அசுரன் Part 29 28

ஒரு பெண்ணின் குரல் கேட்டது.”ஒழுங்கா உன் முன் இருக்கும் குடுவையில் சென்று நீயாக வந்து அடைந்து கொள்..காத்தவராயா..!இல்லையெனில் கடும் விளைவுகள் ஏற்படும்” என சகோச்சி எச்சரித்தது..

காத்தவராயன் ஒரு நிமிடம் கண்ணை மூடி,யார் என்னை தாக்கியது என தியானிக்க,அவனை இழுத்து வந்த காட்சிகள் கண்களில் விரிந்தது..
வேகமாக காற்றை போல காட்சிகள் கொஞ்ச கொஞ்சமாக நிதானமாக்கி உற்று நோக்கினான்..யார்? என அவனுக்கு புலப்பட்டு விட்டது..

“வா விலாசினி..வா..ஆவியாக இருந்த எனக்கு காம தாகத்தை தீர்த்த காம அருவியே வா,என் கண் முன்னே வந்து உன் தரிசனத்தை கொடு கண்ணே..”

விலாசினி

சகோச்சி அவன் கண்முன்னே தோன்றி,”சும்மா சொல்லகூடாது காத்தவராயா…!என் தந்தை உன்னை பற்றி சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் கூட மிகையில்லை..!நீ மந்திர தந்திரங்கள் மட்டுமல்ல அறிவும் மிக்கவன் தான்.நீண்ட ஆண்டுகள் ஆகியும்,என் உருவத்தை வெளிபடுத்தாவிட்டாலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாய்.”

‘அறிவு இல்லையென்றால் மதிவதனி மற்றும் உன்னை போன்ற பேரழகிகளை ஆண்டு அனுபவித்து இருக்க முடியுமா.. விலாசினி.”

சகோச்சி அவனிடம் “என்னால் உன்னை அழிக்க முடியாது என்றும் என் தந்தை சொன்னார்.ஆனால் உனக்காக தான் யட்சியாக உருவெடுத்து நீண்ட நாட்களாக உன் வருகைக்காக காத்து உள்ளேன்..காத்தவராயா..!

“ஹாஹாஹா…என் மரணம் யட்சியால் கிடையாது என்று எனக்கு தெரியும் விலாசினி..என் மரணம் ரகசியமானது.அழகான பெண்கள் எல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள்..ஒரு பெண்ணாக பிறப்பு எடுத்து இருந்தால் உன்னை ஆசை தீர அனுபவித்து இருப்பேன்..நீ யட்சியாக உருவெடுத்தது வீண்..”என அவன் நக்கலடிக்க

“அதையும் பார்க்கலாம்..”என சகோச்சி தன் சக்தியை ஒன்று திரட்டி ஒரு நெருப்பு வளையத்தை வீசினாள்.அது காத்தவராயனை பிண்ணி கொண்டது..

“கன்னுக்குட்டி..இந்த வளையம் எல்லாம் என்னை ஒன்றும் பண்ண முடியாது..”என காத்தவராயன் அஷ்டமா சித்திகளில் ஒன்றான மகிமாவை பயன்படுத்தி உருவத்தை பெரிதாக்கினான்.அதில் அந்த வளையத்தை உடைத்து எறிந்தான்.

மீண்டும் ஒருமுறை அவள் சக்தியை திரட்டி பந்து போல ஆக்கி காத்தவராயனை நோக்கி எறிந்தாள்..அது ஒரு நீலநிற உருண்டையை போல வந்து காத்தவராயனை தாக்கி சிறைப்பிடித்தது..

அதை சிரமப்பட்டு இம்முறை காத்தவராயன் அணிமா என்ற சக்தியை பயன்படுத்தி உருவத்தை சிறிதாக்கி அவள் ஏற்படுத்திய வளையத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் அதை உடைத்து எறிந்தான்..

காற்றாக சுற்றி சுற்றி காத்தவராயன் அவளை கட்டி போட ,அதை சகோச்சியும் எளிதாக உடைத்து எறிந்தாள்..

“அற்புதம் விலாசினி..உன்னோட சக்தியின் திறமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..அதே வேளையில் உன்னோட சக்தியை யாரிடத்தில் எப்படி?எங்கே? பிரயோகிக்க வேண்டும் என்று தெரியாமல் வீணடிக்கும் உன் முட்டாள்தனத்தை எண்ணி என் மனம் கவலையும் கொள்கிறது..நீயும் நானும் சண்டை போட்டு கொண்டே இருந்தால் இந்த யுகம் முடியும் வரை சண்டை போட்டு கொண்டே தான் இருக்க வேண்டும்..உன்னை அழிக்கும் சக்தி என்னிடம் கிடையாது..என்னை அழிக்கும் சக்தியும் உன்னிடம் கிடையாது..”என காத்தவராயன் கூற,

“அதற்கு என்னை பின்வாங்க சொல்கிறாயா..கண்டிப்பா என்னால் முடியாது..காத்தவராயா..!”

“பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வது சரியாக தான் இருக்கு போல..நான் சொல்வதை அவசரப்படாமல் கேள்..விலாசினி.நாம் இருவரும் ஒரு போட்டி வைத்து உடன்படிக்கை செய்து கொள்வோம்..”

“என்ன போட்டி..?என்ன உடன்படிக்கை..”என சகோச்சி கேட்க,

“உனக்கு என்னை அழிக்க வேண்டும் அவ்வளவு தானே..!அதுதானே உனக்கு ஆசை..”என காத்தவராயன் பீடிகை போட்டான்.

“ஆமாம் என் ஆசை அதுதான்.பிரியங்காவை காமத்தோடு யாரும் தொடாதாவாறு காக்க சொல்லி எனக்கு ஆணை.அப்படி தொட வரும் உன்னை பிடித்து கொண்டு வர எனக்கு எஜமானின் கட்டளை..அவர் மூலம் தான் உன்னை அழிக்க எனக்கு உபாயம் கிட்டும் என நினைக்கிறேன்..”

“ம்…அப்ப சரி..இதையே போட்டியாக வைத்து கொள்ளலாம்..”

“நீ என்ன சொல்கிறாய் காத்தவராயா..எனக்கு புரியவில்லை..”..