வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 51

“அவர் எங்களை அங்கே அப்போதே கொன்றிருப்பார், ஆனால் சரவணன் தான் அவரைத் தடுத்தான். அன்று மாலை நான் வீட்டிற்கு வந்த பிறகு பெரிய பூகம்பம் எங்கள் வீட்டில் வெடித்தது. உன்னை இனிமேல் பார்க்க கூடாது என்று என் தந்தை கட்டளை இட்டார். எனக்கு சீக்கிரமாக கல்யாணத்தை முடித்தனர். நான் இனி இந்த ஊருக்கே வரக்கூடாது என்று என்னை விரட்டினர். மத்தது எல்லாம் உனக்கு தெரியும்மே.” என்று பிரபு முடித்தான்.

அப்போதே, அங்கேயே நான் என் உயிரை விட்டு இருந்தால் நல்ல இருந்திருக்குமே என்று மீரா புலம்பினாள். அவர்களின் கள்ள உறவு திடீரென முடிவுக்கு வந்ததற்கான காரணம் இப்போது அவளுக்குத் தெளிவாக தெரிந்தது. அப்படி இருந்தும் இன்னும் என் கணவர் ஒரு முறை கூட என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருமுறை கூட என்னிடம் எந்தவிதமான வெறுப்பு காட்டியதில்லை. அவர் பார்த்த எல்லாவற்றிற்கும் பிறகும் கூட கோபத்தை என்னிடம் அவர் காட்டியதில்லை. வேறு எந்த ஒரு மனிதராக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் தங்கள் கோபத்தை எப்படியாவது வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இப்படி ஒரு கண்ணியமான மனிதனுக்கு மனைவியாக வாழ்வதும் நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவரை நானேஎவ்வளவு கொடும்மையாக காயப்படுத்திவிட்டேன். எனக்கு எந்த ஜென்மத்திலும் மன்னிப்பே கிடையாது. இந்த எண்ணங்கள் அனைத்தும் அவளுக்கு மேலும் மேலும் வேதனையை ஏற்படுத்தின. பிரபுவின் தந்தை எங்களைக் கொல்ல விரும்பினார் .. மன்னிக்க முடியாத இந்த துரோகத்திற்காக நான் என் கணவரின் கைகளில் மகிழ்ச்சியுடன் இறந்திருப்பேன். இந்த வேதனையான எண்ணங்கள் அனைத்தையும் மனதில் இருந்து விரட்ட விரும்பியது போல மீரா தடுமாறியபடிய பின்னே நடந்து சென்றாள். அவள் உடல் சுவரைத் தாக்கியது, அவள் கீழே விழுந்து, தலையை முழங்காலில் புதைத்துக்கொண்டாள்.
“இங்கே பாரு மீரா, உன் மகிழ்ச்சிக்காக தானே சரவணன் அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். உன் சந்தோசம் அவனுக்கு முக்கியம். எதிர்காலத்தில் நாம எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை தான் இப்போது பார்க்கணும்.”

மீரா பிரபுவைப் பார்த்தாள், அவளுடைய முகம் அவன் மேல் உள்ள அதிகமான வெறுப்பைக் காட்டியது. அட ச்சே, இந்த துரோகிக்கு முக்கியமான ஒரே விஷயம், என் உடல் அவனுக்கு அளிக்கும் இன்பம் மட்டுமே. இதை அறியாமல் நான் எப்படி இவ்வளவு மூர்க்கத்தனமாக இருந்திருக்கேன். உடல் இன்பத்தின் இந்த சில நிமிடங்களுக்காக என் வாழ்க்கையில் எனக்கு இருந்த உண்மையான மகிழ்ச்சியை இழந்துவிட்டேன். எல்லாம் இழந்த பின் தான் உண்மைகளே புரியுது.

“அப்படியானால் என் கணவர் என்னைக் கைவிடுவது பற்றியும் நான் அவருடன் இனி வாழும் வாழ்கை ஒரு பொய்யான வாழ்கை என்றாலும் உனக்கு கவலை இல்லை. உனக்கு வேண்டியது இந்த அழுகிப்போக கூடிய சதை மட்டுமே, ”மீரா பிரபுவை பார்த்து கத்தினாள்.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.