வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

“இங்கே பாரு கோமதி, நீ விரும்பியபடி நான் செய்யப் போவதில்லை என்ற காரணத்தை நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன், ஏன் உன் நேரத்தை மேலும் வீணடிக்கிறீரா,” என்று சரவணன் கூறினான், அனால் கோமதி தனது முடிவில் வெற்றி பெற இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

“நீங்க கூறியது எனக்குப் புரியுது, உங்க விருப்பத்தை நான் மதிக்கிறேன், ஆனால் நீங்க கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஒன்று இருக்கு. நீங்க அதை அறைந்தால் உங்க எண்ணத்தை நீங்க மாற்றலாம். ”

சரவணன் எரிச்சலடைந்து கொண்டிருந்தான். அவன் பொதுவாக யாரிடமும் பண்பு இல்லாதபடி நடந்துகொள்ள விரும்ப மாட்டான், ஆனால் கோமதி அவனது பொறுமையை ரொம்ப சோதிக்கிறாள்.

“இன்னும் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்? எதுவும் என் மனதை மாற்றிவிடும் என்று நான் நினைக்கவில்லை, அதனால் தயவுசெய்து அந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுவோம். ”

சரவணனின் தொனியால் கோமதி அச்சம் அடைய போவதில்லை. “நான் உங்களுடன் தனியாக கொஞ்சம் பேச வேண்டும், அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு அப்புறம் தெரிவிக்கிறேன்.”

“ஏன் தனியாக பேசணும். என்ன இருந்தாலும் எல்லாம் இங்கேயே சொல்லலாம். என்ன இருந்தாலும் என்ன பெரிய வித்யாசம் இருக்க போகுது என்று எனக்கு புரியில.”

கடவுளே, இந்த மனிதன் மிகவும் பிடிவாதமாணவன் கோமதி தனக்குள் திட்டிக்கொண்டாள். சும்மா வாயை மூடு என்று சொல்லிவிட்டு அவனை படுக்கை அறைக்கு இழுத்துகிட்டு போகலாம் என்று தோன்றியது அவளுக்கு. அனால் அதற்க்கு பதிலாக ஒன்னும் சொல்லாமல் சரவணனிடம் எழுத்து நடந்து சென்றாள். மீரா கோமதியைப் பார்த்தாள், அவள் இதயம் வேகமாக துடித்தது, ஒருவேளை அவள் தன் கணவனை என்ன செய்யப் போகிறாள் என்று கூட கொஞ்சம் பயந்திருக்கலாம். பிரபு அவன் மனைவி செய்வதை, கண்கள் விரிந்து, மூச்சு விடுவதை கூட நிறுத்திவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கோமதி அவனை நோக்கி வர, சரவணன் தடுமாறி பின்னே நகர்ந்தான், அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அவன் கால்கள் மொத, மேலும் போகமுடியாமல் நின்றுவிட்டான். இதைப் பார்த்த கோமதி கிட்டத்தட்ட சிரித்துவிட்டாள்.

“நகராதிங்க, நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் உங்களிடம் ஒன்னு சொல்ல விரும்புகிறேன், அவ்வளவு தான்.”

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.