ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது! 12

தம்பிக்கு எந்த ஊரு என் பேர் ரஜினி(வயது 23) , அம்மா இல்லை , அப்பா பெரிய தொழில் அதிபர் .சின்ன வயது முதல் செல்லமாக வளர்ந்தேன் , என் நண்பர்கள் சிவம் , காந்தி இவர்களுடன் நான் சினிமா , ஆப்பிஸ் என்று நாள்கள் கழிந்தது . நான எப்போழுதும் வாட்ஸ்-அப் , பேஸ்-புக் என்று இருப்பது அப்பாவுக்கு பிடிக்க வில்லை அப்பாவுக்கு தீடிர் என்று உடல் நலம் சரியில்லை . முழு பரிசோதனை செய்து பார்ததில் அதிகநாள் இருக்கமாட்டார் என்று டாக்டர்கள் சொன்னார்கள் .எனக்கு அப்பா மேல் உயிர் . அவர் இல்லாத உலகத்தில் வாழ்வதை நினைத்து பார்க்கமுடியவில்லை . நான் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வீட்டுக்கு சென்றேன் . அப்பா தலைவலி என்று படுத்துகிடந்தார் . என்னை பார்த்து “உலகம் தெரியாத பையனாக இருக்கிறாய் . நான் இல்லை என்றால் ,நீ வாழமுடியாது , எனக்கு உன்னை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது”என்றார் . நான் “உங்களை விட நன்றாக பார்ப்பேன் “என்றேன் .அப்பா “நீ எதற்கு எடுத்தாலும் அடி , தடி என்று இறங்கிவிடுகிறாய் , நல்லது கெட்டது தெரிவதில்லை . உன்னை ஏமாற்றி சொத்துகளை பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்கள் “என்றார் . நான் ” வெளியே சென்று பணம் சம்பாரித்துக்காட்டுகிறேன் ” என்றேன் . அப்பா ” செல்போன் , பணம் இல்லாமல் , நீ யாருனு தெரியாத கிராமத்தில், என் பேரைச்சொல்லாமல் , என் நண்பன் பட்டாளத்துக்காரன் வீட்டில் 1 மாதம் தங்கி அவன் சொன்ன வேலையை செய்ய வேண்டும் . அது உன்னால் முடியவில்லை என்றால் நீ தோத்துவிட்டாய் , என் சவால் ” என்றார் . நானும் கோபப்பட்டு நீங்க சொன்னபடி நான் ஜெய்த்துக்காட்டுகிறேன் . இல்லை என்றால் நான் உங்களுக்கு பிறக்கவில்லை ” என்று வீராப்பாக அப்பாவின் சவாலை ஏற்றேன்.

அப்பாவிடம் சவால் விட்டு விட்டு பஸ் வசதியில்லாத அந்த கிராமத்துக்குக் கிளம்பினேன் . முரட்டுச் சுபாவத்தில் என் அப்பா நண்பர் பட்டாளத்துக்காரர் என்ற செந்தாமரை இருந்தார் . நான் அவர் யாருனு தெரியாமல் அவரிடம் “பட்டாளத்துக்காரன் எப்படி இருப்பான் , தலையில் கொம்பு இருக்குமா “என்று பலவாறு கிண்டலாக அவரைபற்றி தெரியாமல்அவரிடமே நக்கலாக பேசி கொண்டிருந்தேன் . அவர் வீட்டுக்கு போனபின்பு அவர்தான் பட்டாளத்துக்காரர் என்று தொரிந்தது .

1 Comment

Comments are closed.