இடை அழகி மேடம் சங்கீதா 7 90

கூடவே இந்த விழாவுக்கு இன்னைக்கி ஒரு ஸ்பெஷல் effect இருக்கு, எதுக்குன்னா இந்த company ஆரம்பிச்சி இன்னியோட 25 வருஷம் முடியுது. அதுவும் இல்லாம இது ராகவ் குடும்ப company. so மனஸ்தாபம் ஏதாவது இருந்தால் மனசுல வெச்சிகாதேன்னு mithun அப்பா அம்மா request பன்னதால இந்த முகரகட்டய ராகவ் போனா போகுதுன்னு அனுமதிச்சி இருக்கான். அவனோட designation use பண்ணி இவனை dismiss பண்ண 2 minutes கூட ஆகாது. ஆனா அந்த நாயோட அப்பா, அம்மா ராகவ் கிட்ட “நடந்த விஷயம் எல்லாம் தெரியும்” னு சொல்லி இவன் சார்புல அவங்க மண்ணிப்பு கேட்டு இவனை இன்னைக்கி IOFI உள்ள விட்டு இருக்காங்க. குடும்ப influence மூலமா இன்னிக்கி விழாவுக்கு வந்திருக்கான். இவன் இப்போவும் ராகவ் மேல பொறாமைல தான் இருக்கான், அவனுடைய வளர்ச்சி என்ன ஏதுன்னு பார்த்து நோட்டம் விட்டுட்டு போகுரதுக்குதான் mainஅ வந்திருக்கான். crooked minded bastard!! – ஓரக்கண்ணால் முறைத்து பற்களை கடித்து சொன்னாள் சஞ்சனா. அய்யோ, போதும் டி எத்தனை தடவ அந்த வார்த்தைய வாய் வலிக்க சொல்லிக்கிட்டே இருப்பே? அக்கம்பக்கத்துல யாரவது கேட்டுட போறாங்க. – mithunஐ ப் பார்த்துக்கொண்டே சஞ்சனவிடம் பேசினாள் சங்கீதாவும். ஹ்ம்ம்… உலகத்துல அந்த வார்த்தைய யோசிச்சி உருவாக்கினதே இவனைப் போல ஆளுங்களுக்குதான் மேடம். அதை உபயோகப் படுத்த வேண்டிய இடத்துல கூட பண்ணலைனா எப்படி. சரி சரி, நாம சந்தோஷமா இருக்குற நேரத்துல எதுக்கு இவனைப் பத்தி பேசணும், விடுங்க.. மேடம், seriously you look awesome.. ஏற்கனவே செம உயரம் அதுலயும் இந்த மாதிரி மஞ்சள் நிற பட்டுப் புடவைல பார்க்கும்போது அப்படியே தேவதை மாதிரி இருக்கீங்க. thanks da.. – அழகாக சிரித்து சஞ்சனாவின் கண்ணத்தில் தட்டி கூறினாள் சங்கீதா. ரம்யா, சங்கீதாவின் பின்னாடி இருந்து சஞ்சனா கூறியதை கவனித்தாள். கூடவே சங்கீதா சஞ்சனவிடம் பேசும்போது mithun ஐ நோக்கிப் பார்ப்பதை கவனித்தாள். பிறகு மெல்ல நெருங்கி வந்து காதருகே சங்கீதாவிடம் கூறினாள் “மேடம்….” சொல்லுடி என்ன ஆச்சு? – ஏன் காதருகே வருகிறாள் என்று தெரியாமல் கேட்டாள் சங்கீதா.. ஒருவேளை அந்த Unknown number இவனா இருக்குமோ? “எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்குடி” – சற்றுமுன் சங்கீதாவும் mithunஐ உற்று கவனித்தது அந்த சந்தேக பார்வையில்தான். சரி சரி வாங்க உங்களுக்கு நிறைய விஷயம் சொல்லணும் ராகவ் பெரிய list குடுத்து இருக்கான். சீக்கிரம் உள்ள போகலாம் வாங்க. – என்று சஞ்சனா பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க சங்கீதாவின் பின்னால் ரம்யா, ஸ்நேஹா, நிர்மலா, மற்றும் நிர்மலாவின் இடுப்பில் ரஞ்சித் அமர்ந்திருப்பதை ப் பார்த்து சஞ்சனாவுக்கு