ஆமா, அதே கலர் கலரா புடவை… என்ன பெரிசா புதுசா எடுத்துருக்கப் போற?
மோகன் சொன்னது, சீதாவை கோபப்படுத்தியிருந்தது. டக்கென்று சொன்னாள்…
இத்தனை நாளா அப்படித்தான் எடுத்தேன். ஆன, இந்த முறை அப்படியில்ல, எல்லாம் மாடர்னா, ஃபாஷனா எடுத்திருக்கேன்.
இந்த வாக்குவாதம் எல்லாம் என் முன்னாடி நடப்பதால், மோகனுக்கும் அது ஈகோ பிரச்சினையாக கொஞ்சம் மாறியிருந்தது.
என்ன ஃபாஷனோ? உனக்கென்ன தெரியும் அதெல்லாம்? ம்ம்ம்?
ஆமா, இவரு பெரிய ஃபேஷன் டிசைனர். இவருக்குதான் எல்லாம் தெரியும், எனக்கு ஒண்ணும் தெரியாதா? நான் வேணா போட்டுட்டு வரேன். எப்படியிருக்குன்னு பாக்குறீங்களா?
எதுவும் சொல்லாமல் மோகன் சும்மாவே முணுமுணுத்த போது, நான் குறுக்கிட்டுச் சொன்னேன்.
மாம்ஸ் கிடக்குறாரு! நான் எப்படியிருக்குன்னு சொல்லுறேன், நீங்க போயி போட்டுட்டு வாங்க!
சீதா உதாசீனப்படுத்தியதுக்கே கடுப்பாகியிருந்த மோகன், என்னுடைய வார்த்தையைக் கேட்டதும் திடுக்கிட்டான். சீதா சென்றதும் என்னையே கூர்ந்து பார்த்தான்.
என்ன மாம்ஸ் அப்படி பாக்குறீங்க?
நீ எதுக்கு மதன் இப்படி பண்ற?
என்ன பண்ணேன்?
அவளோட டிரஸ்ஸிங் பாக்கனும்னு எதுக்குச் சொன்ன?
நீங்கதான மாம்ஸ் என்ன வேணா பண்ணிக்கோன்னு சொன்னீங்க. அத்தை என்னான்னா, பேர் சொல்லி கூப்பிடச் சொல்றாங்க. நீங்களும் சரின்னு தலையாட்டுனீங்க. இப்ப திடீர்னு ஒரு மாதிரி பேசுறீங்க?
இல்ல… நீ ஏதாச்சும்… என்று இழுத்தான் மோகன்.
நான் ஏதாச்சும்?
முதலில் தயங்கிய மோகன், பின் பட்டென்று கேட்டான். இல்ல, நீ ஏதாச்சும் ப்ளான் பண்றொயோன்னுதான் கேட்டேன்.
நானா? என்ன ப்ளான்? என்று கேட்டபடி மோகனை ஆழமாகப் பார்த்தேன்.
மீண்டும் தயங்கியபடியே வந்தது அவன் குரல். இல்லை, நம்மளோட பெட் சம்பந்தமா ஏதாச்சும் ப்ளான் பண்றியோன்னு….
அவன் சொன்னவுடன், திடீரென்று ஏதோ தோன்றினாற் போல், அவனைப் பார்த்தபடியே பெரிதாய் யோசிப்பது போல் பாவனை செய்தேன்… பின் மெதுவாகச் சிரிக்கத் தொடங்கினேன்.
ஹா ஹா ஹா… தாங்க்ஸ் மாம்ஸ்! பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கினேன்.
எ… என்ன மதன்?
இல்லை, நீங்க சொல்ற வரைக்கும் எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஆனா, நீங்க சொன்னதுக்கப்புறம்தான், எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு. எனக்கும் நாளைக்கு காலைல வரைக்கும் டைம் இருக்கு. அப்ப ட்ரை பண்ணா, என்னோட ஒன் க்ரோரை சேவ் பண்ணிடலாமே? அந்த ஐடியா கொடுத்ததுக்கு தாங்க்ஸ் மாம்ஸ்!
மதன்… கோபமாகக் கத்தினான் மோகன்.
என்ன மாம்ஸ்?
நீ யாரைப் பத்தி பேசுற தெரியுமா? என் ஒய்ஃபைப் பத்தி!
சோ வாட் மாம்ஸ்? நீங்களே அத்தையை மதிக்கிறதில்லை. அப்புறம் நான் ட்ரை பண்ணா என்ன? சரி உங்களுக்கு ஒரு கோடி வேணாம்னா, எனக்கு ஓகே! எனக்கென்ன வந்ததது? என் பணம் எனக்கு சேவ்!
ஒரு கோடி இல்லை என்றவுடன், அவன் கடுப்பானான். மதன் இது சீட்டிங். நீ தோத்துட்டேன், காலையில தர்றேன்னு சொன்ன?

Raji ma wait ur mail