கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 5

“தாய் நீ எட்டடி பாய்ஞ்சே அன்னைக்கு; குட்டி பதினாறு அடி பாயுது இன்னைக்கு … வித்தியாசம் அவ்வளவுதான் .”

நடராஜன் தன் மார்பில் கிடந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை கவ்விக்கொண்டார். மல்லிகா தன் மனதுக்குள் பரவசத்துடன், உடல் தளர்ந்து, அவர் உதட்டின் அழுத்தத்தை, அந்த ஈர உதடுகள், அவள் உடலில் உண்டாக்கிய சுகத்தில், தன் கண் மூடிக்கிடந்தாள்.

சுந்தரியும், சுகன்யாவும், கும்பகோணம் வந்து சேர்ந்தாகிவிட்டது. வீட்டை ஒழித்து சுத்தம் பண்ணுவதிலேயே முதல் நாள் கழிந்தது. சுகன்யாவும் அன்று அதிசயமாக, முணுமுணுக்காமல் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்த போதிலும் சுகன்யாவின் உள்ளம் அந்த வேலையில் முழுமையாக நிலைக்கவில்லை.

“சுகா … நல்லா குனிஞ்சு, உடம்பை வளைச்சு, தொடப்பத்தை கெட்டியா புடிச்சு குப்பையைத் தள்ளும்மா – என்னமோ சாமரம் வீசறவ மாதிரியில்லே நிமிந்து நின்னுக்கிட்டு வீசறே? பெத்தவ ஒண்ணும் சொல்லிக்குடுக்கலைன்னு போற எடத்துல யாருகிட்டேயும் பேச்சு வாங்காதே?” சுந்தரி மகளுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தாள்.

செல்வா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பானா? தன் செல் எப்போது ஒலிக்கும்? சுகன்யாவின் மனமும், கண்களும், காதுகளும், அவன் அழைப்பை எதிர்பார்த்து தன் மொபைலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. அவள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒரு அழைப்பு மட்டும் வராமல், உள்ளத்தின் ஒரு மூலையில், செல்வாவுக்கு எதிராக சிறு சிறு எரிச்சல் குமிழிகள் எழுந்து அங்கேயே வெடித்துக் கொண்டிருந்தன. அந்த எரிச்சல், அலையாக மாறி இன்னும் அவள் மனதின் மேற்பரப்புக்கு வரவில்லை.

மாறாக சுந்தரியின் செல் விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. குமாரசுவாமி வெள்ளிக்கிழமை இரவு அவர்களை ரயில் ஏற்றிய பின், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தன் மனைவிக்கு போன் செய்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சுந்தரியும் ஓடி ஓடி செல்லில், தன் முகம் மலர, சிரித்து சிரித்து தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தது, சுகன்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது..

என்னை செல்வாகூட பேச வேணாம்ன்னு சொல்லிட்டு, இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல அப்படி விடாம பேசிக்கறதுக்கு என்ன விஷயம் இருக்கும்? என்னமோ இப்பத்தான் புதுசா காதலிக்க ஆரம்பிச்ச லவ்வர்ஸ் மாதிரி
“குசுகுசு”ன்னு பேசிக்கிறாங்க? என்னை லவ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு திரியற செல்வாவுக்கு அஞ்சாறு நாளா எங்கிட்ட பேசறதுக்கு கூட நேரமில்லே! இதைப் பத்தி யாருக்காவது கவலையிருக்கா? நான் இதுக்கெல்லாம் யாரை நொந்துக்கறது?

“என்னடி சுகா .. மலைச்சுப் போய் நிக்கறே?” சுந்தரி அப்போதுதான் குமாரிடம் பேசி முடித்திருந்தாள்.
“ஏம்மா… அப்பாவுக்கு ஆஃபிசுல வேற வேலையே கிடையாதா? நிமிஷத்துக்கு நாலு போன் பண்றாரு? பேச வேண்டியதை ஒரே தரத்துல பேசி முடிக்க வேண்டியதுதானே?” பொறுத்துப் பொறுத்து பார்த்து, பொறுமை இழந்த சுகன்யா தன் தாயிடம் வெடித்தாள்.

“நல்லாருக்குடி; நீ பேசறது; என் புருஷன் என் கிட்ட பேசினா, நீ ஏண்டி கடுப்பாவறே? என் புருஷன் ஒரு பெரிய கம்பெனிக்கு மேனேஜர்டி. மத்தவங்களை வேலை வாங்கறதுதான் அவன் வேலை; ஞாபகமிருக்கட்டும்.” பதிலுக்கு பொருமிய சுந்தரியின் குரலில் பிரபல கம்பெனியின் பிராஞ்ச் மேனேஜர் பொண்டாட்டிக்குரிய கர்வமிருந்தது.

“எனக்கு என்னம்மா கடுப்பு? வீட்டை சுத்தம் செய்துகிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க உன் வீட்டுக்காரர் உனக்கு போன் பண்றாரு. நீயும், பத்து நிமிஷம் ஹீ…ஹீ…ஹீ ன்னு இளிச்சிக்கிட்டு நான் பெருக்கற எடத்துல வந்து நிக்கறே. நான் கையில தொடப்பத்தை வெச்சிக்கிட்டு ஒரு மூலையில நிக்கறேன். எடுத்த வேலை முடியமாட்டேங்குது. இப்ப நான் பெருக்கணுமா? வேணாமா?” சுகன்யா தன் தோளில் முகத்தை இடித்துக்கொண்டாள்.

இவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படி சிடுசிடுக்கறா?

சுந்தரி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனாள். சுகன்யா கலங்கிய கண்களுடன் நிற்பதைக் கண்டதும் பெற்ற மனம் சற்று பதட்டமடைந்தது. ட்ரெயின்லேருந்து இறங்கினவுடனே, காலையில ஹோட்டல்ல ரெண்டு இட்லி சாப்பிட்டதுதான், இப்ப இவளுக்குப் பசி வந்துடுச்சா? அதான் கோபப்படறாளா? தன் பதைப்பை முகத்தில் காட்டாமல் சுகன்யாவின் முகத்தை தன்புறம் திருப்பினாள். சுகன்யாவின் மூக்கு விடைத்துக்கொண்டு அவள் மெல்லிய உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *