பழிக்குப்பழி End 97

கிளம்பினேன், அவன் வீட்டுக்கு போனேன், அங்கே யாரும் இல்லை, காவலாளி மட்டும் தான் இருந்தான், அவனுக்கு கால் செய்ய , ராஜா நான் உங்க வீட்டில் இருக்கிறேன் என்றேன், டாக்டர் மில்லுக்கு வாங்க என்றான், அது எங்கே என்றேன், பொள்ளாச்சி என்றான், ஒஹ் அங்கேயா, அட்ரஸ்ச security கிட்ட வாங்கிகொங்க என்றான், செரி என்றேன், பொள்ளாச்சி வரை போய் இருக்கிறான் என்றால், கண்டிப்பாக ஏதோ ஆபத்து இருக்கிறது என்று புரிந்துகொண்டேன், கிளினிக் சென்றேன், அங்கே போய் மூன்று kerchief முழுக்க chloroform ஊத்திக்கொண்டு, ஒரு polythene பையில் வைத்து கொண்டேன்,

2 மணிநேரத்தில் அங்கே சென்றடைந்தேன், அங்கே போனேன் பெரிய மில், அந்த மில்லை ஒட்டி ஒரு சின்ன வீடு நேராக அங்கே போனேன், ராஜா chairஇல் உட்கார, பவித்ரா அவள் பக்கம் இன்னொரு chair போட்டு உட்கார்ந்திருந்தாள், கூட ஒரே ஒருவன் தான் இருந்தான், கண்டிப்பாக அவன் driverஆக தான் இருக்க வேண்டும், வேறு யாருடனும் சொல்லி இருப்பான் என்று தோன்றவில்லை, நான் உள்ளே போக என்னை பார்த்ததும் பவித்ரா ஓடி வந்து என் கையை கோர்த்து நின்று கொண்டாள், என்னாச்சு என்று அவளை கேக்க, ஒன்னும் பதில் சொல்லவில்லை, நான் என்ன ராஜா இதெல்லாம் என்றேன், அவன் உட்கார்ந்த படியே நீங்க தான் சொல்லணும் என்றான்,

நான் என்ன சொல்றது, என்ன விஷயம்னு first நீங்க சொல்லுங்க என்றேன், செரி நேரா விசயத்துக்கு வர்றேன் முத்து எங்க என்றான், எனக்கு எப்படி தெரியும் என்றேன், வேணாம் டாக்டர் நான் மரியாதை குடுத்துட்டு இருக்கேன் கெடுத்துக்காதீங்க என்றான், அவன் உங்களை பாக்க வந்தது எனக்கு தெரியும், என்று அவன் டிரைவரை பார்க்க, அவன் தலை ஆட்ட, ஒஹ் இவன் தான் சொல்லி இருக்கிறான் என்று புரிந்துகொண்டேன், செரி இனி மறைப்பது ஆகாது என்று முடிவு செய்து, சொல்லலாம் என்றேன்,

அவன் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தான் என்று புதிர் போட என்ன விஷயம் சொல்லுங்க என்று ஆர்வமாக கேட்டான், முத்துக்கும் அவன் மச்சானுக்கும் எய்ட்ஸ் வியாதி என்றேன், அவன் ஷாக்ஆகி கேட்டான், ஆமா night அவன் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வந்து, என்னை காப்பாத்த முடியுமா பாத்து சொல்லுங்க டாக்டர் என்றான், நான் பாத்ததுல அவன் கடைசி கட்டத்தை நெருங்கிட்டான்னு தெருஞ்சிச்சு, இருந்தாலும் ஒரு நம்பிக்கைக்காக அவனை மெட்ராஸ்ல இருக்க ஒரு டாக்டரை போய் பாக்க சொன்னேன், அவன் சனிக்கிழமை அவன் மச்சானை கூட்டிட்டு பாக்கிறதா சொன்னான் என்றேன்.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.