கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 5

“ஒரு முத்தா குடுடீ கண்ணு..!!” கொஞ்சினான் சீனு.

“ப்ச்ச்ச்.. ப்ச்ச்ச்” மென்மையாக இச்சினாள் மீனா.

“ஸ்வீட்ட்டா இருக்குடீயோய்…”

“ம்ம்ம்ம். அப்புறம்..”

“பீச்சுக்கு வர்றியா..?”

“அங்கெல்லாம் நான் வரமாட்டேன்…”

“உன் கிட்ட இம்மீடியட்டா கொஞ்சம் பேசணும்மா…” சீனு கெஞ்சினான்.

“எங்க வீட்டுக்கு வாயேன்… நீ”

“என்ன சொல்றதுன்னே தெரியலை… உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம்… உங்க அம்மா மூஞ்சை நிமிர்ந்து பாக்கவே எனக்கு ஒரு தயக்கமா இருக்கு.. மனசுகுள்ள ஒரு குறுகுறுப்பா ஃபீல் பண்றேன்… உன் வீட்டுக்குள்ள வந்தா… முன்னே மாதிரி உங்கிட்ட சகஜமா பேச முடியலை…”

“ம்ம்ம்… புரியுது சீனு… எனக்கும் அப்படித்தான் இருக்கு… என் படிப்பு முடியற வரைக்கும், எங்க வீட்டுக்கு நாம லவ் பண்றது தெரிய வேணாம்ன்னு பாக்கறேன்.. ஆனா உன்னைப் பாக்காமவும் இருக்க முடியலைப்பா…”

“அம்மா இருக்காங்களா பக்கத்துல…”

“ஹூகூம்… வீட்டிலேயே இல்லே.. ஒரு கல்யாணத்துக்காக அப்பாவும், அம்மாவும், எதிர் விட்டு ராமசாமி அங்கிள் பேமிலியோட வேலூர் போயிருக்காங்க… நாளைக்குத்தான் வருவாங்க…”

“செல்வா ….”

“அவன் ரூம்ல ஏதோ பிக்சர் பாத்துக்கிட்டு இருக்கான்…”

“நீ ட்ரஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு… பத்து நிமிஷத்துல நான் வர்றேன்…”

“வெளியில போறமா…”

“ஆமாம்…”

“செல்வாகிட்ட என்ன சொல்றது..?”

“நான் பாத்துக்கறேன் அதெல்லாம்… நீ ரெடியா இரு…”
மீனா மாடிக் கைப்பிடி சுவற்றின் அருகே பவழமல்லி மர நிழலில், சீனுவுக்காக காத்திருந்தாள். அவளுக்குத் தன் வீட்டிலேயே, முதன் முறையாக அவளும், சீனுவும், ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு, முத்தமிட்டுக்கொண்ட அந்த இடம், அவளுக்கு இப்போது மிகவும் பிரத்யேகமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தினமும் தவறாமல் ஒரு பத்து நிமிடத்தை அங்கு கழிப்பதை தனது வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், அவள்.

மீனா அன்று நீலவண்ண பிரின்டட் புடவையில், அந்த சாரியின் நிறத்துக்கு கான்ட்ராஸ்டான பிளவுசை டைட்டாக போட்டுக்கொண்டிருந்தாள். புடவையின் அகலமான பார்டர், அவள் மெல்லிய உடல்வாகுக்கும், உயரத்துக்கும் ஏற்ற டீசண்டான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

மீனா தன் கழுத்தில் மெலிதான தங்கச்செயின் ஒன்றை அணிந்து, காதில் குட்டித் தோடு ஒன்றை மாட்டி, அதில் ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கியை கோத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்தான் அவள் தன் புருவங்களை நேர்த்தியாக வில் போல் ஒதுக்கியிருந்தாள். புருவங்களுக்கு இடையில் சிறிய நீல நிற பிந்தியை ஒற்றி, மெல்லிய உதடுகளில், அவளுடைய சரும நிறத்தில், உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படியாக இலேசாக லிப்ஸ்டிக் பூசியிருந்தாள். இருகைகளையும் மெல்லிய கண்ணாடி வளையல்கள், அலங்கரித்துக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *