அசுரன் Part 23 24

நிகழ் காலம்

கஜாவின் ஃபோன் பக்கத்தில் இருந்தது..பாவம் பார்த்து லிகிதா அவனருகே காலால் தள்ளி விட்டு போய் இருந்தாள்.
கஜாவினால் கையை அசைக்க கூட முடியவில்லை..

Hey siri என தன் போனுக்கு கமாண்ட் கொடுத்து,ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்தான்.

உடனே டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு,அவனுக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினார்…கஜா பழைய நிலைமைக்கு வந்தான்..அவனுக்கு லிகிதா மேல் கோபம் கோபமாக வந்தது..எப்படியாவது அவளை தூக்க வேண்டும் என தனிமையில் திட்டம் தீட்டினான்..

சரியாக அந்த நேரத்தில் அவன் அறையில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து ஒளிர ஆரம்பித்தன. ஃபேன் ஆன் செய்யாமலேயே ஓட ஆரம்பித்தது .பின்னாடி யாரோ ஓடுவது போல் இருக்க,உடனே கஜா திரும்பி பார்த்தான்.ஆனால் அங்கே யாரும் இல்லை.

“யாருடா இங்கே என்கிட்ட ஜில்பான்ஸ் வேலை எல்லாம் காட்டுறது…!தைரியம் இருந்தா முன்னாடி வாடா பேடி பயலே”
என கத்தினான்…

“உன் முன்னாடி தான் இருக்கேன்டா பொட்டை பயலே”என காத்தவராயன் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான்..

அவன் அடி தாங்காமல் கஜா சுருண்டு கீழே வந்தான்..

“யப்பா என்ன அடி..!டேய் யாருடா மாய வித்தை எல்லாம் காட்டுவது..?நீ ஆம்பளையா இருந்தா நேருக்கு நேரா உன் உருவத்தோடு வாடா…இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதே..”என கன்னத்தில் கை வைத்து கொண்டு குரல் கம்ம பேசினான்.

“முட்டாப்பயலே எனக்கு உருவமே கிடையாது..நான் ஒரு ஆவி..என் பேரு காத்தவராயன்,2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மன்னன்…”

கஜா கன்னத்தை தேய்த்து கொண்டு”யாருடா இவன்.. என்கிட்டேயே புரூடா விடுவது..ஆவியாம்,அதுவும் 2000 வருடத்துக்கு முன்னாடி வாழ்ந்த மன்னனின் ஆவியாம்..ஒழுங்கா முன்னாடி வந்து விடு..உண்மையை சொல்லு..! திருட இங்கே வந்து இருக்கே…?நானே ஒரு திருடன்.என்கிட்ட உன் வேலையை காட்டாதே…”

“முட்டாளே…இங்கு இருக்கும் சொத்துக்கள் யாவும் என்கிட்ட இருக்கும் பொருட்களுக்கு கால் தூசி பெறாது..இங்கே பார்..”என காத்தவராயன் சொல்லிய உடன் ஒரு குடம் நிறைய பொற்காசுகள் கஜா முன் தோன்றியது…

அதை கஜா எடுத்து அள்ளி பார்க்க,அவன் கைகளில் தங்க காசுகள் மின்னியது..”ஆகா தங்க காசுகள்..தங்க காசுகள்” என அவன் கண்ணில் ஆசை தெரிந்தது..காத்தவராயன் அடித்த அடி முற்றிலும் மறைந்து போனது.

“இதெல்லாம் எனக்கா…!”என கஜா கேட்டான்..

‘ஆமாம் முழுவதும் உனக்கே தான்..”

“ஆமா சும்மா வந்து எனக்கு ஏன் உதவி செய்யறே…”கஜா கிடுக்கி பிடி போட்டான்.

“தங்க காசை அள்ளி கொடுக்க நான் என்ன முட்டாளா..!காரணம் இருக்கு.உன் மூலம் எனக்கு ஒரு உதவி தேவைப்படுது…”என காத்தவராயன் சொல்ல

“அப்படி வா வழிக்கு…ஏதோ என் மூலம் உனக்கு உதவி தேவைப்படுது.இல்லன்னா‌ இவ்வளவு காசு கொட்டி கொடுக்க நீ என்ன லூசா…”

“சரியாக தான் சொல்கிறாய்..உன்னை வந்து பார்த்துச்சே ஒரு பொண்ணு..அந்த பொண்ணை நான் அனுபவிக்கனும்.அதுக்கு உன் உடம்பு வேணும்..அதுவுமில்லாம நீயும் அந்த பொண்ணு மேல ஆசைப்படுவது எனக்கு தெரியும்..”

“ம்ம்ம்..நீயும் என் சாதி தானா..சரி சரி.ஆனால் அந்த பொண்ணை நான் அனுபவித்த பிறகு என் உடம்பை வச்சி நீ அந்த பொண்ணை தொட்டுக்கோ.”

“இல்லை கஜா..எனக்கு அந்த பொண்ணு கைப்படாத ரோசாவாக வேணும்…மேலும் என்ன தான் நீ முயன்றாலும் அவள் உன்னை தொடவிட மாட்டாள்.அவளை மடக்கும் ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும்.”

கஜாவிற்கு இது தன்மான பிரச்சினையாக இருந்தது..

“இங்க பாரு…ஆ…உன் பேரு என்ன சொன்னே..!ஆ…காத்து …காத்து..இது என் prestige issue..அவ என்னை அசால்ட்டா அடிச்சி போட்டு போய்ட்டா.அதனால் அவ கன்னித்தன்மையை நான் தான் பறிக்கணும்.அதனால் அப்புறம் நீ அனுபவிச்சிக்கோ..”