அசுரன் Part 23 24

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருந்த ஒரு கல்லூரியில் ஒரு போட்டி நடந்து கொண்டு இருந்தது…

அங்கே ஒரு அழகிய இளம் யுவதி அந்த போட்டியில் கலந்து கொண்டு கலக்கி கொண்டு இருந்தாள்.

எல்லோரும் அவளின் திறமையை பார்த்து வியந்து கொண்டு இருந்தனர்..அவள் வைத்த குறி ஒன்று கூட தப்பவில்லை..அடித்து தூள் கிளப்பி கொண்டு இருந்தாள்.

“போட்டி முடிந்த பிறகு அவள் வந்து அமர,அவளின் நண்பன் ஜேக் அருகில் வந்தான்..”

ஹே ஏஞ்சல்…!என்று அழைத்தான்..

“ஹாய் ஜேக்”என்று அவள் அழைத்து ஒரு புன்னகையை உதிர்க்க அதில் அவன் கவரப்பட்டு சிலை போல் ஆனான்..

“ஹே ஜேக்” என்று அவள் அழைத்து,அவனை உலுக்கிய உடன் அவன் நனவுக்கு வந்தான்..

“சாரி ஏஞ்சல்…” என்று அவன் அழைக்க..

“ஹே don’t call me ஏஞ்சல்..!call me பிரியங்கா…”

“ஓகே பிரியங்கா…நீ இவ்வளவு திறமையா Archery game விளையாடுறே..!நீ மட்டும் நேஷனல் லெவல் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடினால் கோல்ட் மெடல் நிச்சயம்..”என அவளை புகழ்ந்து தள்ளினான்..

“ம்ம்மம்..எனக்கு விளையாட ஆசை தான்..”

“அப்போ ஏன் விளையாடல..உன் நாட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சொல்லு, என் நாட்டில் உன் திறமைக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்.”

“வேண்டாம் ஜேக்..இது என் அப்பா உத்தரவு..அவர் நேஷனல் லெவல் கேமில் விளையாட கூடாது என்று சொல்லி இருக்கார்.அவர் பேச்சை நான் எப்பவும் மீற மாட்டேன்”

“ஏன் பிரியங்கா..உன் அப்பா உன் திறமையை பூட்டி மழுங்கடிக்கிறார்.?

“எனக்கும் தெரியல ஜேக்..ஒருவேளை நான் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் என் ஃபோட்டோ பேப்பரில் வந்து விடும் பயம் அவருக்கு…பேப்பரில் வந்து புகழ் பெற்று என் முகம் பரிச்சயம் ஆனால் எனக்கு ஏதோ ஒரு அபாயம் வரும் என்று சொன்னார்..”

“புரியல பிரியங்கா எனக்கு..பேப்பரில் பேர் வந்தால் சந்தோஷம் தானே…அதில் என்ன அபாயம் இருக்கு”

“எனக்கு தெரியல ஜேக்..!ஆனால் அவருக்கு ஏனோ ஒரு பயம்.. காரணம் கேட்டு நான் அவரை கஷ்டப்படுத்த விரும்பல…”

“ஓகே பிரியங்கா…அந்த விஷயத்தை விட்டுவிடலாம்.நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்லணும்..”

“ம்… சொல்லு ஜேக்”

“பிரியங்கா…உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சி போச்சு.ஐ லவ் யூ..” என்று கூறினான்..

“ஸ்டாப் இட் ஜேக்..முதலில் நீ இந்த இடத்தில் இருந்து போ…”

“ஏன் பிரியங்கா…?என்னை பிடிக்கவில்லையா..”

” சொல்றதை கேளு ஜேக்..நான் யாரையும் விரும்ப கூடிய நிலையில் இல்லை.முதலில் இங்கே நிக்காதே…என்னையும் மனசில் நினைக்காதே..அது உன் உயிருக்கு தான் ஆபத்து..!”

“என்ன சொல்றே பிரியங்கா..?எனக்கு ஒன்னும் புரியல..”

“என்னால் எதுவும் சொல்ல முடியாது ஜேக்..!நான் கிளம்பறேன்..”என கொண்டு வந்த archery பையை கூட விட்டு அவசரமாக ஓடினாள்..

அவள் சென்ற உடனே..ஜேக் நின்ற இடம் தீடீரென இருட்டானது போல் இருந்தது..காற்று பலமாக வீச தொடங்கியது..யாரோ ஒருவர் அவன் மார்பில் கை வைத்து தள்ள ஜேக் பறந்து இருபதடி தூரம் தள்ளி விழுந்தான்..பிரியங்கா விட்டு சென்ற archery பை தானாக திறந்து வில் வெளியே வந்தது..அம்பு ஒன்று அவனை குறி பார்க்க,ஜேக் பயந்து பின்னாடி செல்ல சுவற்றில் முட்டி கொண்டான்.அம்பு பாய்ந்து வந்து அவன் கழுத்தை உரசி சுவற்றில் குத்தி நின்றது..

தீடீரென ஒரு குரல் மிக கொடூரமாக ஒலித்தது..”இக்கன்னிகையை நீ மோகித்தால் அக்கணமே உன் மரணம் நிச்சயம்”

அது ஒரு யட்சியின் குரல்..

மேலேயிருந்து ஒரு பல்பு அவன் தலையில் விழ ஜேக் அங்கேயே மயக்கம் ஆனான்..