கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 5

அவளுடைய விரல்கள் என் விரல்களை அழுத்தியதில், தன் மனசுல இருக்கற அமைதியை, என் மனசுக்கு மெல்ல மெல்ல அனுப்பிட்டாளா? இது வரைக்கும் உணர்ந்தேயறியாத முழு அமைதியை நான் அனுபவிச்சேனே? இப்பவும் அந்த அமைதி என் மனசுல தேங்கி நிக்குதே!

என்னை அவ தொட்டதும் எனக்குள்ள வந்த இந்த மாற்றங்கள், என் ஒடம்புல ஓடற ரத்தத்துல, என் பரம்பரையின் ஒரு துளி… ஒரே ஒரு துளி, சுகன்யாவோட ஒடம்புலேயும் ஓடுதே… அதனால இருக்குமா..?

ஒரே மரத்தின் இரு வேறு கிளைகளில் நாங்கள் பூத்து குலுங்கி மணம் வீசிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது இடையில் சொந்தம் விட்டுப்போனாலும், தேவையான நேரங்களில் மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்ளும் இந்த பங்காளிங்கறங்க குடும்ப உரிமையால இருக்குமா?

சே.. சே… எனக்குள்ள ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றங்கள், மெல்லிய, கண்ணால பார்க்க முடியாத நுண்ணிய உணர்வுகள், ஒரு மனுஷ உடம்புக்குள்ள, ஒரு பிறவியில, கொறைஞ்ச காலத்துக்கு அடைஞ்சு கிடைக்கற உணர்வுகளா எனக்குத் தெரியலியே?

நீண்ட நெடுங்காலமாக, யுகம் யுகமாக, பிறவி பிறவியாக, என்னை… எங்கள் இருவரையும்… விடாமல் தொடர்ந்து, துரத்தி வர்ற, இன்னும் முழுசா நிறைவேறாத ஆசைகளா, உணர்வுகளா தெரியுதே?

நாங்கள் யார்?

நானும் அவளும்… தொலை தூர அடிவானத்துக்கு கீழே, ஓரே இடத்துல பொறந்து, பொங்கி பொங்கி, திக்கு திசை தெரியாமல் பிரிஞ்சி, எங்கோ ஒரு மலையிலேருந்து அருவியா கொட்டி, கரை கொள்ளாத வெள்ளமா, பள்ளத்துல பாய்ஞ்சி, மேடுகளில் ஏறி, உருவில் இளைத்து, மண்ணில் தவழ்ந்து, மீண்டும் ஓடிக் களைச்சு, ஒண்ணா, ஒரே இடத்துல, கடல்லே மீண்டும் ஒன்று சேர்ந்து, நிதமும், நொடி நேரம் கூட ஓய்வில்லாமல், ஆர்ப்பரிக்கும் அலைகளாய், அலையும், தங்கள் உருவம் தொலைத்த இரு வேறு நதிகளா?

ஒண்ணா சேர்ந்ததுக்கு அப்புறம் ஆறாவது… நதியாவது… எல்லாமே தண்ணீர் தண்ணீர்.. கண்ணுக்கெட்டியவரை தண்ணீர். இரண்டு ஒன்றான பின் ஒன்றுதானே மிஞ்சும்? ஒன்று… ஒன்று… எல்லாமே ஒன்று…!!

ஒரு இளம் பெண், முதல் முறையாக என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்புடன் பேசினாள். நேசத்துடன் என்னைப் பார்த்தாள். என் அருகில் நெருங்கி நின்று தன் உடல் வாசம் என் மேல் வீச, அந்த வாசம் என் நாசியைத் தாக்கியதால், என் மேனியை அவள் பாசத்துடன் தன் கையால் தீண்டியதால், என்னுள் உடனடியாக இந்த உணர்வு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

அவளின் பாசமான தீண்டலால், அவள் கண்களில் மலர்ந்த குறும் சிரிப்பால், நான் அவளுடைய முறை மாப்பிள்ளை என்ற என் உரிமையை, அவள் அடையாளம் கண்டு கொண்டதால், என் மனதுக்கு அந்த வார்த்தைகள் தந்த இதத்தால், என்னுள் இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இந்த மாற்றங்களை உணர்ந்த நான், திகைத்து, மனம் கிறங்கி நிற்கிறேன். அவள் என்னை அடியோடு அரண்டு போக வைத்துவிட்டாள் என மருண்டு போகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *