சசி போடா வேலைய பாத்துட்டு 1 545

‘சரிம்மா ஆனது ஆயிடிச்சி. இனி என்ன அழுதாலும் கோதண்டம் திரும்ப வரமாட்டான். வயித்து புள்ளக்காரிய ரொம்ப அழ வைக்காதீங்க. ஆக வேண்டிய வேலைய பாருங்க. இனி எல்லாம் உங்களுக்கு ஹரிஷ் தான். ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருந்துக்க வேண்டியதுதான்’ ஒரு பெரியவர் மௌனத்தை கலைத்தார்.

ஹரிஷ் எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு வீட்டிருக்கு வரும்போது வீடே மாறி இருந்தது. இன்று காலை தான் பள்ளிக்கு செல்லும்போது கலர் டிவி போல் காட்சி அளித்த வீடு இப்பொழுது ப்ளாக் & ஒய்ட் டிவி போல் மாறி இருந்தது. வீடு மட்டும் அல்ல திவ்யா அம்மாவும் அப்படித்தான் இருந்தாள். காலையில் உடுத்தி இருந்த மஞ்சள் நிற சேலை இப்பொழுது வெள்ளை நிறமாகி இருந்தது. ஹாலில் ஒரு பக்கத்தில் திவ்யா அம்மா உக்காந்திருந்தாள். வலது பக்கத்தில் செண்பகம் பாட்டியும் இடது பக்கத்தில் சாந்தி சித்தியும் உக்காந்திருந்தார்கள். சித்திக்கு பக்கத்தில் காயத்ரி அழுத முகத்தோடு அமர்ந்திருந்தாள். விஷ்வா வீட்டு திண்ணையில் உக்காந்திருந்தான். எல்லாம் ஒரே நாளில் மாறி போனது.

ஹரிஷ் தான் முதலில் பேசினான், ‘அம்மா இந்த வெள்ளை சேலை கட்டாதம்மா’. திடீர் என்று அவன் இப்படி கூறியது எல்லோர் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பியது. அவன் குரலில் இது நாள் வரை இல்லாத தோரணை இருந்தது. எதோ ஆர்டர் போடுவது போல் இருந்தது அவன் குரல்.

செண்பகம் தான் பதில் சொன்னாள், ‘அப்பா காரியம் முடியிற வரைக்கும் தான்டா அப்புறம் அம்மா வேற சேலை கட்டிப்பா’.

‘அதெல்லாம் வேண்டாம், இப்போவே மாத்து பாட்டி’ கட்டளையிட்டான்.

‘அது சரிதான், இனிமே வீட்டுக்கு ஆம்பள அவன்தானே, அவன் சொல்ற படி நடந்துக்கோங்க இல்லனா கோவம் வந்திட போகுது. வீட்டு ஆம்புலய கோவ படமா பார்த்துக்கோங்கம்மா’ என்று ஒரு சொந்தக்கார பாட்டி கிண்டலடிக்க கூடி இருந்த எல்லோரும் ‘அது சரிதான்’ என்று சிரித்தனர்.

செண்பகம் தான் ஒரு முடிவு எடுத்தவளாய் எழுந்தாள். திவ்யாவை அழைத்துக்கொண்டு உள்ளறைக்கு சென்றாள். சாந்தியும் காயத்திரியும் பின்னாடியே போனார்கள். ‘இந்தாடி உன் பையன் சொல்ற மாதிரி சேலைய மாத்து’ என்றாள்.

‘என்னம்மா அவரு காரியம் கூட முடியல அதுக்குள்ளே வெள்ளை சேலைய அவுக்க சொல்ற’

‘இதோ பாரு திவ்யா, உன் புள்ளைக்கு நீ வெள்ளை சேலை கட்டுறது பிடிக்கல, சொந்தக்காரங்களே மாத்துன்னு சொல்லும்போது நீ என் சங்கட படுற. நீ வெள்ளை சேலையெல்லாம் கட்டக்கூடாது. வயித்து புள்ளக்காரி வேற, சேலை கட்டும்போது வயித்த பாத்துட்டு இதுக்கு அப்பன் இல்லையேன்னு நீயும் ஏங்கி போய்டக்கூடாது. கோதண்டம் இறந்துட்டான் இனிமே அவன் வர மாட்டான். அவன் இருக்கும்போது கூட வேலை வியாபாரம்னு தான் இருந்தான். அதனால இந்த வீட்டை பொருத்தவர இதுக்கு முன்னாடியும் நாம மூணு பேருதான் இனிமேலும் நாம மூணு பேருதான். இனிமே ஹரிஷ் சொல்ற படி நடந்துக்க பாரு. நமக்கு மட்டும் இல்ல, வயித்துல இருக்குற புள்ளைக்கும் இந்த வீட்டுல ஒரு ஆண் துணைன்னு சொன்னா அது இனிமே ஹரிஷ் தான். அதனால அவன் சொல்ற மாதிரி சேலைய மாத்து’. அறிவுரை போல பேசி முடித்தாள் செண்பகம்.

2 Comments

    1. Story semmya irukula

Comments are closed.