த்ரீ ரோசஸ் 5 138

என்னை மேடையில் என் கணவன் விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்த போது.. அங்கு வந்திருந்த அனைவரும் என்னை கை தட்டி விசில் அடித்து வரவேற்றனர்..

எனக்கு பெருமையாக இருந்தது..

ஆனால் நான் என்னுடைய இந்த கல்வி துறை வளர்ச்சியை எப்படி அடைந்தேன் என்பதை ஆரம்ப நிலையில் இருந்து உங்கள் அனைவருடனும் அந்த அரங்கதில் இருந்த அத்தனை பிஸ்னஸ்மேன் பெல்லோசிப்பில் கலந்து கொண்ட அனைவர் முன்பும் சொல்ல போகிறேன்..

ஆரம்ப காலத்தில் நாங்கள் ரொம்பவும் கஷ்டத்தில் இருந்தோம்.. நானும் அப்போது வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்..

அப்போது எங்களுக்கு ஒரே மகன் மட்டும் தான் அவன் 8ம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான்..

என் புருஷன் விஸ்வநாதன் முழுமூச்சாக ஒரு பள்ளி அரக்கட்டளை அமைப்பதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடு பட்டுகொண்டிருந்தார்..

எனக்கு பகுதி நேர வேலையாக கும்பகோணத்தில் வேலை கிடைத்தது..

நடிகர் சிவகுமார் ரெக்கமெண்டேஷனில் தான் நான் அந்த கல்லூரிக்கு கால் அடி எடுத்து வைத்தேன்.. சிவகுமார் நடிக்க வருவதற்கு முன்பு அந்த கல்லூரியில் தான் ஆசிரியராக வேலை செய்திருக்கிறார் என்று சொன்னார்…

வாங்க நாமும் இப்போ கும்பகோணம் போகலாம்..

நான் கல்லூரியை சென்று அடைந்தேன்..

நல்ல பெரிய கல்லூரி.. எனக்கு அதன் தோற்றத்தை பார்த்ததுமே ரொம்ப பிடித்து போயிற்று..

ஆஹா இவ்வளவு பெரிய கல்லூரி நிறுவனத்திலா நமக்கு சிவகுமார் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார் என்று எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது..

பிரின்சிபலை சென்று பார்த்தேன்..

உங்களுக்கு இங்கு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் வேலை.. எப்படி சென்னையில் இருந்து அவ்வபோது வந்து போக முடியுமா அல்லது இங்கேயே தங்கி வேலை செய்கிறீர்களா என்று கேட்க..

நான் வந்தே போறேன் சார்.. என் டைம் டேபிள் மட்டும் சொல்லிடுங்க என்று நான் கேட்க..

அவர் என்னிடம் ஒரு பேப்பரை நீட்டினார்..

நான் அதை எடுத்து படித்தேன்..

மிகவும் சந்தோஷமாக இருந்தது..

வெள்ளி சனி திங்கள் என மூன்று நாட்கள் மட்டும் வேலை.. மற்ற நேரங்களில் நான் சென்னையில் இருக்கலாம்..

ரொம்ப தேங்க்ஸ் சார் என்று என் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில் வாங்கிக் கொண்டு நான் வீட்டிற்கு வந்தேன்..

1 Comment

Comments are closed.