ஒரு மணி நேர நடைப் பயணத்துக்குப் பிறகு, கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்த போது இரவு மணி 7.
தூக்கத்தில், இப்படி ஒரு பகல் கனவை கண்ட நான், திடுக்கிட்டு கண் விழித்து, “ச்சே… நேரம் போனது கூட தெரியாமல் இப்படி தூங்கி விட்டோமே என்று எனக்கு நானே வருத்தப்பட்டு, கடிகாரத்தைப் பார்த்த போது, இரவு மணி 7.
‘எங்கே போனவங்களைக் காணோமே, ரொம்ப தூரத்துக்கு போய்ட்டாங்களோ’ என்று யோசித்துக் கொண்டே, பாத் ரூம் சென்று முகம் கை கால் கழுவி, ஒரு சுடிதாரை எடுத்துப் போட்டுக் கொண்டு, மிதமான மேக்கப் செய்து, அறைக் கதவை சாத்தி விட்டு, ரிசெப்சன் லான்ச்சுக்கு வந்தேன்.
ரிசெப்சன் லான்ச்சிலிருந்த சோஃபாவில் உட்கார்ந்து, அங்கே கிடந்த ஒரு தினசரி செய்தித் தாளை படித்துக் கொண்டிருக்க,… ஹோட்டல் கார் பார்க்கிங்கில் உங்க கார் வந்து நின்றது.
நீங்க மூனு பேரும் காரிலிருந்து இறங்கி வர, அர்ச்சனா, முகத்தில் சந்தோஷத்தோடு நடந்து வந்து, ”என்னடி மீனா. ரொம்ப போரடிச்சிடுச்சா? இங்கே வந்து உக்காந்துட்ட? அதுக்குதான் உன்னை தனியா இருக்க வேண்டாம். எங்க கூட வான்னு சொன்னோம். சரி, வாடி ரூமுக்கு போகலாம்” என்று சொல்லி என் கை பிடித்து இழுத்தவளைத் தடுத்து, கொஞ்ச நேரம் இங்கே உக்காருடி. உங்கிட்டே தனியா பேசணும். அவங்க ரூமுக்கு போகட்டும்” என்று சொல்லி, அவள் கை பிடித்து இழுத்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன்.
அர்ச்சனா என் அருகில் சோஃபாவில் உட்கார, அதை புரிஞ்சுகிட்டு,”சரி, அர்ச்சனா, நீ மீனா கூட பேசிக்கிட்டு இரு. நாங்க ரூமுக்கு போய் ரெஃப்ரெஷ் செஞ்சிட்டு வந்திடுறோம்” என்று சொல்லியபடி, நீங்களும் ரமேஷும் ரூமுக்கு போனீங்க.
“ஆமாம்டி,…தனியா எவ்வளவு நேரம்தான் தூங்கிறது. தனியா இருக்கிறது சுத்த போர். பேசாம, கஷ்டத்தை சமாளிச்சிகிட்டு உங்க கூட வந்திருக்கலாம். இவ்வளவு நேரம். நீங்க எல்லோரும் வந்துடுவீங்க வந்துடுவீங்கன்னு பாத்து பாத்து காத்துக் கிடந்து, கண்ணெல்லாம் பூத்துப் போச்சு. ஆமாம், ஏன் இவ்வளவு லேட் அர்ச்சனா?”
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part