ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

” எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க.. உங்கள..” என்று சிரித்தாய்.
”என்ன லவ் பண்றியா..?”
” ஐயோ.. அதெல்லாம் இல்லீங்க..!! நான்… அப்படியெல்லாம் நொனைக்கலீங்க..! உங்க மேல.. ரொம்ப மரியாதைங்க..!! அதத்தாங்க சொன்னேன்..!!” என்ற நீ… சிறிது நேரம் அமைதியாக இருந்தாய்.
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
” என்ன யோசணை…?”
பெருமூச்சு விட்டாய்.
”ஒன்னுமில்லீங்க…”
” பேன்சி கடைக்கு வேலைக்கு போறதான..?”
” ம்..ம்..! போறங்க..!! ஏங்க..?”
” இல்ல… புடிக்கலியோ.. என்னமோனு கேட்டேன்..”
” என்னங்க.. நீங்க…? ரொம்ப புடிச்சிருக்குங்க..!!”
”சரி… உன்னோட தொழில என்ன பண்ணுவ..?”
”விட்றுவங்க..”
” நெஜமாவா…?”
” அந்த… ஆத்தா சத்தியமாங்க..!”
” எந்த ஆத்தா…?”
” பத்ரகாளி ஆத்தா…”
”ஓ..!! அப்ப நீ மறுபடி தொழில் பண்ண மாட்ட..?”
”மாட்டங்க…!!”
” ஆனா.. எனக்கு… உன்ன ரொம்ப புடிச்சிருக்கே..?”
சிரித்தாய் ”அதுக்கென்னங்க..”
” எனக்கு.. நீ வேனுமே..”
”ஐயோ.. நீங்க எப்ப கூப்டாலும் வரங்க…”
”உனக்கு கல்யாணம் ஆகறவரைதான். .”
” நா… கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டங்க..”
”ஏன் தாமரை…?”
”எனக்கெல்லாம்.. அது.. ஆகாதுங்க…!!”
”உனக்கொன்னும் வயசாகிடலையே..?”
வெறுமனே சிரித்தாய்.
”சரி… பாக்கலாம்…” என்றேன் ”காலம் மாறும்..!!”
”ஆனாக்கா.. என்னோட இது மாறாதுங்க..”
” அப்படி.. சொல்லாத..!”
”நீங்களே வேனா… பாருங்க..” என்றாய் திடமான குரலில்..!!!!

இரவு.. எட்டு மணி..!! டிவி முன்னால் உட்கார்ந்திருந்த நான்… திடுமெனத் தோன்றிய யோசனையுடன் உன்னைக் கேட்டேன்.
”ஆமா உனக்கு கஷ்டமா இல்லையா..தாமரை…?”
நான் கேட்டது புரியாமல் நீ திரும்பி என் முகத்தைப் பார்த்தாய்.
”என்னங்க..?”
” இல்ல… வீட்லயே.. உன்னை அடச்சு வெச்சிருக்கேனே..? அது கஷ்டமா இல்லையா..?”
”ஐயோ..! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..! வீட்டுக்குள்ளயே இருந்தாலும் என்னை சந்தோசமாத்தான வெச்சுருக்கீங்க..? அப்படியெல்லாம் எதுமே நெனைக்காதிங்க..!!”
” நீ…ரொம்ப நல்லவ.. தாமரை..!! ”
என்க.. நீ வெட்கப் பட்டுச் சிரித்தாய்
”சரி…இப்ப வெளில போலாமா..?” எனக் கேட்டேன்.
”எனக்காக… எங்கயும் வேண்டாங்க…!!”
” நமக்காக…?” என்று சிரித்தேன்.
” எங்கீங்க..?”
” நைட் சாப்பிடனும் இல்ல…?”
” ஆமாங்க…”
” நட… போய் சாப்பிட்டு… வரலாம்..! அப்படியே சினிமா போலாமா..?”
”ஐயோ… நேத்திக்கு தானுங்களே போனோம்..”
”அப்ப இன்னிக்கு வேண்டாமா…?”
”வேண்டாங்க…!! சாப்பிட்டு வேனா… இங்கயே வந்துரலாங்க…”
” ஏன். . உனக்கு சினிமா.. அவ்வளவா புடிக்காதா..?”
” அதுக்குனு… டெய்லி போவாங்களா யாராவது..?”
” நீ… என்ன பொண்ணோ..? இப்படி இருந்தேன்னா… அப்பறம் எப்படி பொழைப்பே..?” என்க…. அப்பாவியாகச் சிரித்தாய்.

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.