“ஹ்ம்ம்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க..!!” ஆதிரா கட்டிமுடித்துவிட்டு சொன்னாள். உடனே கண் திறந்து பார்த்த சிபி,
“வாவ்வ்வ்வ்..!!!” என்று கடிகாரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான்.
“பிடிச்சிருக்கா..??” ஆதிரா பெருமிதமாக கேட்டாள்.
7
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..!!”
“ம்ம்..!! வாட்ச் கட்ட மாட்டேன்.. வாட்ச் கட்டுறதே எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டு திரிவிங்கள்ல..?? இனிமே பாக்கலாம்.. கட்டுறிங்களா.. இல்ல கழட்டி போடுறிங்களான்னு..??” ஆதிரா குறும்பாக சொல்லவும்,
“ஹாஹா..!! கழட்டவே மாட்டேன்.. கைலையே போட்டுக்குறேன் போதுமா..??” சிபி சிரிப்புடன் சொன்னான். உடனே,
“அதுசரி.. என்ன இது.. திடீர்னு வாட்ச்லாம்..??” என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.
“இது என்னோட கிஃப்ட்..!!”
“கிஃப்ட்டா..?? எதுக்கு..??”
“ம்ம்.. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..??”
“என்ன நாள்..??” சிபி குழப்பமாக தலையை சொறிந்தான்.
“ரொம்ப யோசிக்காதிங்க.. இன்னைக்கு பிப்ரவரி 14th.. வேலன்டைன்ஸ் டே..!! லவ் பண்றவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது கிஃப்ட் வாங்கி குடுத்து.. நம்மளோட லவ்வை அவங்களுக்கு எக்ஸ்ப்ரஸ் பண்ற நாள்..” என்று படபடவென சொல்லிக்கொண்டே வந்த ஆதிரா பட்டென நிறுத்தி,
“ஐ லவ் யூ அத்தான்..!!” என்று கண்களிலும் குரலிலும் காதல் பொங்க சொல்லி முடித்தாள்.
சிபி அப்படியே உருகிப் போனான்.. அவனும் கண்களில் வழிகிற காதலுடன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான்..!! சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. படக்கென தனது விரலில் போட்டிருந்த அந்த மோதிரத்தை கழற்றி எடுத்தான்..!!
“நீ கண்ணலாம் மூட வேணாம்.. கையை மட்டும் நீட்டு..!!” என்றவாறு,
“ஹையோ.. அ..அத்தான்.. என்ன இது..??” என்று ஆதிரா அதிர்ந்து கொண்டிருக்கையிலேயே, அவளுடைய விரல் பிடித்து அந்த மோதிரத்தை மாட்டி விட்டான்..!!
“இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே-னு எனக்கு சத்தியமா ஞாபகம் இல்ல ஆதிரா.. அப்படியே ஞாபகம் இருந்திருந்தாலும் உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சிருப்பேனான்றதும் சந்தேகந்தான்.. அதுலாம் எனக்கு தோணாம கூட போயிருக்கலாம்.. பட்..” ஆதிரா மாதிரியே படபடவென பேசிய சிபி பட்டென நிறுத்தி,
“ஐ லவ் யூ ஆதிரா..!!” என்று அதே காதல் பொங்குகிற குரலில் சொல்லி முடித்தான்.
கணவனின் செய்கையில் இப்போது ஆதிரா அப்படியே உருகிப் போனாள்.. அந்த மோதிரத்தையே பெருமிதமாக பார்த்தவள், அப்புறம் சிபியை ஏறிட்டு காதலும் கண்ணீரும் தளும்புகிற விழிகளுடன் பார்த்தாள்..!!