வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 49

கோமதி (பிரபுவின் மனைவி) அவனைப் பார்த்து, ”நீங்க இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டிங்களா? இன்று மதியம் தானே நீங்க வீட்டிற்கு வருவீர்கள் என்று சொன்னிங்க?”

அவள் முகத்தை பார்க்காமலே பிரபு பதில் சொன்னான், ”ஆம், ஆனால் என் வேலை சீக்கிரம் முடிந்தது. நீயும் வெளியே சென்று வந்தது போல் தெரிகிறது.”

“இங்கே, பக்கத்தில் உள்ள கடைக்கு சிறிது நேரம் தான் போய்வந்தேன். சில பழங்களை வாங்க போனேன்,” என்று அவள் பதிலளித்தாள்.

“ஹ்ம்ம் … சரி, நான் சிறிது நேரம் படுத்துக் கொள்ள போறேன், நேற்று வந்த களைப்பில் நான் இன்னும் கொஞ்சம் சோர்வாக இருக்கேன்.”

“உங்க கன்னத்தில் என்ன அது, அங்கே சற்று சிவந்து இருப்பது போல தெரியுதே… அது என்ன காயமா? கோமதி நாற்காலியில் இருந்து எழுந்து தன்னை நோக்கி வந்தபடி கேட்டாள்.
என்னை குத்தியபோது சரவணனின் கை செய்த காயமாக இருக்க வேண்டும் என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.

“ஓ, அது ஒன்றும் இல்லை, நான் பிசினெஸ் வேலை பற்றி நினைச்சுகிட்டு பாதையில் உள்ள தூணில் நான் கவனிக்காமல் இடிச்சிகிட்டேன், சின்ன வலி தான் அது ஒன்றுமில்லை.”

“என்னங்க இப்படி கவன குறைவாக இருக்கீங்க, பார்த்து வரவேண்டாம்மா.” “பாருங்க அங்கு சற்று வீக்கம் தெரியுது. நான் கொஞ்சம் ஐஸ் கட்டி கொண்டு வரேன், ”என்று அக்கறையாக சொன்னாள்.

“பரவாயில்லை விடு, அது ஒன்னும் வலிக்கில,” பிரபுவுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. “நான் படுக்க போறேன்.”

இப்போது இருந்த அவன் மனநிலைக்கு, அவன் மனைவியின் அக்கறை தான் அவனுக்கு தேவை படும் விஷயங்களில் கடைசி விஷயம். பிரபு விரைவாக அவன் அறைக்குள் நுழைந்தான், ஒரு வேஷிட்டிக்கு மாறி விட்டு படுக்கையில் படுத்துக் கொண்டான். அவன் மகள் படுக்கையில் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் கண்களை மூடிக்கொண்டான், ஆனால் அவன் மனதில் இருந்த கொந்தளிப்புக்கு, அவனுக்கு உறக்கம் வராது என்று அவனுக்கு தெரியும்.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.