அதிர்ஷ்டகாரண் – Part 1 104

அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல ‘நம்பர் ஒன்’ என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப ‘கியூட்டா’ இருக்கிறதால, “பேபி” னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.

அம்மாவும், அப்பாவும், நல்ல மனமொத்த தம்பதிகளா இருந்தாங்க. ஆனாலும், அவங்களுக்குள்ள அப்பப்ப சின்ன, சின்ன சண்டைகள் வரும். சில சமயம், ரெண்டு நாள் பேசாம கூட இருப்பாங்க. ஆனா, கடைசில அப்பாதான் எப்பவுமே, நீலா, நீலான்னு பணிஞ்சி போயி சமாதானம் பண்ணிக்குவாரு. இத பாத்துட்டு, பத்மா அத்த, அம்மாகிட்ட கேட்டா, “தாம்பத்திய வாழ்க்கைக்கு, ஊடல் அவசியம், அதிலும் புருசங்காரன், பொண்டாட்டிக்காக இறங்கிவர்ர கொடுப்பினைக்கு, நான் போன ஜென்மத்தில, செஞ்ச புண்ணியந்தேன் காரணம்னு” அம்மா ,பத்மா அத்த கிட்ட சொல்லுவாங்க. பத்மா அத்தையும், என் அண்ணன் மாதிரி புருசன், என் பொண்ணுகளுக்கும் கிடைக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கிறதா சொல்லுவாங்க. அம்மா அடிக்கடி “சிவாஜியும் பத்மினியும் மாதிரியான ஜோடி நாங்க “(!) அப்படின்னு சொன்னாலும் எனக்கு அது ரொம்ப அதிகம்னு தோணும். இவங்க இரண்டு பேரும் மனசலவுல வேணும்னா அப்படி இருக்கலாம் ஆன வெளி தோற்றத்துக்கு சுமாரான ஜோடி அதிலேயும் அம்மாவுக்கு வியாதி வந்த பின்னாடி முகம் கருத்து அதிகமா சினிமா பார்கிறதாலேயும்,வெய்யில அலையிற வேலைங்கிறதாலயும், புத்தம் படிக்கிறதாலேயும் சோடாபுட்டி கண்ணாடி போட்டுகிட்டு,தல முடியெல்லாம் கொட்டி போய், ரெண்டு டெலிவரிக்கு அப்புறம் உடம்ப மெயிண்டைன் பண்ணாம வயிறு கொஞ்சம் பெருத்து, பாக்கிறதுக்கு படு சுமாராதான் இருந்தாங்க. அப்பா கொஞ்சம் ஒல்லியா உயரமா மாநிறமா இருப்பாரு. என் பிரண்ட்ஸ் எல்லாம் “எப்படிடா நீ மட்டும் இப்படி கட்டுமஸ்தா, அஜித் மாதிரி அழகா இருக்கன்னு!” ஆச்சரியப்படுவானுங்க. நானும், ரெகுலரா ஜிம்முக்கு போய், உடம்ப கிண்ணுன்னு வச்சிருப்பேன். ஒரு தடவை என்னை பார்த்த பொண்ணுக, கட்டாயம் திரும்பி பார்த்துட்டுதான், போவாளுங்க. தம்பி சுரேஷ் என் அளவுக்கு கலர் இல்லைனாலும், அப்பாவைவிட கலராவும், முக லட்சணத்தோடும் இருப்பான். தன் இரண்டு பிள்ளைகளும் அழகா இருக்கிறதுல எங்க அம்மாவுக்கு ரொம்ப பெருமை. எங்க ரண்டு பேரையும், யாராவது சினிமாகாரன் பார்தா, கொத்திகிட்டு போயிருவான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் முன்னாடியே சொன்னமாதிரி, அம்மா சரியான சினிமா பைத்தியம்னுதான் சொல்லனும். அவங்களுக்கு எது பத்தி பேசினாலும், சினிமா உதாரணம்தான் வரும். அம்மாவுக்கு, எல்லா சினிமா நீயுஸும் பிங்கர் டிப்பில் இருக்கும். அதனாலயே, அம்மாவ, ‘பிலிம் நீயுஸ் ஆனந்தி’ன்னு, அப்பா கூப்பிடுவாரு. ஆனா, அவரும், அதுக்கு கொஞ்சமும் சலிச்சவரில்ல. எங்க வீட்ல, சினிமா சம்பந்தமான எல்லா பொஸ்தகமும் வரும். எங்க ஊரு சினிமா கொட்டகையில, எந்த படம் மாத்தினாலும், எங்க குடும்பம் முத ஆட்டம் பாக்க முடியலைனா, கண்டிப்பா இரண்டாவது ஆட்டம் பார்க்க அங்கே இருக்கும். எங்க வாழ்க்க அப்படியே சந்தோசமா போய்கிட்டு இருந்திருந்தா, இந்த கதயே இப்ப வந்துருக்காதே! அதனாலதானோ என்னவோ, அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு..

