சிரித்தாள் ” இப்ப நான் எப்படிடா இருக்கேன்..?”
”பேய் மாதிரியே இருக்க…”
”பரதேசி. ..” என செல்லாமாக அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.
”அம்மா எப்பக்கா வரும்..?”
” ஏன்டா..?”
”அம்மா இல்லாம.. கஷ்டமாருக்கு..”
அவன் முகத்தைப் பார்த்தாள் உமா. அவன் முகம் லேசாக வாட்டமுற்றிருப்பது தெரிந்தது.
ஆனால் அவளுக்கு…?
அம்மா இல்லாதது எந்த வகையிலும் வருத்தமாகவே இல்லை.
அவனே கேட்டான் ”இன்னும் ரெண்டு நாள்ள வந்துருமா..?”
”ம்… வந்துருவா..”
”ஊர்ல.. சொந்தக்காரங்க எல்லாம் நெறைய இருக்காங்களா.. நமக்கு…?”
”உம்…”
”அப்றம் ஏன்.. யாருமே வரதில்ல… நாமளும் போறதில்ல…?”
”இதெல்லாம் உங்கம்மா வந்த பின்னால… அவளையே கேளு..!”என்றுவிட்டுக்கடைக்குப் போனாள்.
கடையில் மஞ்சுளாவின் கணவன்.. குருமூர்த்தி நின்றிருந்தான்.
” என்னது கடைப்பக்கம்..” என உமா கேட்டாள்.
”வா உமா.. வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா..? ” எனச் சிரித்தான்.
” ஓ..”
” உங்கம்மா இன்னும் வல்லியா..?”
”ம்கூம். ..”
”அப்ப ஜாலிதான். .”
”என்ன ஜாலி..?”
”எல்லாமே…”
” ஆமா…அப்படியே….”
ரகசியமாக ”சினிமா போலாமா..?” எனக் கேட்டான்.
அவனைப் பார்த்து.. ”நாக்க தொங்கப்போட்டுட்டு அலையாம… ஒழுக்கமா இருங்க.. இல்லேன்னா உங்க வீட்ல எவனாவது பூந்துருவான்..” என்றாள்.
”ஒட்ட நறுக்கிர மாட்டேன்.?” என்றான்.
”அப்ப.. உங்கள என்ன பண்ண..?”
”அ…அது.. நீ விரும்பறதால..”
”இந்த மாதிரி… அந்தக்காளும் ஆசைப் பட்டா…?”
திடுக்கிட்டு ”நீ பேசறது நல்லால்ல..” என்றான்.
” உங்களுக்கா..?”
”என் பொண்டாட்டி ஒரு நாளும் அப்படி பண்ண மாட்டா..”
”ம்…?” அவனை உறுத்துப் பார்த்தள்.
”ம்..!” என அழுத்திச் சொன்னான்.
” ஓ..! ஆனா..பண்ணினா என்ன தப்புனு நெனைக்கறளவுக்கு.. நீங்க நடந்துக்க கூடாது…அதப் புரிஞ்சுக்கோங்க.. மொதல்ல..” என்றாள்.
” நீ ரொம்ப வெவகாரமானவதான். .” என்று விட்டுப் போனான்.
மளிகைச் செலவு எல்லாம் வாங்கியபின்…
திடீரென்றுதான் தோண்றியது அவளுக்கு. .!
காயின் பாக்சில்..காசைப் போட்டு.. ரிசீவரை எடுத்து.. எண்களை அழுத்தினாள்.
ரிங்காகி… எடுத்து. ..
”அலோ…” என்றது.. சந்தியாவின் குரல்.
உமா பேசவில்லை.
மறுபடி… சந்தியா ”அலோ..” என்க..
குரலைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு ”ஹெலோ..” என்றாள்.
”அலோ… யாரு…?”
ரிசீவரைக்கொஞ்சம் தள்ளிப் பிடித்து.. ”நீங்க யாரு..?” எனக் கேட்டாள்.
”நான் சந்தியா.. உங்களுக்கு யாரு வேனும்…?”
”கணேஷ்..?” என்றாள். சந்தியாவின் கணவன்தான் கணேஷ்.
”அவரு… ஆமா… நீங்க யாரு..?”
”அவருக்கு வேண்டியவ.. சரி.. நீங்க..?”
”நான் அவரோட ஒய்ப்.. உங்க பேரு…?”
”என்னது.. அவரோட.. ஒய்ப்பா..?” அதிர்வது போலக் கேட்டாள்.
” ஆமா…! உங்க பேரு..?”
”ஹலோ.. வெளையாடறீங்களா.. இன்னும் கல்யாணமாகலேன்னு.. கணேஷ் என்கிட்ட.. சொன்னாரு..?”
”அப்படியா..? மொதல்ல நீங்க யாருனு சொல்லுங்க..”
”கணேஷ்க்கு ரொம்ப வேண்டியவ..”
”எப்படி…?”
”ஆ..! பொண்டாட்டினு சொன்ன இல்ல.. அந்த பிராடையே கேளு… ஸ்வீட்டி யாருனு..” என்றுவிட்டு உடனே ரிசீவரை வைத்துவிட்டாள் உமா.
கடையை விட்டுப் போகும்போது.. சிரிப்பு சிரிப்பாக வந்தது.
கணேஷ் தலை உருளப்போகிறது… உருளட்டும்..!!
‘ வஞசகரின் நெஞ்சங்கள்… நிம்மதியாக இருக்கவே கூடாது…!’ என மனதுக்குள் எண்ணிக்கொண்டாள் உமா…..!!
இரவு எட்டரை மணிக்கு மேல் போன் செய்தான் கார்த்திக்.
உமா மட்டும்தான் வீட்டில் இருந்தாள்.
எடுத்ததும் ” ஹாய்… அரை லூசு..” என்றான்.
” ஹாய்…” சிரித்தாள்.
” என்ன பண்ணிட்டிருக்க..?”
” வீட்லதான் கார்த்தி…!”
” சாப்டாச்சா…?”
” ம்கூம்…நீ..?”
” இல்ல… இனிமேதான்..!”
” அப்றம்… எங்கருக்க..கார்த்தி..?”
”வீட்ல…”
” எப்ப வருவ..?”
” ஏய்… இப்ப நான் என் வீட்லதான் இருக்கேன்..” என்க..