கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

சுகன்யா, தன் உதடுகளிரண்டும் இலேசாக பிரிந்திருக்க, அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகில் கட்டிலில் படுத்திருந்த சுந்தரிக்கு உறக்கம் வரவில்லை. மதிய நேரத்தில் தூங்கும் வழக்கம் அவளுக்கு எப்போதுமிருந்ததில்லை. இன்று சிறிது நேரம் சாப்பிட்டவுடன் கண்ணயர்ந்து விட்டிருந்தாள். அதன் பலன் இப்போது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியதாயிருந்தது. படுத்தபடியே கண்ணை மூடித் தன் அலையும் மனதை புருவ மத்தியில் நிற்க வைக்க முயன்றாள். எவ்வளவு முயன்றும் அவள் மனம், தாயின் இடுப்பில் கையையும் காலையையும் உதைத்துக்கொண்டு துள்ளும் குழந்தையைப் போல், இங்குமங்கும் நழுவி நழுவி அலை பாய்ந்தது. புரண்டு புரண்டு படுத்த போதிலும் உடல் களைத்து தூக்கம் வந்தபாடில்லை. சுகன்யா விழித்துக்கொள்ளப்போகிறாளே என்று ஒசையெழுப்பாமல் கட்டிலைவிட்டு இறங்கி, பிரிஜ்ஜிலிருந்து ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்று தெருவைப் பார்த்தாள். எதிரிலிருந்து சிறிய பார்க்கின் இரும்பு கதவில் சாய்ந்தவாறு ஒரு கையில் மூங்கில் கழியும் மறு கையில் புகையும் சிகரெட்டுமாக கூர்க்கா வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தெரு நாயொன்று தன் வாலை ஆட்டியவாறு அவன் காலருகில் நின்று கொண்டிருந்தது. ஒன்றிரண்டு வீடுகளிலிருந்து வரும் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர தெருவே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. நீல வானம் கருத்து தன் நிறமிழந்திருந்தது. தூரத்தில் மின்னல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டிருக்க, நல்ல மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இருளில் நின்றுகொண்டிருந்த சுந்தரி, நிதானமாக குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறையும் வரை உள்ளிழுத்து, இழுத்தக் காற்றினை மார்பிலேயே சிறிது நேரம் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெல்ல மெல்ல மூச்சை வெளியேற்ற உடலும் மனசும் சிறிது தளர்ந்தது. சுந்தரி, தீடிரென வலுவான இருகரங்கள், யாரோ அவள் முதுகின் பின் நின்று, அவளை இறுக்கியணைத்து, அவள் மார்புகளை அழுத்தமாக வருடி, அவள் புறங்கழுத்தில் முத்தமிட்டது போல் உணர்ந்தாள். ஒரு நொடியில் ஓர் ஆணின் தொடலை, ஆண் கரங்களின் வலுவை, ஆண் தேகத்துக்கே உரிய பிரத்யேக வாசத்தை, மூர்க்கமான நெடியை, தன் உடல் புல்லரிக்கச் சுகித்தாள். . தலைமுடி முதல், கால் நகம் வரை அவள் மேனி மெல்ல நடுங்கியது. நடுங்கிய ஒரு கையை மறு கையால் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஒரு காலை இன்னொரு காலால் மிதித்தாள். அந்த முடியடர்ந்த கைகளின் தொடல், அந்தக் கைகளின் மெல்லிய உறுதியான விரல்கள் மார்பில் தந்த அழுத்தம், பலம் பொருந்திய அந்த கைகள் தன்னை தழுவிய வேகம், திடமான மேனியின் வேட்கையான உரசல், உரம் வாய்ந்த தேகத்தின் வாசனை, அந்த ஆண்மையின் மிடுக்கு, அவளுக்கு பரிச்சயமான ஒரு ஆண் மகனுடையதாக இருந்ததை அவள் மனம் உணர, அவள் பதறிப்போனாள்.
“யார் என்னை தழுவியது? இந்த உடல் வாசனை எனக்கு புதிதல்லவே? இந்த வாசனை என் புருஷனுக்கு சொந்தமாச்சே? குமாரா அது ….
“குமரு” நான் ஆசையா நேசிச்ச குமரு … ஓ மை காட் … அடப் பாவி நீ தானா அது? நீ தான் இப்ப வந்து என்னை அணைச்சியா? ஏண்டா என்னை ரெண்டு நாளா இப்படி ஹிம்சை பண்றே? கொல்லாம கொல்றியேடா பாவி? உன்னை நான் மறந்து எத்தனையோ வருஷமாச்சேடா? நீ எனக்கு பண்ணதெல்லாம் போதாதா? நீ வேண்டாம்ன்னுதானே உன்னை உதறிட்டு நிம்மதியா இருந்தேன்? இப்ப ஏண்டா என் எண்ணங்கள்ல்ல; மனசுல நினைவுகளாக என்னை ஆக்கிரமிச்சி, இரக்கமில்லாம கொல்றே? இப்ப நீ எங்கடா இருக்கே? உன் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரு தரம் வந்துட்டு போடா…

“என்னை விட்டுப் போன என் கணவன் குமார் இப்போது இங்கு எங்கு வந்தான்? ஒரு வினாடி அவன் என் பின்னால் நின்று என்னை கட்டிபுடிச்ச மாதிரி இருந்துதே? அது உண்மையில்லையா? என் மார்புகள்ல்ல அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் இன்னும் பாக்கியிருக்குதே? என் கழுத்துல அவன் கொடுத்த முத்தம் இன்னும் என்னை சிலுக்க வெக்குதே? என் நினைவுகள்ல்ல, என் எண்ணங்கள்ல்ல வந்து அவன் என்னை இறுக்கி அணைச்சது, நிஜமாவே இப்ப நனவுல நடந்ததைப் போல இருக்குதே?” சுந்தரி தன் உள்ளம் திடுக்கிட, அவள் உடல் தள்ளாட, அவள் வாயிலிருந்து ஓசையுடன், நீண்டப் பெருமூச்சு ஒன்று வெளி வர, கழிவிரக்கத்துடன் தன் இயலாமையை நினைத்து, கண்கள் கலங்க, நிற்பதற்கு கால்களில் வலுவின்றி, முழுங்காலுக்கு கீழ் துணியாக உடல் தொய்ந்து போக, அப்படியே சுவரில் சாய்ந்து, இரு கால்களையும் தரையில் நீட்டி உட்க்கார்ந்து கொண்டாள். அவள் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. மனசு காட்டிய ஒரு நொடி வேடிக்கையிலிருந்து அவளால் அவ்வளவு சுலபமாக விடுபடமுடியவில்லை. அவள் மனம் பின்னோக்கிப் பறந்தது.

Updated: March 28, 2021 — 9:30 am