கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 7

வேணியுடன் தன் அரட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுகன்யா, இதழ்களில் புன்னகையுடன் கண்ணாடி முன் நிற்கும் தன் தாயை கூர்ந்து நோக்கினாள். அவள் கையில் வேணி கொடுத்தனுப்பியிருந்த சூடான அவியல் நிறைந்த கிண்ணம் இருந்தது.

“என்னடி சுகா? அம்மாவை … அப்படி உத்துப் பாக்குற … எனக்கு வெக்கமா இருக்குடி?”

“ம்ம்ம்… டீச்சர் மேடம் !! என்னாச்சு உங்களுக்கு … பாத்து பாத்து … வீட்டுக்காரருக்காக ஸ்பெஷலா டிரஸ்ஸிங் அண்ட் வெயிட்டிங்கா?!

“ஏய் … உன் வாய் மேலேயே போடப் போறேன் இப்ப” போலியான கோபத்துடன் தன் பெண்ணை முறைத்தாள் சுந்தரி.

“அம்மா, இன்னைக்கு நீ இந்த நீலக் கலர் புடவையிலே ரொம்ப அழகா இருக்கேம்மா…!
“ ராத்திரி சாப்பிடறதுக்கு சமையல் கிமையல் பண்ணியா இல்லையா? எனக்கு பசிக்குது. சுகன்யா தன் குரலில் குறும்பு கொப்பளிக்க தாயின் தோளில் தன் கையை போட்டுக் கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

“தேங்க்ஸ்டிச் செல்லம். சுகா! இந்த புடவை உன்னுதுதாம்மா. உன் அப்பாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும். எப்ப வாங்கினே இதை? என் கிட்ட காமிக்கவே இல்லை; புதுசா இந்த புடவை உன் அலமாரியிலே இருந்தது. நீ வேணியைப் பாக்க கீழே போயிருந்தே; சாரிடி கண்ணு; இந்த புடவையை பாத்ததும் ஆசையா இருந்தது; உன்னைக் கேக்காம எடுத்துக் கட்டிக்கிட்டேண்டி.”

தன் மகளிடம் மன்னிப்பு கேட்கும் குரலில் சுந்தரி பேசினாள். தன் மகள் சுகன்யாவின் பார்வையில் இருந்த குறும்பும் , அவள் குரலில் தெறித்த கிண்டலும் சுந்தரியின் உடலைச் சிலிர்க்க வைத்தன.

“என்னம்மா பேசறே நீ? எங்கிட்ட எதுக்கு நீ கேக்கணும்? உன்னை மனசுல நெனைச்சுக்கிட்டுத்தான் போன மாசம் எக்ஸிபிஷன்ல வாங்கினேன்; அலமாரியிலே உள்ள போட்டேனா; மறந்தே போச்சு. நானே உன்னை கேக்கணும்ன்னு நினைச்சேன்; நாளைக்கு காஞ்சீபுரம் போவணுமே, என்னப் பண்ணப் போறேன்னு? அதுக்குள்ள நீயே இதை எடுத்துக் கட்டிக்கிட்டே?” பேசிக்கொண்டே, தன் அலமாரியை திறந்து
“பீயூர் பாய்ஸன்” னில் ஒரு துளியை தன் விரல் நுனியில் எடுத்து, தன் தாயின் பின் கழுத்தில் பூசினாள்.

“என்னத்தை என் கழுத்துல தடவறேடி? இதெல்லாம் எனக்கு எதுக்குடி செல்லம்? சின்னப் பசங்க நீங்கள்ளாம் போட்டுக்கலாம். நான் என்ன சின்னப் பொண்ணா வாசனை அடிச்சிக்கிட்டு மினுக்கறதுக்கு?

“எம்மா … நீ சும்மா இரும்ம்மா … நீ இன்னைக்கு சின்னப் பொண்ணுதான் ..” அவள் விஷமத்தனமாக சிரித்து தன் தாயின் முதுகில் குத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *