அசுரன் Part 23 24

மன்னர் காலம்

அகோரி,வில்லை எரிப்பதையும்,அதற்கு முன் அஸ்வத்தாமன் உருவில் அவன் மதிவதனியிடம் பேசியதையும் மரத்தின் மேலே இருந்து பல ஜோடி கண்கள் பார்த்து கொண்டு இருந்தன..

மாயமலையின் பிரதான தொழில்களில் ஒன்று கள் இறக்குதல்..அதை பெரும்பாலும் ஆண்கள் தான் செய்வார்கள்..ஆனால் அன்று கணவனை இழந்த பெண்கள்,அதாவது மதிவதனியால் காப்பாற்றப்பட்ட பெண்கள் அந்த தொழிலை செய்து கொண்டு இருந்தனர்..என்ன செய்வது? வாழ ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே..!

அகோரி சென்ற பிறகு அவர்கள் மரத்தில் இறங்கி கீழே வந்தனர்..

அகோரி தீ மூட்டிய இடத்தில் வந்து நின்றனர்..மதிவதனி வைத்து இருந்த வில் அக்னி பகவானுடையது..அர்ஜூனனுக்கு கொடுத்த காண்டீப வில்லும் அக்னி பகவான் உடையது.. காண்டீப வில்லை ஒத்த வில்லை தான் மதிவதனி வைத்து இருந்தாள்..அக்னி பகவான் வேண்டுகோளின் படி காந்தவ காட்டை அழித்து தன் பசியை தீர்த்த அர்ஜுனனுக்கு அக்னி பகவான் காண்டீப வில்லை பரிசாக கொடுத்து இருந்தார்..அதே போல் மதிவதனி அக்னி பகவானை திருப்திபடுத்தி இந்த வில்லை பெற்று இருந்தாள்..அக்னி பகவானின் வில்லை அக்னி பகவான் எரிப்பாரா..?

தீ அடங்கிய பின்னும் வில் அப்படியே புத்தம் புதுசாக ஜொலித்தது….அதை கண்டு அந்த பெண்கள் வியந்தனர்..

“என்னடி இது அதிசயமா இருக்கு,தீயில் எரிந்த பின்னும் இந்த வில் அப்படியே பசுமையாக இருக்கு..” என ஒருவள் கேட்டாள்.

“ஆமாண்டி,இது கண்டிப்பா இந்த வில் தெய்வதன்மை வாய்ந்ததாக இருக்கும்..வாடி இந்த வில்லை கொண்டு போய் நம்மை காப்பாற்றிய மதவதினி அரசியிடம் கொண்டு போய் சேர்த்து விடலாம்..”என குழலி என்பவள் சொன்னாள்.

“போடி முட்டாள் குழலி..!ராணி இந்த வில்லை அவர் குருவிடம் குருதட்சணையாக கொடுத்து இருந்தார்.இப்போ நாம போய் அவரிடம் கொடுத்து,ராணி ராணி நீங்கள் வில்லை கொடுத்தது உங்கள் குருவிடம் அல்ல,அவன் ஒரு அகோரி என்று சொன்னால் நம்புவாரா..?.அவர் குருவிடம் கொடுத்த வில்லை நாம் ஏமாற்றி கொண்டு வந்ததாக தானே தப்பாக நினைத்து கொள்வார்.மேலும் நம்மேல் கோபம் கொள்வாரே..!”

“ஆமாம் நீ சொல்வதும் சரியானது சடைச்சி..அப்போ இந்த வில்லை என்ன செய்வது.”

“இந்த வில்லை நாம் பாதுகாத்து தக்க சமயம் வரும் பொழுது மதிவதனி தேவியிடம் ஒப்படைக்க வேண்டும் குழலி.?”

“ம்ம்ம்..சரியா சொன்னாய் சடைச்சி”

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வில்லை தூக்க முயன்றனர்..ஆனால் அவர்களால் கொஞ்சம் கூட அந்த வில்லை அசைக்க முடியவில்லை..

“என்னடி இது இந்த கனம் கனக்குது…நாம இத்தனை பேர் சேர்ந்தும் இதை கொஞ்சம் கூட அசைக்க முடியல..ஆனால் மதிவதனி தேவி மட்டும் எப்படி அவ்வளவு எளிதா தூக்குறாங்க..”

சடைச்சி மூளையில் ஒரு விசயம் பளிச்சிட்டது..

“இருங்கடி வரேன்…”என ஓடினாள்..செங்காந்தள் மலரை நிறைய பறித்து கொண்டு வந்து எல்லோரிடமும் கொடுத்தாள்.

“இங்க பாருங்கடி,இது தெய்வ அம்சம் பொருந்திய வில்..நாம் நம் பலத்தை காட்டினால் இதை தூக்க முடியாது..பக்தியால் மட்டுமே தூக்க முடியும்..நாம் இதை பூஜித்து அப்புறம் தூக்கலாம்..”என்றாள்.

