“அப்போ இதற்கு வழி எதுவும் இல்லையா ஜோசியரே..”
“எனக்கு இதற்கான வழி ஏதும் தெரியாது..வேண்டுமானால் கேரளாவில் உள்ள மகா மாந்த்ரீக புருஷன் பிங்களனை தேடி சென்று பாருங்கள்.ஏதேனும் வழி உங்களுக்கு கிடைக்கலாம்..”
பிரியங்காவின் தந்தை உடனே,கேரளா சென்று பிங்களனை பார்க்க முயற்சி செய்தார்.ஆனால் அவனை பெரும் முயற்சி எடுத்து தான் சந்திக்க வேண்டி இருந்தது..
அவளின் தந்தை பிங்களனிடம்,”சாமி,உங்களை சந்திக்க ஒரு வாரமா சந்திக்க முயற்சி செய்தேன்..விடாமல் போராடி இன்று தான் தங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது…”
“இந்த பிங்களனை சந்திப்பது அவ்வளவு எளிதா?நாட்டை ஆளும் அமைச்சர்களே என்னை சந்திக்க மாதக்கணக்கில் காத்து கொண்டு இருக்காங்க..உன்னோட அதிர்ஷ்டம் ஒரு வாரத்திலேயே என்னை சந்திக்கும் பாக்கியம் கிடைத்து விட்டது..என்னை நாடி வந்த நோக்கம் என்ன?யாருக்கு செய்வினை வைக்க வேண்டும் என சொல்லு..?என தன் ஆங்கார குரலில் கேட்டான்.
“அய்யோ யாருக்கும் செய்வினை வைக்க வேண்டாம் சாமி,என் மகளுக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுத்தால் மட்டும் போதும்..!”
பிரியங்காவின் தந்தை அவளின் ஜாதகத்தை நீட்ட,அதை பார்க்க பார்க்க பிங்களனின் கோலிகுண்டு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன..
‘ஆகா,எத்தனையோ முறை நான் தேடிப்போன புதையல் இப்போ என் மடியில் தானா வந்து விழுந்து இருக்கே” என நினைத்தான்..
“சாமி” என்று சொல்ல வந்த அவளின் தந்தையை கையமர்த்தி அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தான்.
பிறகு பிங்களன் பேச ஆரம்பித்தான்..
“உன் மகளின் கண்டத்தை தவிர்க்க,என்னை நாடி இங்கே வந்துள்ளாய் சரியா..”
பிரியங்காவின் தந்தை வேணு கோபால்,”ஆகா நான் தேடி வந்த பிரச்சினைக்கு ஒரு வழி கிடைத்து விட்டது”என மனதில் நிம்மதி பெருமூச்சுடன் “சரியாக சொன்னீங்க சாமி” என்றான்..
“உன் மகளை காத்தவராயன் ஆவி தீண்ட விடாமல் நான் செய்கிறேன்..அவளின் ஆடை,மற்றும் தலைமுடி எடுத்து வந்துள்ளாயா.”
“ம்,எடுத்து வந்துள்ளேன் சாமி,”
பிங்களன் அதை வாங்கி கொண்டு”சரி சென்று வா.உன் மகளை யாரும் தீண்டாத வண்ணம் நான் ஒரு யட்சியை அனுப்பி வைக்கிறேன்.அவள் உன் மகளுக்கு வரும் ஆபத்தை தடுப்பாள்.”என்றான்.
“சாமி இன்னொரு விசயம்,இந்த காத்தவராயன் ஆவிக்கு பயந்து என் மகளை மேற்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடு செய்து விட்டேன்..அவள் அடுத்த வாரம் வெளிநாடு செல்கிறாள்..”
“பரவாயில்லை செல்லட்டும்..நீ கிளம்பு.எனக்கு இது தொடர்பாக வேலை நிறைய இருக்கு..”
வேணுகோபாலன் சென்ற உடன் பிங்களன் கடுமையான யாகம் செய்து,மந்திர உச்சாடனங்கள் செய்து சிக்கோச்சி என்ற யட்சியை தோன்ற செய்தான்..