ஆச்சர்யம். சட்டென புருவம் உயர்ந்தது அவளுக்கு. மேடம் இவங்க உங்க பசங்களா? – என்று சொல்லிவிட்டு உரிமையாக ரஞ்சித்தை நிர்மலாவிடமிருந்து துக்கி கொஞ்சினாள். ஹா ஹா, yes my sweet kids, இவங்க தான் ரம்யா, IOFI வந்தால் எப்படி எனக்கு நீ ஒரு வாளோ அந்த மாதிரி Bank ல இருக்கும்போது எனக்கு ஒரு வாளு இவ.. – என்று செல்லமாக காதை ப் பிடித்து ரம்யாவை சஞ்சனாவுக்கு அறிமுகம் செய்தாள் சங்கீதா. She is Nirmala, என்னுடைய well wisher, எனக்கு கடந்த ஏழு வருஷமா இவங்க ஒரு சொந்த அக்கா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஒஹ்ஹ்… nice to meet you nirmala – அழகாக சிரித்து கைக் குலுக்கினாள் சஞ்சனா. சரி சரி, எல்லாரையும் நிக்க வெச்சே பேசிட்டு இருக்கேனே, வாங்க எல்லாரும் உள்ள போகலாம். – என்று சொல்லி சஞ்சனா நடக்கையில், auditorium entrance முன்பு கிட்டத்தட்ட 50 அடி நீளத்துக்கு ஒரு நடை பாதை அமைத்து இருந்தது, இருபுறங்களிலும் ரோஜா பூக்களால் அலங்காரம். அந்த பாதையின் roof பார்க்கும்போது ரம்யாவுக்கும், நிர்மலாவுக்கும் ஒரு நிமிடம் ஆங்கில நாட்டு பழைமை வாய்ந்த castle களில் செய்யப்பட்டிருக்கும் design வேலைபாடுகள் நியாபகத்துக்கு வந்தன, அதை சஞ்சனா கவனித்து “Specially made by european designers” என்று அடக்கமாக விளக்கினாள். பாதையின் சுவர் அலங்காரம் என்ற பெயரில் உள்ளுக்குள் பலதரப்பட்ட மர வேலைப்பாடுகளாலும் ceramic stone பொருட்களால் செய்திருக்கும் art work அனைத்தையும் பார்த்து பிரமித்து போனார்கள். ஆடிட்டோரியம் உள்ளே சென்றதும் மிக நீளமான வரிசையில் இருக்கைகள் மேற்புறம் வழுவழுப்பான விலையுயர்ந்த சில்க் துணியால் செய்யப் பப்டிருந்தது. பளபளப்பான தூண்கள் கம்பீரமாக சுவரின் ஓரத்திலும் அதன் ஒவ்வொன்றிலும் பட்டு ஜரிகை துணியால் முழு நீளத்துக்கு கண்ணைப் பறிக்கும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. false ceiling ல் பதிக்கப்பட்ட மிகச்சிறிய குமிழ் விளக்குகளில் இருந்து விழும் பளிச்சென இருக்கும் மஞ்சள் வெளிச்சம் வைரம் போல் மின்னியதில் ஆடிட்டோரியம் உள்ளே கண்களைப் பறிக்கும் வண்ணம் ரம்யமான அழகு தங்க நிறத்தில் தவழ்து கொண்டிருந்தது. தரை முழுவதும் பொசு பொசு வென இருக்கும் சிகப்பு கார்பெட் கால்களுக்கு மசாஜ் செய்யும் விதத்தில் இருந்தது. ஆடிட்டோரியம் மேற்புறத்தில் பார்க்கும்போது ஆகாயத்தில் இரவு நேரத்தில் நட்சத்திரம் பார்ப்பது போல பல நூறு கணக்கில் சிறிய அளவில் led விளக்குகள் ஜொலித்தன. வெளியில் kenwood speaker ல் western music ஒலித்துக் கொண்டிருக்க, ஆடிட்டோரியம் உள்ளே மனதை வருடும் புல்லாங்குழல் இசை அதி நவீன BOSE Speaker ல் காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது.

