சத்தம் போடாதே – 3 61

“ப்ரோமிஸ் செல்லம்” அங்கேயே கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

கடந்த காலம்

நான் ஹைதராபாத் சென்று என்னுடைய ட்ரைனிங்கில் மும்முரமாக ஆனேன். மேகாவின் போன் நம்பேரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ட்ரைனிங் காலம் என்பதால் உடனே விடுமுறை அளிக்க மறுத்தனர் அதனால் அவளை என்னால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. இரண்டரை மாத காலம் அவள் நினைவாகவே ஓடியது. அவளை பார்க்காமல் அவளின் குரலை கேட்காமல் தனிமை என்னை வாட்டி வதைத்தது.

முன்பே சொல்லி வைத்ததில் ஒரு அடுத்த வாரம் மட்டும் ஒரு நாள் லீவு போட அனுமதி கொடுத்தனர். மேகாவின் வீட்டிற்கே சென்று பார்த்து பார்த்து வரலாம் என்று டிக்கெட் முன் பதிவு கொண்டு இருக்கும் போது எனக்கு ஒரு பழக்கமில்லாத நம்பரில் இருந்து கால் வந்தது.

“ஹலோ”

மறுமுனையில் அழுகுரல் மட்டுமே கேட்டது.

“ஹலோ மேகா மேகா பேசு மேகா ஏன் அழுவுறே” அவள் அழும் குரலை கேட்ட எனக்கு தானாகவே அழுகை வந்தது.

“அருண் ஐ லவ் யு” அழுகையினூடே சொன்னாள்.

“ஐ லவ் யு டூ, உன்னோட வாய்ஸ் கூட கேட்காம எவ்ளவோ கஷ்டமா இருந்திச்சு தெரியுமா.

“நீ ஹைதெராபாத் கிளம்பிய அடுத்த நாள் வீட்டுல நம்ம லவ் மேட்டர் சொன்னதில் இருந்து வீட்டிலே ஒரே ப்ரொப்லெம் அருண். என்னை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி வச்சிட்டு போன், இன்டர்நெட் எல்லாம் கட் பண்ணிட்டாங்க. இப்போ தான் என்னோட கசின் திருட்டுதனமாக அவளோட போனை கொடுத்தா, உடனே உனக்கு பண்ணினேன் அருண். உன்னோட ஞாபகம் மட்டும்தான் என்னை தற்கொலை பண்ணிக்காம இருக்க வச்சது” அழுதாள்.

“தற்கொலையா என்ன இது லூசு மாதிரி..”

“அருண் எனக்கு நாளைக்கு காலையில கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. நீ என்னை எப்படியாச்சும் வந்து கூட்டிட்டு போடா”

“என்னது விடிய காலையிலயா.. பஸ்ல கிளம்பினா வர மதியம் ஆகிடும் அதனாலே பிளைட்ல தான் வரணும். நான் புக் பண்ணிட்டு 5 நிமிசத்துல கால் பண்ணுறேன். வெயிட் பண்ணு”

அன்று இரவு ஒரு பிளைட்டும் இல்லை. மணி இரவு 9.30 ஆகி இருந்தது. விடியற்காலைக்குள் சென்னை அடைவது முடியாத காரியம். உடனே கார்த்திக்கிற்கு போன் செய்தேன்.

“என்னடா மச்சி” என்றான்.

அவனிடம் நிலைமையை எடுத்து சொன்னேன்.

“நான் இருக்கிறப்போ என்ன பயம் மச்சி. நான் இப்பவே சென்னை கிளம்புறேன் மேகாவை தூக்கிட்டு திருப்பதி வந்துடறேன், நீயும் கிளம்பி திருப்பதி வந்திடு. அங்கேயே வச்சி கல்யாணத்தை முடிச்சிடலாம்”

“டேய் இதுல ஏதும் ப்ரோப்லேம் வராதே”

“நீயும் மேஜர் அவளும் மேஜர் வேறென்ன ப்ரோப்லேம் இருக்கு”

“இல்லை அவங்க அப்பா அம்மா”

“அவனுங்க என்ன மினிஸ்டரா என்ன”

“இல்லை கவர்மெண்ட் எம்பலோயீஸ்னு மேகா சொல்லி இருக்கா”

