அசுரன் Part 17 27

“மாறா,தயவுசெய்து நீ கிளம்பு..உன் கண் பார்த்து பேசும் சக்தி என்னிடம் இல்லை..பிளீஸ் வெளியே போ..”

“ஆராதனா,எனக்கு நல்லா தெரியும்.உனக்கு என்மேல காதல் இருக்கு.நான் ஒரு அனாதை,உன்னை அடையும் தகுதி எனக்கு இல்லை என்று நினைக்கிறீயா..”

“பிளீஸ் மாறா,தயவுசெய்து என்னிடம் எதுவும் கேட்காதே..நான் தான் உனக்கு தகுதியான ஆள் கிடையாது,அவ்வளவு தான் சொல்ல முடியும்.நான் போறேன்”என விறுவிறுவென நடக்க தொடங்கினாள்..

“மாயமலை”என்று மாறன் என்று கூற ஆராதனா சட்டென்று நின்றாள்..

“காத்தவராயன்” என்று மாறன் சொல்ல ஆராதனா திரும்பி அவனிடம் வந்தாள்.

“மாறா இந்த விடயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்..”

மாறன் சுற்றும்முற்றும் பாத்து,”இங்கே ஆட்கள் இருக்காங்க ஆராதனா…இதில் உன் அந்தரங்க விசயம் இருப்பதால் கொஞ்சம் தனியா பேசலாமா…!”

ஆராதனா அவனை கூட்டி கொண்டு ஒரு பார்க் வந்தாள்.

இங்கே யாரும் இல்ல.இப்போ சொல்லு மாறா..உனக்கு எப்படி இந்த விசயம் தெரியும்..

பார்க்கில் பராமரிப்பு பணிகளுக்காக இரும்பு பைப்புகள் கீழே போடப்பட்டு இருந்தன..அதில் ஒன்றை மாறன் எடுத்து வந்தான்.

தன்னால் முடிந்த அளவு வளைக்க முயற்சி செய்தான்.ஆனால் அவனால் முடியவில்லை..

“டேய் நான் என்ன கேட்டுட்டே இருக்கேன்..நீ என்னடா பண்ணிட்டு இருக்கே..”

மாறன் அவளிடம் அந்த இரும்பு பைப்பை கொடுத்து வளைக்க சொன்னான்..

ஆராதனா அதை கீழே வீசி விட்டு,”முதலில் நான் கேட்பதற்கு பதில் சொல் மாறா..கிறுக்குத்தனமா எதையாவது பண்ற…”

மாறன் பொறுமையாக அந்த இரும்பு பைப்பை மீண்டும் எடுத்து வந்து,”ஆராதனா நீ கேட்ட கேள்விக்கான பதில் இந்த பைப்பில் தான் இருக்கு..இதை கொஞ்சம் வளைத்து காட்டு”

ஆராதனா அவனிடம்”டேய் உன்னாலயே முடியல…என்னால எப்படிடா முடியும்..”

“எனக்காக ஒரு தடவை முயற்சி பண்ணு ஆராதனா பிளீஸ்..”

ஆராதனா அந்த கம்பியை வளைக்க,அவளால் அதை எளிதாக வளைக்க முடிந்தது..அதை பார்த்து அவளுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை..அவள் கையில் இருந்து வாங்கிய மாறன் அதை தூர வீசி எறிந்தான்

ஆராதனா வியந்து அவனிடம்”டேய் இது எப்படிடா சாத்தியமாச்சு.என்கிட்ட எப்படி வந்தது இவ்வளவு பலம்..”

“இதற்கே ஆச்சரியப்பட்டா எப்படி ஆராதனா…?இன்னும் இருக்கு”பாக்கெட்டில் இருந்து ஒரு பிளேடை எடுத்து அவள் கையில் கீறினான்.உடனே தோல் அறுந்து இரத்தம் வந்தது.

ஆனால் அறுந்த அவள் கைகளின் தோல் உடனே ஒட்டி கொண்டு காயம் இருந்த தடமே காணாமல் போனது..வெளியே சிந்திய ரத்ததுளி மட்டுமே தெரிந்தது..

என்னடா இது மாயம்?ஆராதனா புரியாமல் விழித்தாள்.

“நீ மாயமலை போய் எடுத்திட்டு வந்தேயே ஒரு குடுவை..அதனால் தான் இவ்வளவு வினை…?”

“ஏண்டா அதில் அப்படி என்ன இருந்துச்சு.”

“அதில் நீண்ட நாட்களாக அடைப்பட்டு இருந்த காத்தவராயன் என்ற அசுரனின் ஆவி உன்னால் வெளியே வந்து விட்டது..அது மட்டுமில்லாம அந்த ஆவி ஒருவர் உடலில் புகுந்து உன்னையும் சூறையாடிவிட்டது.அது உன்னுடன் உடலுறவு கொண்டதால் தான் அவனின் சக்தி உனக்கு கிடைத்து உள்ளது..”

ஆராதனாவுக்கு‌ எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது…

“இது எல்லாம் எப்படி உனக்கு தெரியும் மாறா…”

“அந்த ஆவி எப்படிப்பட்டது?அதன் சக்தி என்ன?என்ற எல்லா விசயமும் நீ எடுத்து வந்த ஓலைச்சுவடியில் இருக்கு ஆராதனா..அந்த ஓலைச்சுவடி எழுதியது,அதை குடுவையில் அடைத்த ஒரு முனிவர் தான்.அவர் எழுதிய ஓலைச்சுவடி எல்லாவற்றையும் என் குருநாதர் படித்து இருக்கார்.அவர் மூலமா தான் எனக்கு விசயம் தெரிய வந்தது.”

ஆராதனா மௌனமாக இருக்க,மாறன் அவள் இரு கைகளை எடுத்து மடியில் வைத்து கொண்டு”இங்கே பாரு ஆராதனா,நடந்த சம்பவத்தில் உன்னோட தவறு கொஞ்சம் கூட இல்லை.நான் இப்பவும் உன்னை மனமார முழுசா நேசிக்கிறேன்..”

“மாறா,”என சொல்லி கொண்டு அவனை கட்டி கொண்டாள்…பின்பு உடனே விலகி “இல்லை மாறா..நான் அசுத்தம் அடைந்து விட்டேன்,நீ வேறொரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்..”

“உன்னை விட நல்ல பெண்ணா,”மாறன் கடகடவென சிரித்தான்..

1 Comment

  1. Waste story

Comments are closed.