ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 85

கோவிலின் அருகே போனதும்.
” நீங்க கோயில்ல இருங்க.. நான் போனதும் வந்தர்றேன்..” என்றாய்.
”ஏன்.. உன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா..?”
” இல்ல… இல்ல.. அது குடிசை..”
”பரவால்ல நட.. நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்க…

தயங்கிவிட்டு என்னையும் உன் வீட்டுக்கு அழைத்துப் போனாய்.
வரிசையாக ஏழெட்டு வீடுகள் இருந்தன. அது தவிற.. ஒரு சில ஓட்டு வீடுகள். கடைசியாக இருந்த ஓடும்… குடிசையும் கலந்த வீடு உன்னுடையது. ! தெரு விளக்குக் கம்பம் ஒன்று.. உன் வீட்டு முன்னால் இருந்தது.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்து.. என்னையும் கூப்பிட்டாய்.

”உள்ள வாங்க..”

குணிந்து உள்ளே நுழைந்தேன். உன வீட்டின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது.

”உக்கார்றிங்களா..?” என ஒரு கிழிந்த பாயை எடுத்தாய்.
”அதெல்லாம் வேண்டாம்.. நீ பொறப்படு..”

சீப்பை எடுத்து..தலைவாரினாய். காலியாக இருந்த எண்ணெய் குப்பியை.. உள்ளங்கையில் தட்டிப் பார்த்துவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.! அப்பறம் அப்படியே உன் செம்பட்டை மயிரைச் சீவி… ஜடை பிண்ணி… சின்னதாக இருந்த… ஒரு பவுடர் டப்பாவை எடுத்து.. கையில் கொட்டி…. அதைத் துணியால் தொட்டு…கையகலக் கண்ணாடி பார்த்து.. முகத்தில் பூசினாய்..! நான்கைந்து விதமான ஸ்டிக்கர் பொட்டுக்களிலிருந்து இரண்டை எடுத்து.. மேலும் கீழுமாக ஒட்டினாய்..! போட்டிருந்த சுடிதாரைக் கழற்றி விட்டு… வேறு ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்.. அதுவும் பழையதுதான்..!
அப்பறம் ஒரு டப்பாவில் இருந்து… கம்மல்.. வளையல்… டாலர் வைத்த செயின் எல்லாம் எடுத்து அணிந்து கொண்டாய்..!
” போலாமாங்க..?” என புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கேட்டாய்.

”ம்..ம்..!!” தலையாட்டினேன்
இந்தக் கதை எப்படின்னும் சொல்லுங்கள் நண்பர்களே…!!!!….!!!!

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.