வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 51

அவள் உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்தாள். அவளால் எப்படி இன்னும் நிற்க முடிந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. சரவணனுடன் அவள் கட்டியிருந்த அழகான குடும்பம் அவளது முட்டாள்தனத்தாலும் சுயநலத்தாலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அவள் மேலே அவளுக்கு வெறுப்பு பொங்கி எழுந்தது. இனிமேல் அவள் என்ன செய்தாலும் அவளுடைய அசிங்கமான நடத்தைக்கு ஈடுசெய்ய முடியாது. ஆனாலும் மேலும் இருக்கும் என்டேரு மீராவுக்கு தெரிந்தது. அவர்கள் கள்ள உறவு அப்போதும் நிற்கவில்லை வேற எதுவோ நடந்து இருக்கணும். பிரபு அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஏன் இங்கிருந்து போனான் என்பதோடு இது சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். நேற்று அவளை சந்தித்தபோது பிரபு அவளுக்கு அளித்த விளக்கம் எல்லாம் வெறும் பொய்யாக இருக்கும்.

“பிரபு, இனியும் என்னிடம் பொய் சொல்லாதே. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நீ திடீரென்று போனா உண்மையான காரணத்தை சொல்லு. பழைய கோயில் மண்டபத்தில் நாம அன்று கடைசியாக சந்தித்த அன்று ஏதோ நடந்திருக்க வேண்டும். அதன்பிறகு நீ என்னுடன் பேசவோ தொடர்பு கொள்ளவோ இல்லை. ”

மீரா அவள் கேட்கப் போவதைப் பற்றி நிலைகுலைந்து பயந்தாலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. பிரபு தயங்கினான், ஆனால் அன்று மாலை என்ன நடந்தது என்று அவளிடம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவனுக்கு தெரியும்.

“நாம அங்கு வந்த கொஞ்ச நேரத்துக்கு பிறகு சரவணனும் அந்த பழைய கோயில் மண்டபத்திற்கு வந்திருகான். தற்செயலாக தான் வந்திருக்கான். கோவில் மண்டபத்திற்கு அருகில் உள்ள ஒரு நிலம் விற்பனைக்கு வருவதாக யாராவது அவனிடம் கூறியதால் அவன் அங்கு வந்திருந்தான்.”

மீராவின் தலை குனிந்து, அவள் கண்களில் இருந்து கண்ணீர் இப்போது தரையில் தாராளமாக விழுந்து கொண்டிருந்தது. இப்போது நல்ல காலை நேரம், வெளியில் சூரியன் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அன்று அந்த மண்டபத்தில் வரவிருக்கும் இடியும் மழையினால் வானம் எப்படி இருண்டு போயிருந்தோதோ அதே போல் அவள் மனதும் மற்றும் அவள் வீட்டில் ஹாலும் இப்போது இருண்டு இருந்தது.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.