கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 12

“அம்மா, அம்பாள் கிட்ட நீ என்ன வேண்டிக்கிட்டேம்மா?” சுகன்யா தன் தாயின் தோளில் தலையை சாய்த்துக்கொண்டாள்.

“எனக்கென்ன வேணும்மா? நீயும், உன் அப்பாவும் நல்லாயிருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேம்மா.”

“அவ்வளதானா ….” அவள் இழுத்தாள்.

“ம்ம்ம் … சுகா, நீ கண்ணெல்லாம் மூடிக்கிட்டு மெய்மறந்து நின்னுக்கிட்டிருந்தியே நீ … அம்மன் கிட்ட உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டேம்மா?” குமாரசுவாமி முறுவலித்தார்.

“…..”

சுகன்யா பதிலேதும் சொல்லாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து மையமாக சிரித்தாள்.

“ஏண்டா கண்ணு! அப்பாக்கிட்ட சொல்லக்கூடாதா? எதாவது ரகசிய வேண்டுதலா?” அவர் விடவில்லை.

“அப்படியெல்லாம் இல்லப்பா.” சுந்தரியும் ஆர்வத்துடன் தன் பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பின்னே?” அவர் தன் பெண்ணின் சிவந்த மெல்லிய விரல்களில் தன் விரல்களை கோத்துக்கொண்டார். அவள் அணிந்திருந்த ரோஸ் நிற நெயில் பாலீஷ் இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

“என்னடி சுகா, சொல்லேண்டி … ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே? அப்படி என்னத்தான் நீ வேண்டிக்கிட்டே? எங்களுக்கும் தான் தெரியட்டுமே? சுந்தரியும் அவளை கிண்டினாள்.

“செல்வாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு வேண்டிகிட்டிருப்பா …
“குமார் அவளை சீண்டினார்.

“போங்கப்பா ..
“அவள் முகம் சற்றே சிவந்தது.

“அம்மா, உன்னையும், அப்பாவையும் பாத்தா; என்னமோ நேத்துத்தான் ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு வந்த புது தம்பதிகள் மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பாத்து பாத்து வெட்கப்பட்டுக்கிறீங்க! ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிறீங்க; ஒருத்தரை ஒருத்தர் நெருங்கி இடிச்சிக்கிட்டே நடக்கறீங்க; நான் உங்க கூட இருககறதையே மறந்துட்டீங்க; உங்க ரெண்டு பேரையும் பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்ம்மா. என் அப்பாவும், அம்மாவும் இன்னைக்கு மாதிரியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு அம்பாள் கிட்ட வேண்டிக்கிட்டேம்மா.”

பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் குரல் இலேசாக கம்மி, கண்கள் கலங்கியது. சுந்தரி தன் தோளில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணை தன்னுடன் பாசத்துடன் இறுக்கிக்கொண்டாள். சட்டென திரும்பி சுகன்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *