அதிர்ஷ்டகாரண் – Part 1 103

சும்மா மதுரல படம் பார்த்துட்டு, அங்கேயே தங்கிட்டு, காலைல கிளம்பி ஊருக்கு வந்துசேந்தோம். வர்ரப்பவே பார்த்தேன், சுரேஷ், சகுந்தலா வீட்டில போய் தூங்கி எந்திருச்சு, சுந்தரி அத்தையோட எங்க வீட்டுக்கு வந்துகிட்டிருந்தான். பெரியவங்க எல்லாரும் பிளாண் பண்ணிதான், எங்க ரண்டு பேரையும் அந்த வீட்லருந்து அனுப்பிவச்சிருக்காங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஆனா இப்படி எத்தன நாள் பண்ணமுடியும்னும் தோனிச்சு. அப்பறம், கண்டிப்பா நைட் ஒன்னும் சிறப்பா நடந்திருக்காது, ஏமாந்த சகுந்தலா, ரொம்ப சோகமா இருப்பா, என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணாச்சே, ஏதோ தியாக செம்மல் மாதிரி அவங்க அம்மா சொன்னதும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்தாலும், இப்ப, ஏண்டா, தெரியாம ஒத்துக்கிட்டோமேன்னு, வருத்துல ஒரு மூலையில, கிடப்பான்னு நினச்சேன். ஆனா, வீட்டுக்குள்ள நுழையரப்பவே, சகுந்தலா தலைக்கு குளிச்ச டவலோட, புத்தம் புது மஞ்ச தாலி சரடு கழுத்துல தொங்க, குனிஞ்சி, பணிவா எல்லாருக்கும் காப்பி கொடுத்துக்கிட்டு இருந்தா. என்ன பார்த்ததுமே, “வா சுந்தர், உனக்கும் காபி கொண்டுவர்ரேன், சீக்கிரமா பல்ல தேச்சுட்டு வா!” னு மெல்ல சிரிச்சுக்கிட்டே சொன்னா. நான் பதிலே சொல்லாம நேர பின்பக்கமா போயிட்டேன். அப்படின்னா ராத்திரி சந்தோசமாதான் இருந்திருப்பாங்களா? அப்பா மாதிரியான வயாசான ஆள், என்ன சுகத்த அவளுக்கு கொடுத்திருக்க முடியும்? இவ எல்லார் முன்னாடியும் நடிக்கிறாளா? எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு! இன்னொரு பக்கம், என் மனசாட்சி, “அடப்பாவி அவ கஷ்டப்படனும்னு ஏண்டா நினைகிற, அவ உங்க குடும்பத்துக்கு நல்லது செய்யத்தானே இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டான்னு” குத்திகாட்டிச்சு! எனக்கு என் மேலயே வெறுப்பா வந்துச்சு! என்னால அவ எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டத தாங்கிக்க முடியல, கண்ல இருந்து அருவி மாதிரி கொட்ன கண்ணீர துடைக்கிறப்பவே, என்னையும் அறியாமா கொஞ்சம் உணர்சிவசப்பட்டு கேவி அழுக ஆரம்பிச்சிட்டேன், ஆனா அந்த சத்தம் கேட்டு உடனை ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்ச சகுந்தலா, நான் அம்மா ஞாபகத்துலதான் அழுகிறேன்னு நினச்சு, “அழாத சுந்தர், நான் இருக்கேன், நீலா அக்கா மாதிரி உன்னையும், சுரேஷையும் பார்த்துக்கிறேன்னு” சொல்ல, அங்க வந்த சுந்தரி அத்தையும், சுந்தர், ” நீ என்ன சின்னப்பிள்ளையா? நீயே அழுதா, உன் தம்பிக்கு யாரு ஆறுதல் சொல்ரது. உங்க அதிஷ்ட்டம், நம்ம சகுந்தலாவே, உனக்கு அம்மாவா வந்தது. அவளுக்கு உங்க மூனு பேர பத்தியும் நல்லா தெரியும். அவ உங்கள நல்லாவே பாத்துப்பா, கவலப்படாதேன்னு சொல்லி, சகுந்தலாகிட்ட இருந்து என்ன தனியா பிரிச்சு கூட்டிட்டு போய் ஹால்ல உக்காந்திருந்த, அப்பவுக்கு பக்கத்ல உட்கார வச்சாங்க.