எல்லோரும் செங்காந்தள் மலரை கொண்டு அந்த வில்லை அர்ச்சித்தார்கள்..மானசீகமாக வேண்டி கொண்டனர்..இப்பொழுது அவர்கள் வில்லை அவர்களால் எளிதாக தூக்க முடிந்தது..அதை தங்கள் இருப்பிடத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்..

மாயமலை உள்ளே நுழைய தனக்கு ஒரு சின்ன எதிர்ப்பாவது இருக்கும் என மதிவதனி நினைத்தாள்.ஆனால் அவள் வருவதை பார்த்த உடன் கோட்டை கதவுகள் திறந்தன…

நேராக அந்தரப்புரம் சென்றாள்.சூழ்நிலை வழக்கம் போலவே இருந்தது…எந்த மாறுதலும் அவளுக்கு தெரியவில்லை.ஆனால் அங்கங்கே நம்ம மன்னரையே இந்த பொண்ணு தோற்கடித்து விட்டதாமே என அங்கங்கே மக்களின் பேச்சுக்களை மட்டும் வரும் வழியே கேட்டாள்…

காத்தவராயனுக்கு அதுவே வேற மாதிரி அவன் காதுகளுக்கு போய் சேர்ந்தன….மக்கள் அவனை ஏளனப்படுத்தி கைக்கொட்டிச் சிரிப்பது போல் இருந்தன.

அவனால் தர்பாரில் இருப்பு கொள்ளமுடியவில்லை..விறுவிறுவென எந்திரிச்சு அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.. முன்கூட்டியே வந்ததால் காவலர்கள் இவன் வரவை கவனிக்கவில்லை..அதனால் அவர்கள் அவனுக்கு முகஸ்துதியும் செய்யவில்லை..

கோபத்தில் “ம்ஹும்”என்று அவன் உறுமிய உடன் தான் அவர்கள் அவனை கவனித்தனர்.

‘உடனே அவர்கள் ராஜாதி ராஜா ராஜ கம்பீர..”என்று அவர்கள் ஆரம்பித்தனர்..

என் மீது உள்ள பயம் எல்லாம் இவர்களுக்கு போய்விட்டது..எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மதிவதனி தான் என நினைத்து கோபத்துடன் கடந்து சென்றான்.

அரண்மனையில் மதிவதனி எதிர்வர,அவளை ஏறேடுத்தும் பார்க்காமல் சென்றான்..

மதிவதனிக்கு அவளின் குரு சொன்னது ஞாபகம் வந்தது.இரவு தன் உடல் வனப்பை காட்டி தான் மயக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்..

காத்தவராயன் மேலும் நடந்து செல்லும் பொழுது ஆந்தை ஒன்றின் அலறும் சத்தம் கேட்டது..அதை கேட்டதும் அவன் முகம் மலர்ந்தான்.ஆந்தை இரவில் தானே கூவும். இது என்ன?அந்தி மாலை பொழுது கூவுகிறது என நினைக்கலாம்..ஆனால் கூவியது ஆந்தை அல்ல..அகோரி தான்..தோட்டத்தில் உள்ள செடிகளை விலக்கி கொண்டு வேகமாக புகுந்து ஆந்தை வந்த திசை நோக்கி காத்தவராயன் நடந்தான்..

காலாந்தகன் என்ற அகோரி அங்கே மரத்தடியில் நின்று கொண்டு கஞ்சாவை புகைத்து கொண்டு இருந்தான்..

“காலாந்தகா…போன காரியம் என்னாயிற்று..?”காத்தவராயன் கேட்க

“போன காரியம் வெற்றி தான் மன்னா.மதிவதனியின் வில்லை பறித்து அழித்து விட்டேன்.முக்கியமாக இன்று இரவு அவரே உங்களை நாடி வரும்படியும் செய்து விட்டேன்…இன்று இரவு முதல் அவர் உங்கள் அடிமை..”

காத்தவராயன் இதை கேட்டு சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தான்..உடனே தன் கழுத்தில் இருந்த ஆபரணத்தை கழட்டி கொடுக்க,

அகோரி அதை வாங்க மறுத்தான்..

“மன்னர் மன்னா…இந்த அற்ப தங்கத்திற்க்காகவா நான் தங்களுக்கு உதவி செய்ய வந்தேன்..கிடையாது.தாங்கள் இந்திரஜித் சக்தியை பெற வேண்டும்.அதை நான் கண்டு களிக்க வேண்டும்..”

காத்தவராயன் சந்தேகம் அடைந்து,”எனக்கு இந்திரஜித் சக்தி கிடைப்பதால் உனக்கு கிடைக்கும் லாபம் என்ன?”என கிடுக்குபிடி கேள்வி கேட்டான்.