அதிர்ஷ்டகாரண் – Part 1 103

எம் பேரு சுந்தர். மதுரைக்கு பக்கத்துல, கிராமத்திலேருந்து டவுனுக்கு படிப்படியா முன்னேறிக்கிட்ருந்த “அஸ்தினாபுரம்”கிற அழகான ஊர்லதான், அப்பா, அம்மா,தம்பி சுரேசுன்னு எங்க பேமிலி இருந்துச்சு. எங்க வீடு, அரண்மனை மாதிரி கொஞ்சம் பெரிய வீடுதான். உள்ள நுழஞ்ச உடனேயே, ஹாலுக்கு பக்கத்துல லெப்ட் சைடுல இருக்கிற, பெரிய ரூம் என்னோடது, அடுத்து கொஞ்சம் சின்ன ரூம், தம்பி சுரேசுக்குன்னு, அலாட் செஞ்சிருந்தோம். என் ரூமிற்கு எதிரே இருந்த ரூம், கெஸ்ட் ரூம்.

அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, “டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு”. அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. “ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு” அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.

எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.

புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, ‘அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு’ வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, ‘மாமா’ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, “இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு” சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.

பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி… எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா ‘கடலோரகவிதைகள்’ பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க.

1 Comment

  1. Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu

Comments are closed.