ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 84

”ஏ… ஏ..ஏய்.. ஏய்…! என்ன இது..? எந்திரி… எந்திரி.. !!” என நான் தடுமாற…
கண்ணீர் விட்டு அழுதாய்.
உண்மையில் நான்.. ஆடிப்போனேன்.
”ஏய்… இதபார்… இப்படி பண்றது… அழறது… இதெல்லாம் சுத்தமா.. புடிக்காது எனக்கு..! அப்றம்.. நான் போயிறுவேன்..!!”
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாய்.! மெதுவாக நகர்ந்து போய்… ஆற்றில் இறங்கி நின்று… இரண்டு கைகளிலும்.. நீரை அள்ளி… அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாய்.! உன் கந்தலான புடவையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே.. கரையேறி வந்தாய்.! உனது காதோர முடிகள்… ஈரமாகியிருந்தது..!
என்னைப் பார்த்து.. சிரிக்க முயன்றாய்.!
” பரவால்ல… மொதல்ல சாப்பிடு..” என்றேன். என் மனம் இன்னும் பதைத்துக் கொண்டிருந்தது.
‘ சர் ‘ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்.
” இப்ப வேனா… இப்படியே..குளிச்சிட்டு… வருட்டுங்களா..?”
” ஏ..ஏய். .! சாப்பிடு மொதல்ல..!” என்றுவிட்டு… தலையை அன்னாந்து… பீரை.. கடகடவென தொணடையில் சரித்தேன். ஒரே தம்மாக குடித்துவிட்டு.. பாட்டிலை நிமிர்த்திப் பார்த்த போது… முக்கால் வாசி.. பாட்டில் காலியாகியிருந்தது.
பெரிதாய் வாயைப் பிளந்து.. ”ஏ…ஏவ்..ஏவ்..!” என ஏப்பம் விட்டேன்.
கடைக்கண்களில் திரண்டிருந்த நீரைச் சுண்டினேன். உன்னைப் பார்த்தேன்.
நீ முறுவலித்தாய்..!!
”ஏய்.. சாப்பிடலியா.. நீ..? என்னை வேடிக்கை பாத்துட்டிருக்க..?”
” நீ… நீங்க…?” எனத் தயங்கினாய். உன் ரவிக்கையும் ஈரத்தில் சொதசொதத்திருந்தது.
”எனக்கு வேண்டாம்..! நீ சாப்பிடு..” மீதி பாட்டிலையும் காலி செய்தேன்.
கீழே உட்கார்ந்து… பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து வைத்து விட்டு.. என்னைப் பார்த்தாய்.

”என்ன..?” எனறேன்.
” நீ.. நீங்க…?”
” அட..ட…ட..டா..!! விடமாட்ட போலிருக்கு…” என்று உன் இலையிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்துக்கடித்தேன். ”ம்.. நீ சாப்பிடு..”
” அது..?” என இடது கையை நீட்டி.. இன்னொரு பொட்டலத்தைக் காட்டினாய்.
” அதும் உனக்குத்தான்..”
”ஐயோ… இதே போதுங்க..”
”ஏய்…சாப்பிடுறீ..” என உன் முன்னால் உட்கார்ந்து ”இப்ப நீ சாப்பிடப் போறியா.. இல்லையா..?” என்றேன்.
லேசான கூச்சத்துடன் சிரித்தாய். அப்படியொன்றும் நீ அழகற்றவள் இல்லை.
தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை.
”ஆமா…தண்ணி..?” என்றேன்.
ஆற்றைக்கை காட்டினாய்.
”வாட்டர் கேன் எடுத்துட்டு வரட்டுமா..?”
”நா… ஆத்துலயே குடிச்சுக்கறங்க..”
பீர் பாட்டிலை எடுத்து.. ”இரு.. இதுல மோந்துட்டு வரேன்..” என்று நான் எழ….
நீ சட்டென எழுந்து ”குடுங்க.. நானே மோந்துக்கறேன்..!” என்றாய்.
”ஏய்… உக்காரு பேசாம..!! ”என நான் போட்ட அதட்டலைக் கேட்டு.. எழுந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு… குழந்தை போலச் சிரித்தாய். கபடமற்ற குழந்தைச் சிரிப்பு.
ஆற்றை நெருங்கி.. ஓரமாக இருந்த…ஒரு பாறைமேல் உட்கார்ந்து… பீர் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி.. பாட்டிலில் தண்ணீரை நிரப்பினேன்.

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.