எங்கு திரும்பினாலும் நன்கு மனதை மயக்கும் நறுமனம் வீசியது. stage ன் நீளம் வலது புறத்திலிருந்து இடது புறம் வரையில் கிட்டத்தட்ட 60 மீட்டர் நீளம், அதன் மேல்புறத்தில் மாபெரும் arch இரும்பில் செய்யப்பட்டு இருந்தது. பிரம்மாண்டம் எண்ணும் வார்த்தைக்கு பிரம்மாண்டம் சேர்த்தது அந்த stage. அப்படி ஒரு கம்பீரமான தோற்றம். “IOFI service team” என்கிற badge குத்திக்கொண்டு நிறைய சித்தாட்க்கள் fire works & lighting effects வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். சங்கீதாவின் கண்ணத்தில் அறை வாங்கிய supervisor sampath ம் அங்கே அப்பாவியாக வேலை செய்யும் ஆட்களிடம் வழக்கம் போல அதட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தான். அனைத்தையும் அண்ணார்ந்து பார்த்து பிரமித்து கொண்டிருக்கும்போது “ஹலோ…” – என்று சங்கீதா, ரம்யா, நிர்மலா ஆகிய மூவரையும் ஒரு நொடி சத்தமாக கூவி உலுக்கினாள் சஞ்சனா. என்ன ஆச்சு உங்களுக்கு? stage decoration முடியுறதுகுல்லையே இவ்வளோ தூரம் உத்து பார்க்குறீங்க, முடிஞ்ச பிறகு பார்த்தா இங்கே இருந்து போக மாட்டீங்க. ஹா ஹா – தான் வேலை செய்யும் கம்பெனியின் awards விழா அவ்வளவு grand என்கிற விதத்தில் சொல்லி பெருமிதப்பட்டாள் சஞ்சனா.

சங்கீதாவின் காதருகே வந்து மெதுவாக “இப்போ நான் ஒருத்தன எப்படி கலாய்கிறேன் பாருங்க” என்று சொல்லி விட்டு “பட் பட்” என்று கை தட்டி sampath ஐ அழைத்து தனது கன்னத்தை லேசாக தடவி காமித்து “வலிக்குதா?” என்று சங்கீதாவை அருகில் வைத்துக்கொண்டு, கிண்டலும் கொஞ்சலும் கலந்த முக பாவனையில் நக்கலாக சிரித்து சொல்லி வெருப்பேத்தினாள் சஞ்சனா. ஒரு முறை சஞ்சனாவைப் பார்த்து முறைத்த sampath ன் கண்கள் சங்கீதாவை ப் பார்த்ததும் சங்கீதா அவனை ப் பார்த்து மென்மையாக சிரமப்பட்டு சிரித்தாள், ஏற்கனவே பெண்ணின் கரங்களால் அடி வாங்கிய ஆண்மை சூடேரியதால் சட்டென சங்கீதாவின் பார்வையில் இருந்து வேறு திசைக்கு திரும்பியது sampath ன் கண்கள். ஏண்டி நீ சும்மா இருக்க மாட்டியா? எப்போவுமே விளையாட்டுதான். வாலு வாலு, சரி நாம ஆக வேண்டிய வேலைய கவனிப்போம்..

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.