கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

சுகன்யா… நீ இத்தனை நாளாய் எங்கேயிருந்தாய்? என் இதயத்தின் ஒலி உனக்கு கேட்கிறதா? என் நெஞ்சம் பாடும் பாடல் உனக்கு கேட்கிறதா? உனக்கு கேட்கும் வரை நான் உனக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

“டேய்… டேட்… உனக்கு என்னடா ஆச்சு?” அவன் மனம் சிரித்தது.

“ஐ ஆம் இன் லவ்.” சம்பத்தின் முகத்தில் வெட்கம்.

“சுகன்யா…சுகன்யாங்கறே… அவளையா காதலிக்கறே?”

“யெஸ்…”

“உன் மாமா பொண்ணைத்தானே?”

“யெஸ்”

“அவளுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.. நீ அவளை இன்னைக்குத்தான் லவ் பண்ண ஆரம்பிசிருக்கே… கதை புரியலியே?”

“ஸாரி… நான் நேத்துலேருந்து அவளை லவ் பண்றேன்… கரெக்ட் யூவர்செல்ஃப்…! நான் அவளை நேசிக்கறதுல யாருக்கு என்னப் பிரச்சனை?

“இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகப்போறவளை நீ காதலிக்கறே?

“ஆகத்தானே போறா..? இன்னும் ஆயிடலியே?”

“அப்டீன்னா… அவங்க கல்யாணம் நடக்காதா?”

“எனக்கென்னத் தெரியும்…?”

“டேய்… வெறுப்பேத்தாதே… உன் ப்ளான் என்னடா?”

“சுகன்யாவுக்காக பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்.”

“செல்வாவுக்கு ஆப்பு வெச்சே? உன் ஆப்பு வேலை செய்யாம, அவன் கிட்ட நேத்து மன்னிப்பு கேட்டே? இப்ப திரும்பவும், நீ யாருக்கு ஆப்பு வெக்கப்போறே? சுகன்யாவுக்கா?”

“நான் லவ் பண்றவளுக்கு நானே ஆப்பு வெப்பனா?”

“டேய்… சம்பத்… சுகன்யா செல்வாவை லவ் பண்றா? இன்னைக்கு அவங்களுக்கு எங்கேஜ்மெண்ட்.. கூடிய சீக்கிரம் அவங்களுக்கு கல்யாணம் நடக்கப் போவுது! நீ அவளை லவ் பண்றே.. கேட்டா, இதுல என்னப் பிரச்சனைங்கறே? உனக்குப் பைத்யம் கிய்த்யம் பிடிச்சிடலியே?”

“இல்லே”

“அவ எப்படிடா உன்கிட்ட வருவா? உன் ஆசை எப்படிடா நிறைவேறும்?”

“தெரியலை… இப்ப இதுக்கு எங்கிட்ட பதில் இல்லை… என்னோட உள்ளுணர்வு சொல்லுது… சுகன்யா நிச்சயமா எங்கிட்ட வருவா; அவதான் இந்த ஜென்மத்துல என் மனைவி..!”

“ம்ம்ம்… டேய்ய்ய்.. டேய்ய்ய்… நீ யாருகிட்ட பேசிகிட்டு இருக்கே? நான்தான்டா உன் உணர்வு, நீ சொல்ற உன் உள்ளுணர்வு; என்னடா என்கிட்டயே கிண்டலா? நீ எப்பவாவது மப்புல இருப்பே; இப்ப அதுவும் இல்லே; ஏன்டா உளர்றே?”