கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 10

“என்னடாச் செல்லம் இப்படி பேசறே? உன் கல்யாணத்தை நிச்சயம் பண்ண வேண்டாமா? நீ இங்க எங்கக்கூட இருந்தாத்தானே சௌகரியம்?

“செல்வா வீட்டுல எங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்களா? நிச்சயதார்த்தம் என்னமோ நாளைக்கு காலைலைங்கற மாதிரி நீ பேசறே?”சலித்துக் கொண்டாள் சுகன்யா.

“அடுத்த வாரம் உங்க அப்பா இங்கே வர்ற சமயத்துல, நடரஜனையும், அவர் குடும்பத்தையும், நம்ம வீட்டுக்கு ஃபார்மலா இன்வைட் பண்ணி உன் மேரேஜ்ஜை எங்கே, எப்படி பண்றதுங்கறதைப் பத்தி முடிவு எடுக்கலாம்னு உன் மாமன் அபிப்பிராயப் படறான்.”

“அவங்களும் சரின்னு சொன்னா, மறு நாளே ஒரு
“முடிவுன்னோ”
“ஒரு ஒப்புத்தாம்பூலமோ நமக்குள்ள மாத்திக்கற மாதிரிதான்” இதைப்பத்தித்தான் இப்ப நானும் உங்கப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம்.”

“அந்த ராணி அத்தை புள்ளை சம்பத்து விவகாரம், அப்புறம் உன் ஃப்ரெண்டு புள்ளை, நெட்டையா, சிவப்பா, கன்னத்துல மச்சம் இருக்கறவன் விவகாரம் எல்லாத்துக்கும் நீ ஒரு புல்ஸ்டாஃப் வெச்சிட்டியா? இல்லையா?”

“ம்ம்ம்… இப்ப நீ ஏன் அதெல்லாம் கேக்கிறே?”

“அம்மா … நீ இப்பவே நல்லாக் கேட்டுக்க; நீ சொன்னாலும் சரி; இல்லை வேற யாரு சொன்னாலும் சரி; என்னால எவன் முன்னாடியும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு, ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டு நிக்க முடியாது. சொல்லிட்டேன் ஆமாம்…”

“ம்ம்ம் … எல்லாத்துக்கும் ஏண்டி நீ சலிச்சிக்கிறே? அப்பா உன் ராணி அத்தைகிட்ட, நீங்க வேற எடம் பாருங்க … அப்படீன்னு பக்குவமா சொல்லிட்டாராம். என் ஃப்ரெண்ட் கிட்ட நான் பேசிக்கிறேன் … நீ இப்ப அந்த விவகாரத்தையெல்லாம் நினைச்சுக்கிட்டு என் கிட்ட எரிச்சல் படாதே.”

“சரி … சரி … எனக்கு பசி உயிர் போவுது … முதல்ல ஒரு ரவை உப்புமாவையாவது கிண்டித் தொலை நீ…” சுகன்யா முனகிக்கொண்டே குளியலறையை நோக்கி நடந்தாள்.

***

“அக்கா, ரகு பேசறேன்”

“சொல்லு ரகு…”

“நாளைக்கு சண்டே ஈவீனிங் வீட்டுக்கு வர்றேன் … ராத்திரி எனக்கும் சேர்த்து சமையல் பண்ணிடுக்கா”

“சரி …

“சுகா எங்கே?”

“இப்பத்தான் குளிக்கப் போனா…”

“ம்ம்ம்… அப்புறம் நான் ஒரு விஷயம் சொல்றேன் … கோவப்படாம கேளு..”

“சொல்லுடா …

“நம்ம மாப்பிள்ளை குமாரு அவரா உங்கிட்ட வந்துட்டார். இப்ப சுகன்யா கல்யாண வேலையை வேற நாம ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்துல போய் உன் மாமனார் மாமியாருக்கு இந்த விஷயத்தை சொன்னா நல்லாயிருக்காது. அவங்களை முன்னே வெச்சுக்கிட்டுத்தான், அவங்க பேத்தி கல்யாணத்தை ஆரம்பிக்கணும். நான் சொல்றது உனக்குப் புரியுதாக்கா?