அப்பாவும், என் கைய பிடிச்சுகிட்டு, “சுந்தர், அழுகாதப்பா, அம்மாவோட ஆசிர்வாதம், நமக்கு எப்பவும் இருக்கும். அவ சாமியா நம்ம கூடவே இருந்து காப்பாத்துவா, கவலப்படாதன்னு சொன்னப்ப, அப்பான்னு அவர் தோளில சாஞ்சு அழுதேன். ஆனா அப்ப இதே தோள்லதான, ராத்திரி சகுந்தலாவும் சாஞ்சிருப்பான்னு தோணுனவுடனே, என்ன அறியாம, அவர விட்டு மெதுவா தள்ளி உட்காந்துகிட்டேன். நா அழுதத பாத்த சுரேஷும் அழ வீடு மொத்தமும் அழுவாச்சி சத்தம். எனக்கு ஒன்னுமே புரியல.. எதுக்காக நான் அழுறேன்? அம்மா செத்ததுக்கா? அவங்கதான் உடம்பு சரி இல்லாத ஆளுதான, அதுவுமில்லாம, அவங்க செத்து பத்து நாள் வரைக்கும் வராத அழுகை, இப்ப மட்டும் ஏன் வருது?அப்படின்னா, வேறு எதுக்கு? சகுந்தலா, அப்பாவ கல்யாணம் கட்டிகிட்டதுக்கா? கட்டிகிட்டவளே கவலபடல நான் ஏன் தேவையே இல்லாம அழறேன்? அதுவுமில்லாம, அவ அம்மா சொன்ன மாதிரி, அவ என்னயவிட வயசுலயும் பெரியவ, அதனால, அவள நான் கல்யாணம் பண்ணிக்க சான்சே இல்ல. சரியோ, தப்போ, இப்ப அவ எங்க அப்பாவோட பொண்டாட்டி, எனக்கு இனி அவ அம்மா ஸ்தானம். அதுனால, இனிமே இதப்பத்தி குழப்பிக்காம அவளுக்கு importance கொடுக்காம, இனி நம்ம வேலய மட்டும் பாக்கனும்னு, முடிவு பண்ணி, கண்ண துடச்சுகிறத்துக்கும், சகுந்தலா என் கைய ஆறுதலா பிடிச்சு, காப்பி டம்ளர குடுக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு! நான் அவ கைய தட்டிவிட்டுட்டு காப்பிய வாங்கிக்காம என் ரூமுக்கு போனேன். அத பாத்த பெரியம்மா, சகுந்தலாகிட்ட, “சரி விடும்மா, உப்பு, புளி வயத்துக்குள்ள போனா, துக்கமெல்லாம் கரஞ்சி போகும். இன்னும் ஒன்னு ரண்டு நாள்ல எல்லாம் சரியாயிரும். உனக்கு தெரியாததான்ன? சுந்தர், உன் கூட வளந்தவந்தான?” ன்னு, அவளுக்கு சமாதானம் சொன்னதும், ரூம் கதவ அடைக்கிறதுக்கு, முன்னாடி என் காதுல கேட்டுச்சு. ஆனா ரொம்ப நேரம் என் ரூமுக்குள்ளயும் இருக்க விடாம பெரியப்பா, என் ரூம் கதவ தட்டி, “தனியா என்னடா பண்ற? அழுகிறயா? அதெல்லாம் நாங்க ஊருக்கு போனதும் வச்சுக்க, இப்ப சீக்கிரமா குளிச்சிட்டு வந்து, எங்களோட சாப்பிட வா! உனக்கோசரம் நாங்கெல்லாம் சாப்டாம காத்ருக்கோம்”, அப்டின்னு சத்தம் போடவும், வேறு வழி இல்லாம ரூம விட்டு வெளிய வந்தேன்.

1 Comment

  1. Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu

Comments are closed.