம்ம்.. என்னவோ பண்ணிட்டு போ.. ஆனா.. இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குத்தான்.. நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!! மூணாவது நாள் பொட்டியை கட்டிக்கிட்டு ஊட்டிக்கு என்கூட ஹனிமூன் கொண்டாட வர்ற.. சரியா..??” என்று குறும்பான குரலில் சொல்ல,

“ம்க்கும்.. அதான் ஹனிமூன் அல்ரெடி அகழிலயே ஸ்டார்ட் ஆய்டுச்சே..??” என ஆதிரா நாணத்துடன் தலைகுனிந்தவாறே சொன்னாள்.

“ஓ.. இதுக்குப் பேரு ஹனிமூனா..?? மண்டு..!! ஹனிமூன்னா செக்ஸ் மட்டும் இல்ல.. அதில்லாம நெறைய இருக்கு.. முக்கியமா.. நம்ம ரெண்டு பேர் மனசுலயும் எந்த தேவையில்லாத நெனைப்புமே இருக்கக்கூடாது.. புரியுதா..??”

“ம்ம்.. புரியுது..!!” ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஹேய்.. எங்க.. உன் கைல போட்ருந்த ரிங்க காணோம்..??”

என்று சிபி குழப்பமாக கேட்டான்.. உடனே ஆதிராவும் பட்டென தனது விரல்களை உயர்த்தி பார்த்தாள்..!! அவர்கள் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட காதலர் தினத்தன்று.. சிபி அவளுக்கு அன்புடன் அணிவித்த அந்த மோதிரம் இப்போது அவளது விரல்களில் இல்லை..!! அதை அறிந்ததுமே ஆதிராவிடம் உடனடியாய் ஒரு பதற்றம்..!!

“ஐயையோ.. எங்க போச்சு.. கைலதான போட்ருந்தேன்.. காலைல கூட பாத்தனே..??”

“குளிக்கிறப்போ பாத்ரூம்ல ஏதும் கழட்டி வச்சியா..??”

“இ..இல்லத்தான்.. கழட்டல.. கழட்டுன மாதிரி ஞாபகமே இல்ல..!! எங்க விழுந்துச்சுனு தெரியலையே..?? ஐயோ.. கடவுளே..!!”

புலம்பலாக சொன்ன ஆதிரா நெற்றியை பிசைந்துகொண்டாள்.. மோதிரம் எங்கே சென்றிருக்கும் என்று தீவிரமாக யோசித்தாள்..!! ஆதிராவின் கவனக்குறைவு சிபிக்கு ஒருவித எரிச்சலையே தந்தது.. அவன் ஆசையாக அவளுக்கு அணிவித்த மோதிரம் அல்லவா..?? ஆனால்.. ஆதிராவிடம் காணப்பட்ட ஒரு அதீத பதற்றம் சிபியின் எரிச்சலுணர்வை கட்டுக்குள் கொண்டுவந்தது.. மனைவியின் மீது அன்பு பெருக்கெடுத்தவனாய் இதமாக சொன்னான்..!!

2 Comments

Add a Comment
  1. Very very suspence

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *