கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

“என்னங்க … ஆச்சு”

“ஒண்ணுமில்லே … நீ அப்படியே என் தோள்ல சாய்ஞ்சுக்கோடிச் செல்லம் … ரோடு நடுவுல ரிப்பேர் வொர்க் நடக்குது போல இருக்கு … சின்ன ரோடு டைவர்ஷன் …
“ குமார் தன் மனைவியின் தொடையை வருடினார். சுந்தரி அவரை போலியாக முறைத்து அவர் கையை விலக்கினாள். பின் சீட்டில் சுகன்யா இருக்கிறாள் என கண்களால் சைகை செய்தாள்.

சுந்தரி அணிந்திருந்த செண்டின் நறுமணம், அவள் கூந்தலில் செருகியிருந்த மல்லி சரத்திலிருந்து கிளம்பிய சுகந்தம், தன் மனைவியின் பிரத்யேக உடல் வாசனை, இரவு முழுவதும் அவளிடம் பெற்ற அளவில்லாத தேக சுகம், என குமாரசுவாமியின் மனமும் மகிழ்ச்சியில் பொங்க,
“உன்னை நான் பார்த்தது வென்னிலா வேளையில்” என அவருக்குப் பிடித்த பழைய பாடலை சீட்டியடித்துக்கொண்டே, அவர் காரை காஞ்சிபுரத்தை நோக்கி விரட்டிக்கொண்டிருந்தார்.

“சே … சே … வர வர என மனசுக்கு ஒரு கட்டுப்பாடுங்கறதே இல்லாமப் போச்சு… கோவிலுக்கு போற நேரத்துல … இந்த மனசு எப்படியெல்லாம் என்னைப் படுத்தி எடுக்குது … ராத்திரி நடந்தது, நடந்து முடிஞ்சது … ஆனா அந்த முடிஞ்சு போன கதையை திரும்பி திரும்பி இந்த மனசு நெனைச்சு நெனைச்சு ரீவைண்ட் பண்ணிப் பாக்குது…? ராத்திரி இந்த உடம்பு அனுபவிச்ச சுகத்தை விட அதை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு அசை போட்டு பாக்கும் போது அந்த சுகத்தோட இனிமை இன்னும் கூடுதலா இருக்கே? சுந்தரி தன் மனதை நொந்து கொண்டாள்.

மீண்டும் அவள் உடல் மெல்ல மெல்ல தன் கணவனை நோக்கி நகர்ந்தது. அவளையுமறியாமல் அவள் தலை குமாரின் தோளில் சென்று அமர்ந்தது. குமார் வண்டியை ஓட்டியவாறே அவள் உச்சந்தலையை மென்மையாக முத்தமிட்டார்.
காலை ஏழு மணிக்குள் காஞ்சிபுரத்தை அடைந்து, கோவிலில் அதிகமாக கூட்டம் இல்லாததால், காமாட்சி அம்மனை நிதானமாக, மனசார தரிசனம் செய்தார்கள். வெளியில் வந்து கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்து, ஒரு ஓரமாக உட்க்கார்ந்திருந்தவர்களின், முகத்தில் சாந்தமும், மனதில் அமைதியும் நிலவிக் கொண்டிருந்தது.