வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 19

பிரபு இருபது நிமிடங்கள் கழித்து தான் திரும்பி வந்தான். சரவணன் அந்த நேர வித்தியாசத்தை கவனிக்கவில்லை, ஏனென்றால் பிரபு அவன் வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணிநேரம் போல அவனுக்கு இருந்தது.

“சரி, அவளுடைய முடிவு என்ன என்று சொல்லு?” அவனுக்கு இருந்த பதற்றத்தை அவன் முகத்தில் இருந்து மறைக்கத் தவறிய படி சரவணன் கேட்டான். இப்போது வரும் பதில் அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

பிரபுவின் முகம் வெளுத்து போய் இருந்தது. “சரவணா, நீ உள்ளே போவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.” பிரபு வாற்றைகள் தடுமாறி வந்தது.

“என்ன ..” சரவணன் கேட்கத் தொடங்கினான், ஆனால் பிரபுவின் முகத்தைப் பார்த்து, மோசமான ஒன்றை எதிர்பார்த்து அவன் விரைவாக தன் வீட்டிற்குச் சென்றான்.

அவன் கதவின் பிடித்து திறக்கும் போது கதவு அப்படியே திறந்துகொண்டது. சரவணன் சத்தமின்றி தயக்கத்துடன் உள்ளே சென்றாரன். எல்லாம் மரண அமைதியாக இருந்தது. அவன் கண்கள் உள்ளே தேட, ஹாலின் ஒரு மூலையில் தரையில் அமர்ந்திருந்த மீராவைப் பார்த்தான். அவள் கால்கள் மார்பு வரை வளைந்தது, அவள் முகம் எதிரெதிர் சுவரில் வெற்றுத்தனமாகப் பார்த்தது கொண்டிருந்தது. அவள் எதுவும் மோசமாக செய்துகொள்ளவில்லை என்று அமைதி அடைந்தான். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான், அவன் கால்கள் இந்த உலகின் எடையை எல்லாம் தாங்கினபோல மெல்ல நகர்ந்தது.

பிரபு வீட்டிற்கு திரும்பிச் சென்றான், அவனது கால்கள் சோம்பலாக நகர்ந்தன, நிகழ்வுகளின் திருப்பத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவனது மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில் அவன் பீல் பண்ணியது போல அவன் இதற்க்கு முன்பு ஒருபோதும் சோகமாக உணர்ந்ததில்லை. அவன் தனது வீட்டிற்குள் செல்லும்போது அவன் மனைவி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடையால் அவளும் சற்று முன்பு தான் வீடு திரும்பியிருப்பது போல் தோன்றியது.

1 Comment

Add a Comment
  1. Thank you for two update…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *