கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

“கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா?

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?”

என் மனசு சொல்லுது… சுகன்யா என்னுடையவள். நேற்றும் இன்றும் நாளையும் அவள் என்னவள். அவள் எங்கு போனாலும், யாருடன் தன் கை கோத்து சுற்றி சுற்றி வந்தாலும், கடைசியில் அவள் என்னிடம் வருவாள். அவளே வருவாள். அவள் என்னுடையவள். அவள் வரும்வரை நான் அவளுக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

தேர் எங்கு ஓடினாலும் அது தன் நிலையை அடைந்தே தீரும். நதி எங்கு பாய்ந்தாலும் கடைசியில் சமுத்திரத்தை சேர்ந்தே ஆகவேண்டும்…

கடல் தன்னுள் வந்து சேரும் நதியின் மூலத்தை அறிய ஆசைப்படுவதில்லை. தன்னுள் மூழ்கி தன் அடையாளத்தை இழக்க ஓடிவரும் ஆற்றின் நிறம் என்னவென்று பார்ப்பதில்லை. கடல் தன்னுள் ஐக்கியமாக வேக வேகமாக வரும் ஆற்றுத் தண்ணீரின் சுவையை தெரிந்து கொள்ளத் துடிப்பதில்லை. இத்தனை நாள் நீ எங்கிருந்தாய் என்று விசாரிப்பதுமில்லை.

நதி யார்? கடல் யார்?

உங்கள் இருவரில் யார் யாரைத் தேடுகிறீர்கள்?

யார் யாரிடம் யாசிப்பது?

யார் யாரிடம் சென்று சேரப்போகிறீர்கள்?

சம்பத்தின் உள்ளத்திலிருந்து ஒரு கேள்விக்குப் பின் அடுத்த கேள்வி உரக்க எழுந்தது.

ம்ம்ம்… சம்பத் பதட்டமில்லாமல் யோசித்தான்.

சிலகாலங்களில் சுகன்யா நதியாக இருந்தாள். அந்த நேரங்களில் சம்பத்தாகிய நான் அவள் வந்து சேரும் கடலாக இருந்தேன். இம்முறை நான் நதியாக உருவெடுத்திருக்கிறேன். இங்கும் அங்கும் இலக்கில்லாமல் இதுவரை ஓடி களைத்திருக்கிறேன். சுகன்யா என்னை அரவணைக்கப் போகும் விசாலமான கடலாக இருக்கிறாள்.

சம்பத்தின் மனமே கேள்விகளுக்குப் பதிலையும் சொல்லியது.

நல்லது. செல்வா என்கிற தமிழ்செல்வன் யார்?

கடலின் கம்பீரமான அழகில் ஈர்க்கப்பட்டு அதில் கட்டுமரமாய் சிறிது நேரம் மிதப்பவர்களில் தமிழ்செல்வனும் ஒருவனாக இருக்கலாம். கட்டுமரம் கடைசிவரை கடலில் மிதப்பதில்லை.

கடல் அமைதியாக இருக்கும் போது, அழகாக தன் நிறத்தைக் காட்டி கண் சிமிட்டும் போது, சூரியன் ஒளியில் தங்கமாக மின்னும் போது, கட்டுமரம் கடலை தான் அடிமைப்படுத்தியிருப்பது போல் நினைத்து உப்பு நீரில் நடனமாடுகிறது.

கடலில் புயல் தோன்றும் போது, கடல் சற்றே தன் பொறுமையை இழக்கும் போது, கட்டு மரம் சிதறி உருக்குலைந்து விடும். அந்த நேரங்களில் கடல் கட்டுமரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கடலில் மிதக்கும் கட்டுமரத்தை என்னைப் போன்ற நதி எப்போதும் வெறுப்பதில்லை. விரும்புவதுமில்லை. நதிக்கு நாணலும் ஒன்றே. பாய்விரித்து சீறிப் பாயும் படகும் ஒன்றே. நான் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் ஓட்டம் வழியில் பல இடைஞ்சல்களை சந்திக்கும். நதி பொறுமையுடன் ஓடுகிறது.

நதி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. நதி, தான் தோன்றும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். நதி ஓடும் திசை மாறலாம். சில நேரங்களில், அதிக வெப்பத்தால், நதி வற்றியும் போகலாம். வற்றினால், நிச்சயமாக அது மழையாக மாறி, வெள்ளமாக ஓடி மீண்டும் தன் பாதையை நிர்ணயித்துக் கொள்ளும்.

ஓடும் பாதையில் எதிர்படும் அசுத்தங்களால் நதியும் நாற்றமடிக்கலாம். நதி அழுக்கானாலும் தன் புனிதத்தை எப்போதும் இழப்பதில்லை. தன் வேகத்தை இழப்பதில்லை. நிறம் மாறலாம். சுவை மாறலாம். லட்சியம் மாறுவதில்லை.