“நீ எதையும் பத்தி கவலை படாதே மச்சி நான் பார்த்துக்கறேன். அவளை போனை மட்டும் கையில வச்சிக்க சொல்லு”

“ஹ்ம்ம்”

“நீ ஒன்னும் பீல் பண்ணாம திருப்பதி வா. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சா பார்ஸ்ட நைட் வேற. ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா எழும்பாது, புரியுதா மச்சி” என்று அவனுக்கே உரிய ஸ்டைலில் சொல்லவிட்டு போனை கட் செய்தான். அட்ரினலின் ரஷ் தரும் போதையை விரும்புபவன் கார்த்திக், அவன் எப்படியும் மேகாவை கூட்டி கொண்டு வந்துவிடுவான் என்பது எனக்கு தெரியும். மேகாவிற்கு தைரியமூட்டி போனை மட்டும் வைத்திருக்க சொல்லி விட்டு திருப்பதி கிளம்பினேன். விடியற்காலையில் திருப்பதி போய் ஒரு ரூம் எடுத்து விட்டு கார்த்திக்கின் போனிற்காக காத்து கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் போனடித்தான்.

“டேய் மேகாவோட அப்பா அம்மா எல்லாம் கவர்ன்மென்ட் ஆஃபீஸர்னு சொன்னே”

“அவ சொன்னது தாண்டா சொன்னேன்”

“ரெண்டு பேருமே பெரிய இடம்டா, ஜெனரல் செகிரேட்டரி லெவல். மினிஸ்டர் எல்லாம் ரொம்ப பழக்கம் வேற. சுத்தி எக்க சக்க போலீஸ் அது இல்லாம பெரிய ரௌடி கும்பல் வேற. ”

“அய்யயோ. டேய் அப்போ மேகாவை கூப்பிட்டு வரலையா”

“ஹாஹாஹா என்னை நம்பி சொல்லிட்டே. எப்படியோ மூட்டையில கட்டி தூக்கி வந்துட்டேன். பாவம் அவ தான் கொஞ்சம் கஷ்ட பட்டுட்டா”

“உனக்கு தான் கார்த்தி இதுல ரொம்ப கஷ்டமே” மேகாவின் குரல் கேட்டது.

“மச்சி மேகா கிட்ட போன் கொடு”

“அடப்பாவி அருண் பிகரு வந்தவுடனே நண்பனை கழட்டி விட்டியே”

“ஹெலோ அருண் சொல்லுடா”

“ஐ லவ் யு. சீக்கிரம் வா மேகா உன்னை கட்டிபிடிக்கணும் போல இருக்க”

“டேய் அதெல்லாம் எல்லாம் கல்யாணத்தை முடிச்சிட்டு பண்ணிக்கலாம். என் போன் கார் ஸ்டெரியோ கூட கனெக்ட் ஆகி இருக்கு பார்த்துக்கோ”

“சீஸ்”

“சரி இவனுங்க பின்னாடியே பாலோ பண்ணி வராத மாதிரி கொஞ்சம் சுத்த விட்டுதான் வரணும். நீ கல்யாணத்துக்கு எல்லாம் ரெடி பண்ணி வை”

நான் கல்யாணத்துக்கு தேவையான அனைத்தயும் வாங்கி தயாராக வைத்துவிட்டு அம்மாவுக்கு போன் செய்தேன்.

“அம்மா”

“சொல்லுடா கண்ணு. படிப்பு எல்லாம் எப்படி போகுது”

“படிப்பு இல்லமா, ட்ரைனிங்”

“அதுதான். என்ன கண்ணு இந்நேரத்துல போன் பண்ணி இருக்கே”

“அம்மா நான் மேகான்னு என் கூட படிக்குற பொண்ண காதலிக்குறேன்னு சொல்லி இருந்தேன்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க அதனால அவள தூக்கிட்டு வந்து அவசர அவசரமா கல்யாணம் பண்ணப் போறேன். உங்க ஆசீர்வாதம் வேணும்”

“நீ மகராசனா இருக்கணும் கண்ணு”

“சரி மா நாம் எல்லா பிரச்சனையும் அடங்கின உடனே வீட்டுக்கு அவள கூட்டிட்டு வரேன்”

“சரி கண்ணு நீ பாத்து பத்திரமா இரு”.

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.