பழிக்குப்பழி End 97

காலை பொழுது விடிந்தது, குளித்து சாப்பிட்டு
முடித்தேன், bore அடித்தது, செரி சும்மா நம் பழைய கிளினிக் போலாம் என்று என் ஜீப்பை எடுத்தேன், அங்கே போனால் எனக்கு அதிர்ச்சி, என் கிளினிக் வாசலில் பவித்ரா உட்கார்ந்து இருந்தாள், ஹே அறிவில்லையா இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றேன்,

அதற்க்குள் அவள் ஹே என்ன என்னய விட்டுட்டு வந்துட்ட என்று எகுறினாள், உனக்கு நான் freedom குடுத்துட்டேன் சந்தோசம் தான என்றேன், அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, பாட்டிட சொல்லிட்டு வந்தியா இல்லையா என்றேன், ஹ்ம்ம் என்றாள், செரி கிளம்பு என்றேன், இரு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்றாள்.

கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு, வெளில இருக்கிறது ok தான் ஆனா என்று இழுத்தாள் என்ன ஆனா என்றேன். ஹ்ம்ம் நான் உன்னை லவ் பன்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நாம இங்கேயே சந்தோசமா இருந்துக்கலாம், நீ என்னை எங்கேயுமே கூட்டிட்டு போக வேணாம், இந்த roomஏ போதும், நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், நான் அது வேணும் இது வேணும்னு எதுமே கேக்க மாட்டேன், நான் உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்வேன், இப்போ கூட பாரு என்னால அங்கே இருக்க முடில, எப்படா விடியும்னு ஓடி வந்துட்டேன், என்னால நீ இல்லாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்றாள்,

நான் ஒரு கணம் சிரித்தேன், இத்தனை நாள் என்கூட இருந்த நாள உனக்கு இப்டி தான் தோணும், பழைய மாதிரி பழகி நார்மல் ஆகிட்டா எல்லா மாறிடும் என்றேன், நான் ஒன்னும் குழந்தை இல்லை என்றாள், இவளோ நாள்ல உன்னை ஒருநாள் கூட தவறா நெனச்சதுஇல்ல, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, கனவுல கூட என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றேன், ஒருவேளை உனக்கு இப்போ கல்யாணம் ஆகலன்னு வெச்சுக்கோ, என்னை பிடுச்சு இருக்கும்ல என்றாள், நான் சிரித்தேன், பதிலை சொல்லு என்றாள், இப்படி ஒரு துரோகத்தை ஒரு பொண்ணுக்கு செஞ்சுட்டு கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டா உன் தப்பெல்லாம் செரி ஆகி, உன்னை நான் விரும்பிடுவேன்ன்னு எப்படி நீ நெனைக்கற என்றேன்,

அழுகையை அடக்கி கொண்டாள், கண்ணெல்லாம் அப்படி சிவந்து போயிருந்தது, நான் என்ன பண்ணா என்மேல உனக்கு கோபம் போகும் என்றாள், நீ என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாதுல, அதுபோல தான் என் கோபத்தையும் என்றேன், கண்ணில் நீர் வந்தது அவளுக்கு, என் மனசை ஒடச்சுட்டல்ல, இதுக்கு நீ என்னை பேசாம கொன்னு இருக்கலாம், தினமும் உன் முகம் பாக்காம உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க போறேன் சொல்லு, எனக்கு வாழ்க்கையிலே யார்ட்டையுமே அன்பு கிடைச்சது இல்ல, என்கிட்ட அன்பா இருந்தியோ இல்லையோன்னு தெரில, ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்ட,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.