கண்ணாமூச்சி 5 61

இளையவர்களுக்கு கதிர் மீது எந்த பாரபட்சமும் இல்லை.. தங்களில் ஒருவனாகத்தான் அவனை பார்த்தார்கள்..!! ஆனால் பெரியவர்களுக்கும் அப்படி என்று சொல்லமுடியாது.. முக்கியமாக தணிகைநம்பிக்கு..!! ஒரு சிறு விஷயத்திற்காக கௌரவம் பார்த்துக்கொண்டு.. பூவள்ளியின் சொந்தங்களை இன்று வரை தள்ளி வைத்திருப்பவர்.. தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?? தாமிராவின் பயமும் கவலையும் ஆதிராவுக்கு இப்போது தெளிவாக புரிந்தது..!!

“அப்பா சம்மதிக்க மாட்டார்னு நெனைக்கிறியா..??”

“ஏன்.. நீ சம்மதிப்பார்னு நெனைக்கிறியா..??”

“இல்ல.. சம்மதிக்க மாட்டார்னுதான் தோணுது..!!”

“எனக்கும் அப்படித்தான்..!!”

“ஹ்ம்ம்.. இதைத்தான் காம்ப்ளிகேட்டட்னு சொன்னியா..??”

“ஆமாம்..!! அதுமில்லாம அவன் இப்போ ஜாப்ல வேற இல்ல.. அவன் மொதல்ல நல்ல வேலைல செட்டில் ஆகணும்..!!”

“ஏதோ இண்டர்வியூன்னு சொல்லிட்டு இருந்தாரு..??”

“ம்ம்.. கோயம்புத்தூர்ல.. ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசர் வேலையாம்.. இன்னைக்கு ஈவினிங் கெளம்புறான்..!! அப்படியே சென்னை வேற போறதா சொன்னான்.. ஒருவாரம் கழிச்சுதான் வருவான்னு நெனைக்கிறேன்..!!”

“ஹ்ம்ம்ம்.. கவலைப்படாத தாமிரா.. அவருக்கு கண்டிப்பா இந்த வேலை கெடைச்சிடும்.. பாதி ப்ராப்ளம் சால்வ் ஆய்டும்..!! அப்பாவை சம்மதிக்க வச்சுட்டா மீதி ப்ராப்ளமும் சால்வ்ட்..!!”

“ம்ம்..!!”

“நான் வேணா அப்பாட்ட பேசிப் பாக்கட்டுமாடி..??”

“எதைப்பத்தி..??”

“உன் லவ் மேட்டர் பத்தித்தான்..!!”

“எப்போ..??”

“ஏன்.. இப்போவேதான்..!!”

“ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!!”

“என்னடி சொல்ற..??”

“பின்ன என்ன.. இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!!”

“ஏண்டி இப்படி பேசுற.. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் இல்லையா..??”

“ஹையோ.. நான் அப்படி சொல்லலக்கா.. வீடே சந்தோஷமா இருக்குறப்போ.. இந்த விஷயத்தை சொல்லி அந்த சந்தோஷத்தை கெடுக்க வேணாம்..!! மொதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும்.. இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..!! புரியுதா..??”

“ம்ம்..!!”

“கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!”

2 Comments

  1. Very very suspence

Comments are closed.