கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 47 28

“…”

“சொல்லுடீ…” சீறினான் அவன். சுகன்யாவின் உடலைச் சுற்றியிருந்த அவன் கரங்கள் அவள் உடலிலிருந்து நகர்ந்துவிட்டிருந்தன. தன் தலைமுடியை அவன் கோதிக்கொண்டிருந்தான்.

“செல்வா நீ என்னை சும்மா சும்மா முன்னும் பின்னும் பேசி இன்னைக்கு வம்புக்கு இழுக்கறே? தயவு செய்து இப்ப கொஞ்ச நேரம் பேசாம இரு…!” அவள் அவன் முகத்தை விருட்டெனப் பற்றி இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நோ.. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்…?” அவள் முகத்தை அவன் விடாப்பிடியாக விலக்கினான்.

“செல்வா… உனக்குத்தான் மிடில் கிளாஸ் வேல்யூஸ்ல்லாம் ஒரு கண்தொடைப்பா தெரியுதுல்லே?”

“யெஸ்… இப்பல்லாம் எனக்கு அப்டீத்தான் தெரியுது?!’

“உன் தங்கச்சி மீனாவை, போனவாரம், சீனு தன்னோட வெளியில அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னப்ப நீ அவங்ககிட்ட என்ன சொன்னே?” சுகன்யாவின் குரலில் உஷ்ணம் ஏறியது. அவள் அவன் தோலை ஆரஞ்சு பழத்தின் தோலாக எண்ணி உரிக்கத்தொடங்கினாள்.

“எங்க மூணு பேரு நடுவுல நடந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்குன்னா.. நான் என்ன சொன்னேன்னும் உனக்கும் தெரிஞ்சிருக்கணுமே…” செல்வாவின் குரல் எகத்தாளமாக வந்தது.

“தெரியும் டியர்… அதுவும் தெரியும்..”

“ம்ம்ம்… தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம்…” சற்று முன் அவன் குரலில் இருந்த எகத்தாளம் இப்போது முற்றிலுமாக இல்லை.

“நீ என்னச் சொன்னேங்கறதை உனக்கு நான் ஞாபகப்படுத்தறேன்.
“மீனா… உன் படிப்பு முடியற வரைக்கும் நீயும், சீனுவும் கொஞ்சம் பொறுமையா, இருங்கன்னு’ நீ புத்தி சொன்னே.. ஈஸ் தட் ரைட்…? இது நடுத்தரக்குடும்பத்துல பொறந்த நீ திருமணங்கற இஸ்யூவுல வெச்சிருக்கற வேல்யூஸ்ன்னு நான் நினைக்கறேன்…. நான் சொல்றது சரிதானே?” சுகன்யா தன் உதடுகளில் பூத்த புன்னகையை சிரமப்பட்டு நிறுத்தினாள்.

சுகன்யா நிஜத்தில் தன்னை கேலி செய்கிறாள் என்பதனை சரியாகப் புரிந்து கொண்ட செல்வா அதுவரை அவளிடம் ஏளனமாக பேசிக்கொண்டிருந்த தன்னால் அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாததை நினைத்து சிறிதே வருத்தத்துடன் தன் தலையை குனிந்து கொண்டான்.

“ஏன் உனக்கு வாய் அடைச்சுப் போச்சு…? உன் தங்கச்சின்னா உனக்கு மிடில் கிளாஸ் வேல்யூஸ் வேணும்… அவளுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது… ஆனா சுகன்யாவுக்கு அந்த வேல்யூஸ்ல்லாம் தேவையில்லே… அப்படித்தானே நீ நினைக்கறே?

சுகன்யாவும் அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசி அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றத்தொடங்கினாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு, அவளுடன் பிறந்த அவள் பிடிவாதம், மூர்க்கம், அன்று வெளியில் தலைக்காட்ட ஆரம்பித்தது.

“…”

மீனா வேற.. சுகன்யா வேறேன்னுதானே நீ நினைக்கிறே? ஒரே இஸ்யூவுல உன்னுடைய அணுகுமுறை வேறு வேறாத்தானே இருக்கு?”

“…”

செல்வா சுகன்யாவை தன் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு நீ பாக்கிறியா?”

“மீனா என் ஃப்ரெண்ட்.. மீனா என்னைத் தன்னோட வெல்விஷரா நினைக்கறா… அவளும் நானும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், நாங்க எங்கேயிருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் எங்களுக்குள்ள மனசு விட்டுப் பேசிக்கிறோம்..”

“என் அண்ணன் செல்வா எவ்வளவு நல்லவன் தெரியுமான்னு மீனா உன்னைப் பத்தி அன்னைக்கு மதிப்போட பேசினா… அதைக் கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப பெருமிதமா இருந்தது… என் செல்வா பொறுப்பானவன்… எனக்கு புருஷனா வரப்போறவன் எவ்வளவு நல்லவன்னு நானும் சந்தோஷப்பட்டேன்… இப்பத்தான் புரியுது நான் ஒரு பைத்தியக்காரின்னு…”

“என் ஃப்ரெண்ட் வேணி சரியான நேரத்துல எனக்கு புத்திமதி சொன்னா…” சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

“வேணி என்னச் சொல்லியிருக்கப் போறா? என்னைப் பாத்தா ஒரு அயோக்கியன் மாதிரி இருக்கான்னு சொல்லி அனுப்பினாளா?”

“செல்வா.. அவளைபத்தி உனக்குத் என்னத் தெரியும்… அவ மனசு தங்கம்… உனக்குத் தெரியாத ஒருத்தரைப் பத்தி எப்பவும் நீ தப்பா பேசாதே.. ப்ளீஸ்..” அவள் அவனை நோக்கி தன் கையை அசைத்து அவனைப் பேசவிடாமல் தடுத்தாள்.

5 Comments

  1. Kat dennings

  2. Please stop this story episodes and start new …this story not good

  3. It’s a Very good love Story. Please complete it.

  4. Pl. Complete this story. It’s a fine love Story.

  5. I want the remaining part of the story so make it continue further
    I like this story very much and it’s a rare good story

Comments are closed.