கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 14

“அப்பா… நீங்க கோபப்படலேன்னா ஒரு விஷயம் சொல்லட்டுமா?

“சொல்லுடா… உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லப்பா..”

“என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மனசார ஆசைப்படறா… அவதான் நான் குடிக்கக்கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா…”

“டேய் சீனு… நான் வளத்தப் புள்ளை நீ, உனக்கு என்னடா கொறைச்சல்…’என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு’ ஏன்டா உன்னையே நீ குறைச்சுப் பேசிக்கறே?” விருட்டென எழுந்த உஷா அவன் பக்கத்தில் உட்க்கார்ந்து அவன் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

“சீனு… யாருடா அந்தப் பொண்ணு…?” பத்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

“நீங்க சரின்னு சொன்னா, அவளை நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்… உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்…”

“உன் கூட வேலை செய்யறாளாடா..?” உஷாவுக்கு பொறுக்கமுடியவில்லை.

“இல்லத்தே.. படிச்சிக்கிட்டு இருக்கா…”

“படிக்கறான்னா… ரொம்பச் சின்ன பொண்ணா இருப்பாளேடா..? நம்ம ஜாதிதானேடா?” பத்மா குறுக்கிட்டாள்.

“அவனை பேசவிடுங்களேன்டீ… என்னை குறுக்குல பேசாதேன்னீங்க… நீங்க ரெண்டு பேரும் நடுவுல நடுவுல… குதிக்கறீங்க..” சற்றே எரிச்சலடைந்தார், ராகவன்.

“பைனல் இயர் இஞ்சினீயரிங் படிக்கறா… கடைசி செமஸ்டர்… இப்பவே ஒரு விஷயம் சொல்லிடறேன்… அந்த பொண்ணு நம்ம இனத்தை சேர்ந்தவ இல்லே… சைவக்குடும்பத்துல பொறந்தவ… ப்யூர் வெஜிடேரியன்… அவங்க குடும்பத்தை எனக்கு நல்லாத்தெரியும்… அவ நம்ம வீட்டுக்கு வந்தா
“ சீனு தயங்கி தயங்கி பேசினான்.

“வந்தா…?” உஷா முடிக்காமல் நிறுத்தினாள்.

“ரொம்ப பிராக்டிகல் மைண்ட் அவளுக்கு… நம்ம வீட்டு பழக்கங்களை சட்டுன்னு புடிச்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு..?”

“அண்ணீ… சீனு யாரைப்பத்தி சொல்றான்னு இன்னுமா உங்களுக்குப் புரியலே?” உஷாவின் குரலில் குதூகலம் பொங்கியது.

“அத்தே… உங்களுக்கு புரிஞ்சுப் போயிருந்தா… ப்ளீஸ் இப்ப சொல்லாதீங்க அத்தே.. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டும்… ப்ளீஸ்.. அத்தே..” சீனு அத்தையிடம் கெஞ்சினான்.

“யாருடா… எனக்கு நிஜமாவே தெரியலடா… சொல்லுடா..” பத்மா முகத்தில் குழப்பமும், தன் மகனை உருப்பட வைக்க முயலும் அந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் முகத்தில் தோன்றப் பேசினாள்.

“டேய் சீனு… அந்த பொண்ணு சொல்லித்தான்… நீ உன் தலை முடியை ஒட்ட வெட்டி, உன் மீசை, ஆட்டுக்கடா தாடி, எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டியா?” ராகவன் தன் கண்களில் ஒரு குழந்தையின் குறும்பு மின்னுவதைப் போல உற்சாகத்துடன் வினவினார்.

“ஆமாம்பா…” அவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரவா என்ற கேள்வி சீனுவின் முகத்தில் பூரணமாக எழுந்திருக்க, அவன் தன் தந்தையின் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.

“சீனு… உன் வயசு வேகத்துல, அர்த்தமில்லாம, நீ பண்ண சில காரியங்கள் எனக்கு பிடிக்கலை. அவைகளை என்னால ஜீரணிக்க முடியாம சிரமப்பட்டேன்… உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத்தனமாவும் நடந்துகிட்டேன்…”

“அப்…அப்பா..”

“ஒரு பொண்ணு உன்னை விரும்பறா; அவளுக்கும் நீ பண்ற காரியங்கள் பிடிக்கலை; ஆனா அவ உன்னை, உன் போக்கை, ஓரளவுக்கு மாத்தியிருக்கான்னா, அந்த பொண்ணு கண்டிப்பா என் மனப்போக்குக்கு ஒத்து வர்ற பொண்ணாத்தான் இருக்கணும்… ஒரு நல்லக்குடும்பத்துல பொறந்த கொழந்தையாத்தான் இருக்கணும்..”