கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 14

“ம்ம்ம்…” செல்வா சீனுவை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

“பொண்ணு காஞ்சிபுரமாம்.. அம்மா காலையிலப் பேச்சை எடுத்தவுடனே… நான் ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு பட்டுன்னு சொல்லிட்டேன்…

“ம்ம்ம்ம்…” செல்வா முனகினான்.

“யாருன்னாங்க…!!” சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு செல்வாவின் கையைப் பற்றிக்கொண்டான்.

“உன் அப்பாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பறது என் தங்கச்சி மீனாட்சின்னு அப்ப சொல்லலியா?” சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசினான் செல்வா.

செல்வாவுக்கு பதில் சொல்லாமல், வீட்டு கேட்டுக்கு வெளியில், அவன் பைக்குக்கு காவல் காப்பதைப் போல் நின்று, தன் வாலை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்த நொண்டிக் கருப்பனை ஒரு முறைப் பார்த்தான், சீனு. ஒரு நிமிடத்திற்கு பின் மீண்டும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

“நான் விரும்பறப் பொண்ணு நம்ம ஜாதியில்லே… ஆனா உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்… அந்தப் பொண்ணோட குடும்பத்தாரோட எனக்கு ரொம்ப நாளாப் பழக்கம்… அவளை நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து காட்டறேன்னு ஏதோ ஒரு மூடுல திடு திப்புன்னு உளறிட்டேன்…”

“அப்புறம்…”

“அப்பாவும்
“உன் சந்தோஷம்தாண்டா முக்கியம்… இன்னைக்கு நாள் நல்லாருக்கு’ அவளை அழைச்சிட்டு வாடான்னுட்டார்.. அதான்…” சீனு பேசமுடியாமல் தவித்தான்.

“அதனாலே…”

“மீனாவை நான் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போக விரும்பறேன்… பத்திரமா ஒரு மணி நேரத்துல அவளைத் திரும்ப கொண்டாந்து நம்ம வீட்டுல விட்டுடறேன்… இதுக்கு நீ பெர்மிஷன் குடுக்கணும்…” சீனுவின் குரல் சட்டெனத் தழுதழுத்தது.

“சீனு இந்தாங்க காஃபி… செல்வா நீயும் எடுத்துக்க…” என்ன நடக்குது இங்க… சீனு ஏன் குரல் குளறி குளறிப் பேசறான்… நடப்பது புரியாமல் அவர்களைப் பார்த்த மீனா, காஃபி கோப்பைகள் இருந்த டிரேயை நீட்டினாள்.

செல்வா, மீனாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான். ம்ம்ம்ம்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.
“மீனா ஒரு நிமிஷம் இப்படி உக்காரும்மா…’ தன் தங்கை மீனாவின் இடது கையை பற்றி தன்னருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

“சீனு… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா… அயாம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ… உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க ஒருத்தன் குடுத்து வெக்கணும்டா…” மீனாவையும், சீனுவையும் ஒரு நொடி மாறி மாறிப் பார்த்தான்.

“மீனா…”

“சொல்லுங்க அண்ணா..” மீனாவின் குரலில் மரியாதை எக்கச்சக்கமாக ஏறி ஒலித்தது.

“சீனுவோட வீட்டுக்கு நீ இதுக்கு முன்னாடி என் கூட வந்திருக்கே… ஆனா சீனு இன்னைக்கு ஏதோ ஸ்பெஷலா உன்னை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணுங்கறான்… அதுக்கு என் பர்மிஷன் கேக்கறான். நீ என்ன சொல்றேம்மா?”

“என்ன சீனு இதெல்லாம்..” ஒன்றுமே தெரியாதது போல் மீனாவும் தன் பாத்திரத்துக்கான வேஷத்தை சரியாக அரங்கேற்றினாள். தன் காதலன் சற்று முன் தன்னைப் பார்த்து கண்ணடித்து சொல்லிக்கொடுத்த வசனத்தை சரியாக ஒப்புவித்தாள்.

“சீனுவோட அப்பா உன்னைப் பாக்கணும்ன்னு சொன்னாராம்… அவர் எது சொன்னாலும், சொல்றதை அமைதியா கேட்டுக்க… எதுவாயிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அம்மா, அப்பாக்கிட்ட அவரை பேச சொல்லு…”

“சரிண்ணா…” மீனா மெல்ல முனகினாள்.

“அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க…”
“பொறுமை’ என்ற சொல்லை ஒரு அண்ணணுக்கே உரிய முறையான பொறுப்புடன் தன் தங்கைக்கும், தன் தங்கையின் காதலனுக்கும் பொதுவாக சற்றே அழுத்தமாகச் சொன்னான், செல்வா.

“தேங்க்யூடா செல்வா…” சீனு அவன் கையை அழுத்திக் குலுக்கினான்.

சீனு, பைக்கை ஒரே உதையில் உதைத்து கிளப்பினான். மீனா அவன் பின்னால் பைக்கில் ஏறி உட்க்கார்ந்ததும், வண்டியை வேகமாக கிளப்பி, தெருமுனையை நொடியில் கடந்து மெயின் ரோடுக்கு வந்தான். மீனா அவன் முதுகில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்.

“சீனு மெதுவா போப்பா… பைக்கை ஏன் இப்படி ஸ்பீடா ஓட்டறே?”

“ஸ்பீடா போனா உனக்குப் பிடிக்கலையா?”

“பிடிக்குது ஆனா… மெல்ல போனா… மஜாவா இருக்கும்ன்னு தோணுது…”

“உன் இஷ்டம்டீ மீனு…”

“உன் கூட, பைக்ல நான் எத்தனையோ தடவை செல்வாவோட தங்கையா வந்திருக்கேன்.. ஆனா உன் காதலியா உன் கூட வர்றது இதுதான் முதல் தடவை… இல்லியா.. மனசே காத்து மாதிரி ஆயிடிச்சிடா!!”

மீனாவின் குரலில் எப்போதுமே இல்லாத ஒரு அதிஅற்புதமான இனிமை வந்திருந்ததாக சீனுவுக்குத் தோன்றியது. மீனாவின் இதயத்திலும் மகிழ்ச்சி அலையலையாக அடித்துக்கொண்டுருந்தது.

“ம்ம்ம்….” சீனு சிலிர்க்க ஆரம்பித்தான்.