பழிக்குப்பழி End 95

என்னை இறுக்கி அணைத்தபடி நல்லா அசந்து தூங்கி இருந்தாள், நான் அவளை விட்டு மெதுவாக விலகி அவளுக்கு வலிக்காமல் மயக்க ஊசி செலுத்தினேன், கொஞ்ச நேரம் கழித்து விஷ ஊசி செலுத்தினேன், தூக்கத்திலேயே வலியில்லாமல் இறந்து போனாள். கதறி அழுதேன், என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது, அவளும் அப்படித்தான், அவளை மறைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து என் மனைவிக்கு துரோகம் செய்யவும் எனக்கு மனது வரவில்லை, அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,

என் பவித்ராவின் ட்ரெஸ், அவளுடைய பொருட்கள் கடைசியில் அவளையும் எடுத்து அந்த ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்தேன், வீட்டுக்கு வந்தேன், என் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள், அவளுடன் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டேன். பக்கத்து ரூமில் இருக்கும் என் மகளை நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் என் மனைவியிடம் வந்து கட்டி பிடுத்து படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, எப்படியும் பவித்ராவின் உடல் முழுவதும் கரைந்து இருக்கும் என்று தோன்ற அங்கே போனேன், அதே போல இருந்தது, கண்ணீர் ஊத்தியது, என்னால் நிறுத்தவே முடியவில்லை,

அதை குழியில் கொட்டி, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்று ரூமை கிளீன் ஆக சுத்தம் செய்தேன், ரூமை பூட்டி விட்டேன், ஜீப்பை எடுத்து கொண்டு உச்சி மலைக்கு சென்றேன், அப்படியே காரை வேகமாக செலுத்தி மலை மேல் இருந்து காரோடு விழுந்தேன், இன்னும் சற்று நொடியில் நானும் இறந்து விடுவேன். என் மனதில் இருக்கும் எல்லா ஏக்கமும், துக்கமும் என்னோடு செத்துவிடும். நான் accidentஇல் இறந்ததாக தான் நினைப்பார்கள், ஏனென்றால் brake wireஐ லூஸ் செய்து விட்டேன், என் மனைவி மன வலிமையுடைய பெண், கண்டிப்பாக என் மனைவி மகள் வாழ்வார்கள்.

நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும். நான் அவளை கொன்றதுக்காக என்னை நானே பழி வாங்கி கொண்டேன்.

***Revenge is beautiful***

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.