ஆமா நான் Eng. college ல முத வருசமும், சுரேஷ் ஆறாவதும் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, ஒரு நாள் திடீர்ன்னு அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபிஸ் வேலையா போன கிராமத்திலேயே, அவங்க உயிர் போயிடிச்சு… அதுக்கு ஒரு வருசம் முன்னாடி, ஒரு தடவ மைல்டு அட்டாக் வந்தப்பவே, அப்பா “VRS வாங்கிடுன்னு” சொன்னாரு, ஆனா அவங்க அத கேட்காம, ஊர் ஊரா டெலிவரி, கேஸு, ரிப்போர்டு,மாத்திர,ஊசின்னு அலைஞ்சு கடைசில எங்கள விட்டுட்டு போய்டாங்க. அம்மா போனதுல அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு. அம்மாவோட கருமாதிக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்க. அப்பாவும் நிறைய செலவு செஞ்சு, ஒரு குறயும் இல்லாம function ஐ ரொம்ப கிராண்டா செஞ்சாரு. ” நீலா கொடுத்து வச்சவ, பூவோடவும், பொட்டோடவும், சுமங்கலியா போயிட்டா… மகராசி… பசங்க கொஞ்சம் பெரிசாகி, கல்யாணம் காட்சின்னு பாத்துட்டு போயிருக்கலாம், என்ன பண்றது?, வியாதி அவள பாடாபடுத்திருச்சேன்னு” எல்லாரும் பேசிக்கிட்டாங்க.

அப்பறம் எல்லா உறவுகாரவுகளும், ஆபீஸ் பிரண்ட்சும் அப்பாகிட்ட ” வெங்கட், நீ இப்டியே இருந்தா, பிள்ளைகள யார் பாத்துப்பாங்க? சீக்கிரமா ஒரு கல்யாணத்த பண்ணிக்கப்பான்னு”, அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாங்க. எல்லாரும் சொல்ல சொல்ல அவங்க வாயடைக்க அப்பா, “என் வயசுக்கு இனிமேல யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னாரு?”. ஆனா அப்பாவோட அண்ணன் ராமசாமி பெரியப்பாவோ, அப்பாகிட்ட “வெங்கட், உனக்கு இன்னும் 10 வருசத்துக்கு மேல சர்வீஸ் இருக்கு. காலாகலத்துக்கும் பென்சன் பணம் உனக்கு பின்னாடி உன்ன கட்டிகிட்டவளுக்கும் வரும், கால நீட்டி உட்காந்துகிட்டு சாகிறவரைக்கும் இருக்க கசக்குமான்ன? அப்புறம் உன் பெரிய பையன் இன்னும் ரெண்டு வருசத்தில காம்பஸ்ல செலக்டாகி வேலக்கி போயிருவான் அவன பத்தி பிரச்சன இல்ல, ஆனா சின்னவன பாத்துகிறதுக்கு கட்டாயம் ஒரு பொண்ணு வேணும். உன்னயும் கடேசிவர கவனிச்சுக்க கல்யாணம்தாண்ட ஒரே வழி, மாட்டேன்னு சொல்லாதன்னு சொன்னாரு”. எங்களோட பெரியம்மாக்களும், சொந்தத்தில யார் யார் வீட்டில பொண்ணு எடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, உடனே அப்பா, அங்க உட்காந்துகிட்டுருந்த என்ன தர்மசங்கடமா பார்த்தாரு. அத கவனிச்ச அப்பாவோட தங்கச்சி சுந்தரி அத்தை, எங்கிட்ட வந்து “என்ன சுந்தர் அப்பாவோட இரண்டாவது கல்யாணத்துல, உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?அமெரிக்காவுல இதெல்லாம் ரொம்ப சகஜம். சாதரணமாவே பிடிக்கலைனா, டைவர்ஸ் வாங்கிக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாங்க ஆனா நாம அது மாதிரியெல்லாம் செய்யலயே உங்க ரெண்டு பேர் நல்லதுக்கும் அவருடைய கடைசி கால சப்போர்டுக்கும்தான இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றோம், உன்னை மாதிரி படிச்ச பசங்க இத தப்பா நினைக்க என்ன இருக்கு?” அப்படின்னு கேட்டதும், நான் திணறி போய் வேற வழியே இல்லாம, “நான் ஒன்னும் அத எதிக்கலயே அத்த: என்றேன். அத பார்த்த அப்பா மூஞ்சில ஒரு பிரகாசம் வந்த மாதிரி எனக்கு தோணிச்சு! “பொண்டாட்டி செத்த பத்து நாள்ள, ஆம்புள புது மாப்பிள்ளங்கிற” வழக்குமொழிதான் ஞாபகம் வந்துச்சு.

1 Comment

  1. Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu

Comments are closed.