“ஹே சிக்கோச்சியே,எண்ணங்களை நிறைவேற்றும் யட்சிகளின் அரசியே…உனக்கு என் வந்தனம்.நான் சொல்லும் செயலை நீ ஈடேற்றி தரவேண்டும்..”
“சொல் பிங்களா..நான் என்ன செய்ய வேண்டும்”
பிங்களன்,பிரியங்காவின் போட்டோ,தலைமுடி மற்றும் ஆடையை வைத்து,”இங்கே பார் சிக்கொச்சி இந்த கன்னிகையை யாரும் தொடவிடாமல் பாதுக்காக்க வேண்டியது உன் பொறுப்பு..முக்கியமா இவளை தேடி காத்தவராயன் என்னும் ஆவி இவளை தேடி வரும்..அதை நீ வசியப்படுத்தி என்னிடம் கொண்டு சேர்க்க வேண்டும்..இதுவே உன்னிடம் நான் கேட்கும் கோரிக்கை.”
“உத்தரவு பிங்களா…”என சொல்லி மறைந்தது..
“காத்தவராயா..! போன பிறவியில் அகோரியாக வந்த நான் ,மதிவதனி உடன் உன்னை சேர்த்து வைத்தேன்..ஆனால் எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை..ஆனால் இந்த பிறவியில்
மதிவதனியின் மறுபிறவியான பிரியங்காவுடன் உன்னை இணை சேர விடாமல் தடுப்பது அவசியம்.ஏனெனில் உன்னை வசியப்படுத்தி என் காரியத்தை சாதித்து கொள்ள போகிறேன்..
நீ எனக்கு வேண்டும் காத்தவராயா.. மாயமலையில் தவறவிட்ட உன்னை இப்பிறவியில் தவற விடவே மாட்டேன்..” என கொக்கரித்தான்..
ஆனால் காத்தவராயன் ஆவியாக மட்டும் தான் இருப்பான் என பிங்களன் நினைத்தான்.ஆனால் அவன் மானிட உடலில் புகுந்து இரண்டு பெண்களை வேட்டையாடி சக்திகளை பெருக்கி கொண்ட விசயம் அவனுக்கு தெரியாது..
சக்கோச்சி என்ற யட்சியும் சாதாரணமானது அல்ல.. பில்லி சூனியங்களின் அதிபதி..அது வசியப்படுத்துவது மிக மிக கடினம்.அது சொன்ன வேலையை சரியாக முடித்து விடும்.அப்படி அதனால் செய்யா முடியாவிடில் பிறகு ஏவிவிட்டவரால் கூட அதை கட்டுபடுத்த முடியாது..எந்த சக்திக்கும் அது கட்டுப்படாது..அதனால் ஏற்பட போகும் விளைவு மிக மிக பயங்கரமா இருக்கும்..அது யாருக்கு என்றால்..?
மன்னர் காலம்
காத்தவராயன் தோள்களை மதிவதனி தொட்டவுடன் அவன் உதறினான்.
“மதிவதனிக்கு தன் நிலையை கண்டு தனக்கே எரிச்சல் வந்தது..என் அழகை கண்டு எத்தனை எத்தனை மாமன்னர்கள் என் மீது மோகித்து என் காலில் விழுந்து சேவகம் செய்ய காத்து இருந்தனர் .ஆனால் அவர்கள் எல்லோரையும் மரியாதை இல்லாமல் உதாசீனபடுத்தியதன் விளைவை இன்று சந்திக்கிறேன்…போயும் போயும் ஒரு கிழவனிடம் என்னோட மேனியை நானே கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்..
நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு சீக்கிரம் இந்த பிறவியை உயிர்நீத்துவிட வேண்டும்.அதுவரை வரும் தொல்லைகளை சகித்து கொள்ள வேண்டியது தான்..”என மனதுக்குள் பொருமினாள்.
அவனை அணைக்க,காத்தவராயன் அவள் பிடியில் திணறினான்..அவள் உதட்டினால் அவன் பின்கழுத்தில் தேய்க்க காத்தவராயன் ஒரு நிமிடம் சொக்கினான்.இருந்தாலும் பொறுத்து கொண்டு அவளை மேலும் அலைக்கழிக்க விரும்பி தோள்களை குலுக்கி அவள் பிடியில் இருந்து விடுவித்து கொண்டான்..
