பழிக்குப்பழி End 97

பார்த்தால் அந்த இடம் ரத்தமாக இருந்தது, என்ன ஆச்சு சொல்லு என்றேன், நேத்து சாயங்காலம் அந்த ராஜபாண்டி வந்தான் என்று சொல்லி அழுதாள், எனக்கெல்லாம் புரிந்தது, அவளை தூக்கி பெட்டில் போட்டேன், மிகப்பெரிய கோபம் வந்தது அவன்மேல், அவளை குளிக்க வைத்து இன்ஜெக்ஷன் போட்டேன், இனிமேல் வலிக்காது என்று சொன்னேன், என்னை கண்ணை நேரில் பார்க்கவே தயங்கினாள், எனக்கும் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது, மீண்டும் இன்னொரு பெண்னை பாதுகாக்க தவறி இருக்கிறேன்,

நேத்து அவன் கால் செய்தபோதே அட்டெண்ட் செய்து இருந்தால், இவளுக்கு இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டு இருக்காது. ரொம்பவே கஷ்டமாக இருந்தது, என்னிடம் எதுவுமே பேசவில்லை அழுதபடியே இருந்தாள், இனியும் தாமதிக்க கூடாது, நான் செய்த எல்லா தவறையும் செரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், ஒரு முறைக்கு பத்து முறை யோசித்தேன், முதலில் ராஜாபாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், அதற்க்கு தேவையான எல்லாவற்றையும் செரியாக பிளான் செய்தேன், அவனை கொன்றால் மட்டும் எல்லாம் செரி ஆகாது, அவன் அடியாளான அவன் டிரைவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்,

இருவரையும் எப்படி கொலை செய்ய போகிறோம் என்பதையும் நன்றாக தீர்மானித்துவிட்டேன், எதுவுமே தவறாக போகாதபடி பிளான் செய்து கொண்டேன், பவித்ராவிடம் இதைப்பற்றி ஏதும் நான் பேசிக்கொள்ளவில்லை, அவளுக்கே இது அதரிச்சியாக தான் இருக்கும், ஆனால் பழையநிலைக்கு அவளை என்னால் கொண்டு வரமுடியும் என்று நம்பினேன்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.