கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

அம்மா! காமாட்சி! இந்த மாதிரி ஒரு தங்கத்தை எனக்கு நீ கொடுத்திருக்கியே. நான் உனக்கு எப்படிம்மா நன்றி சொல்லுவேன்? செல்வாவுக்கும் இவளுக்கும் சீக்கிரமே கல்யாணம் நடந்து என் குழந்தை நல்லா இருக்கணும்!” சுந்தரி, கொடிமரத்தின் கீழ் மீண்டும் ஒரு முறை விழுந்து நமஸ்காரம் செய்து அம்பாளிடம் மனமுறுக வேண்டிக்கொண்டாள்.

மூவரும், மனதில் பொங்கிய உணர்ச்சிகளுடன், மவுனமாக நடந்தவர்கள், அருகிலேயே இருந்த குமரகோட்டம், ஏகாம்பரநாதர், கோவில்களை வலம் வந்தார்கள். கோவில்களில் தரிசனம் நல்லபடியாக கிட்டிய மன நிறைவுடன், குமாரசுவாமி கோவில் வெளியில் நின்றிருந்த இயலாதவர்களுக்கு, விருப்பத்துடன் தன் கையில் வந்ததை எடுத்துக் கொடுத்தார். காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, வரதராஜ பெருமாளையும் சேவித்தார்கள். செங்கல்பட்டு வழியாக திருக்கழுக்குன்றத்தை அடைந்து, வேதகீரீஸ்வரை சேவித்தப் பின், அங்கிருந்து நேராக மாமல்லபுரத்தை அடைந்து மதிய உணவை முடித்துக்கொண்டார்கள்.

“அப்பா … எதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் எடுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்பா” எனக்கு ட்யர்டா இருக்குப்பா. சுகன்யா முனகினாள்.

“ஆமாங்க. நீங்களும் காலையிலேருந்து டிரைவ் பண்றீங்க. கொஞ்சம் வெய்யில் தாழ்ந்ததும், கடற்கரைக்குப் போகலாம்.” சுந்தரியும் சுகன்யாவுடன் சேர்ந்து பாடினாள்.

“சுந்து, நானும் அதான் நினைச்சேன்.”குமாரும் ஒத்து ஊதினார்.

ஏ.ஸி ரூமில் ரெண்டு மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். ஐந்து மணிக்கு காஃபி வரவழைத்து நிதானமாக ரசித்து குடித்தார்கள். காஃபி குடித்தப் பின்னர், குடைவரைக் கோயில்கள், புலிக்குகை, அருச்சுனன் தபசு, மற்றும் சிற்பங்களை நின்று நிதானமக பார்த்தார்கள். சுகன்யா தன் தந்தையையும், தாயையும், தன் காமிராவில் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக நின்றும் சில ஸ்னாப்கள் எடுத்துக்கொண்டார்கள். கடற்கரை மணலில் மெதுவாக நடந்து சென்று, அலை வந்து மோதும் விளிம்பில் காலை நீட்டி கடலைப் பார்த்தவாறு உட்க்கார்ந்தார்கள்.

குமாருக்கு தன் மனைவி சுந்தரி அன்று அசாத்தியமான கவர்ச்சியுடன் இருப்பதாக தோன்றியது. அவள் விழிகளில் தெறிக்கும் மயக்கும் பார்வையும், அழகாக சிரிக்கும் முகமும், அவரை உண்டு இல்லை என்று ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது. அன்று அவள் பிரமிக்கும் அழகுடன், முழங்கால் உயரத்துக்கு தன் புடவையை சுருட்டித் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு, கடல் நீரில் வெண்மையாக பளிச்சிடும் கால்கள் நனைய, ஒரு சிறு குழந்தையாக மாறி தண்ணீரை வாரி வாரித் சுகன்யாவின் மீது வீச, சுகன்யா திரும்ப சுந்தரியின் மீது கடல் நீரை வாரி அடிக்க, தாயும் பெண்ணும் இந்த உலகையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சுகன்யாவுடன் சின்னஞ்சிறு பெண் போல விளையாடும் தன் மனைவியை அவர் மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். இவளா நேற்றிரவு, வெறி பிடித்தவள் போல் என்னைக் கட்டியணைத்து, என் உயிரை, தன் வாயால், தன் உதடுகளால், என் உதடுகளை முத்தமிட்டு, உறிஞ்சி, எடுத்தது? இந்த மெல்லிய உடலுக்குள் அத்தனை வலு எங்கிருந்து வந்தது?

மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது.